'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கல் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இருக்கிக்கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் 'கிடை'தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகரம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதில் அவர் காட்டியுள்ள நுட்பம் அலாதியானது. -எம். ஏ. நுஃமான்
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.
Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.
கிடை நாவல் வாசிப்பின் மூலம் கி.ரா ஒரு ஆக சிறந்த கதை சொல்லி என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. 60 பக்கம் கொண்ட குறுநாவலில் கிடை பற்றியும் கிராமத்தின் வாழ்வியல் பற்றியும் சமூகத்தின் ஏற்ற தாழ்வு முரன்பாடுகளையும் வெளிக்காட்டி சொல்லியிருப்பது ஆச்சரியம்! ⠀ ராக்கம்மாள் என்ற பெண் கிடை மேய்ச்சலை மறித்து ஊரின் முன் தன் பருத்தி காடு அழிவு பற்றி முறையிடுகிறால் ஊர் கூடி பருத்தி காடு அழிவுக்கு காரணமான நபரை கண்டுபிடிக்க திம்மயநாய்க்கர் தலைமையில் குழு அமைக்கிறது. பருத்தி காடு அழிவுக்கு காரணமான⠀ நபரை கண்டுபிடிப்பது தான் கதை என்று வாசிக்க தொடங்கினால் நமக்கு ஏமாற்றமே. ⠀⠀ எல்லப்பன் செவனியின் காதலை பற்றியதை கதை இவர்களின் காதலை அறிந்த ஊர் பெரியவர்கள் எவ்வாறு அந்த காதலை முறித்தனர் குற்றத்தை செய்த இருவருள் ஒருவருக்கு கல்யாணம் எனும் விருந்தும் மற்றொருவருக்கு சாட்டையடி எனும் தண்டனை கிடைக்க பெறுவது நம் சமூகத்தின் ஏற்ற தாழ்வு படிநிலையில் உள்ள முரன்பாடுகளை வெளிக்காட்டி கதை முடிகிறது. காட்டாயம் வாசிக்க வேண்டிய படைப்பு கிடை.
Link to my Blog Ki Ra's short story 'kidai' is a 64 pages long good read and has lots of details about the goats and people who own or take care of them. (Kidai is 63Rs for Kindle Version and 73Rs for Paperback) Kidai was later made into a Tamil film titled Oruththi. It was screened at the International Film Festival of India.
Few words about the book from an Artice in Hindu: Kidai, his short story, revolving around the lives of goats. The way he says it transports the listener instantly to that space and time. “When the herd goes for grazing in the forest, the entire community is with them. It is a separate universe filled with its own norms, belief systems and rituals. The thalaivan of the herd has to stay up the whole night without batting an eyelid, to look after the goats,”
About Author Ki. Rajanarayanan is popularly known as Ki. Ra., is a Tamil folklorist. Like R.K Narayanan Malgudi Days, Ki.Ra has created many fictional villages in his stories.
Quotes From The Book “கிடை என்பது ஒரு தனி ராஜ்யம் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவன் உண்டு. அந்த தலைமை ஸ்தானாதிபதியின் பெயர்தான் ‘கீதாரி’ என்பது. கிடைக்கு என்று ஏற்பட்ட பூர்வீக வழிவந்த சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை யாருமே கொஞ்சம் கூட மீறக்கூடாது. ஆட்டுக்குட்டிகளின் கூடுகளை வரிசைப்படுத்தி வைப்பதற்குக்கூட ஒரு முறை உண்டு. அதற்கு ‘வட்டம்”
“செம்மறி ஆடுகளைச் சாதாரணமாக வெளியார்கள் யாரும் பார்க்கும்போது, பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் தெரியும். ஆனால், அவைகளின் கணக்கற்ற நிறமாற்றங் களுக்குத் தகுந்தபடி கிடையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் என்று ஒவ்வொரு நிறப்பெயர் உண்டு. அதன் உடம்பில் ஏதாவது ஒரு வச்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வச்சமே அதனுடைய பெயராகிவிடுவதும் உண்டு. நிறப்பெயரைச் சொன்னாலே போதும்; அது இன்ன துண்டத்தைச் சேர்ந்த ஆடு, இன்னாருடையது அது என்று சொல்லிவிடுவார்கள். தப்பிதமாகப் பாங்கு பிரிக்கப்படுவதைக் கண்ட கீதாரி ராமசுப்பா நாயக்கர், தொலைவில் இருந்தவாறே சத்தம் போட்டார்:”
“அவளுடைய பாம்படத்தை விற்றுக் கோவில்பட்டி சந்தையில் நாலு புருவைகளை வாங்கிக்கொண்டு வந்தார். இப்பொழுது அவருக்கு ஒரு மொய் ஆடுகளுக்கு மேலேயே இருக்கிறது! ஒரு மொய் என்பது 21 ஆடுகளைக் கொண்டது. முதல் ஈத்துலேயே அவருக்கு இந்தக் கொச்சைக்கிடா கிடைத்துவிட்டது.”
