எத்தனையோ தேசங்களில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் ரஷ்யாவில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு ஈடாக இன்னொன்றைச் சொல்லமுடியாது. சரித்திரம் காணாத மகத்தான ஆட்சி மாற்றம் அது.
லெனினின் வருகைக்கு முன்புவரை ரஷ்யாவில் ஜார் அரசர் வைத்ததுதான் சட்டம்.
முதலாளிகள் தொழிலாளர்களை அடிமைப் படுத்தி வேலை வாங்கிவந்தார்கள். எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர் அல்லது அடித்துக் கொல்லப்பட்டனர்.
லெனின் ஏழை தொழிலாளர்களை, விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் படையை உருவாக்கினார். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே லெனினின் கனவு சாத்தியமானது. லெனின் தலைமையில் புதிய சோவியத் ரஷ்யா உதயமானது.
நூலை லெனினின் பிறந்ததிலிருந்து ஆரம்பித்து காலக்கிரமமாக வாழ்க்கை வரலாற்றைச் சொல்லியிருக்கலாம். ஆனால் மருதனோ அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டதிலிருந்து ஆரம்பித்து அலெக்சாண்டரின் தூக்கு,நரோத்னயா வோல்யா,லெனின் குடும்பம் ஸிம்பர்ஸ்க் நகரை விட்டு வெளியேறியமை என கால ஒழுங்கில் முதலில் நடந்த விடயங்களைப் பின்னாலும் பின்பு நடந்தவற்றை முன்னாலும் எழுதி குழப்பியடிக்கிறார்.முதல் மூன்று அத்தியாயங்களும் வாசித்து முடித்த பின்னர் சம்பவங்களை அவை நடைபெற்ற காலப்பகுதிகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்திப் பார்க்க முயன்றேன்.தலை லேசாக ஒருமுறை சுற்றியது.அடுத்துவரும் அத்தியாயங்களும் அவ்வளவு சிறப்பான முறையில் எழுதப்பட்டிருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றியது.லெனினின் வரலாற்றை அறிய விரும்புவோர் வேறு புத்தகங்களைத் தெரிவு செய்வது உகந்தது.
தோழர் லெனின் பற்றிய ஆரம்பகட்ட புரிதலுக்கு ஏற்ற ஒரு நூலாக மருதன் இதனை படைத்து இருக்கிறார்... லெனின் பெயர் காரணம்,புரட்சியின் வித்து, லெனினின் ஆளுமை போன்றவற்றை இந்நூலின் மூலமாக அறியலாம்...