புத்தகம் : கிடை எழுத்தாளர் : கி.ராஜ நாராயணன் பதிப்பகம் : அன்னம் பக்கங்கள் : 102 நூலங்காடி : பனுவல்
🔆கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா வின் அற்புதமான படைப்புகளுள் இதுவும் ஒன்று. ‘கிடை’ என்னும் இந்தப் புத்தகத்தில் , 2 கதைகளைக் கொண்டது . 🔆கிடை என்னும் கதையில் , ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்பவரின் வாழ்க்கையை அழகாக விவரித்துள்ளார். 🔆அடுத்த கதை , ‘ கரிசல்காட்டில் ஒரி சம்சாரி ‘ தகரவீடு துரைசாமி நாயக்கரைப் பற்றியது . ஊருக்கு கடன் கொடுத்து , வியாபாரம் செய்து வருபவர் . 🔆சில வார்த்தைகள் கடினமாக இருந்தாலும் , இரு கதைகளும் மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
மேலோட்டமாக பார்ப்பதற்கு ஆடுகளையும், அதனை மேய்க்கும் ஆட்களையும் பற்றிய தான கதையாக தெரியலாம். ஆனால் கீழ்ச்சாதிக்கும், மேல் சாதிக்கும் இடையே 'பலிக்கிடா' வாக ஆக்கப்படுவோர்களின் பிரதிபலிப்பே 'கிடை'
This is one of those rarest pieces that prove: 1) A book doesn't need too much theory or too many pages to deliver a complex message about society. 2) A reader does not need theory or too many pages to fall in love with a book/story.
ஓர் கிடை செய்த அழிமானத்தை கருவாகக் கொண்ட கதையாயினும், ஆசிரியர் வெகு அழகாக அக்கிராமத்தின் வாழ்வியலையும், சமூக நீதிகளையும் உள்ளே கோர்த்திருக்கிறார்.
எல்லப்பனுக்கும் செவனிக்கும் சமூகம் தரும் தீவிர வேறுபாடு கதையின் முன்னிலையாக இருந்தாலும், எனக்கு அது வெளிப்படையான (obvious) ஒன்றாகவே தோன்றியது.
கதையின் இதர அம்சங்களே என்னை வெகுவாகக் கவர்ந்தன. கிடையில் நடக்கும் அதிகாலைச் சம்பவங்கள், ஆடுகளைக் கண்டறியும் விதங்கள், (அடேயப்பா! ஆட்டிற்கு எத்தனை பெயர்கள்!), "பாங்கு", "கிடை மறித்திருக்கிறது" என்பதன் முக்கியதுவம், ஊருக்குக் கட்டுப்படும் கிடைக்காரர்கள், உடனுக்குடன் கொடுக்கப்படும் நஷ்ட ஈடு, குறி கேட்டவர்களிடம் பஞ்சாயத்திற்கு முன்னர் கேக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு, இவை அனைத்தும் நகரத்தில் வளர்ந்த எனக்குப் புதிதாகவும், மனதிற்குச் சரியாகவும் பட்டன.
இது போக, ஒரு ஒரு கதாபாத்திரத்தையும் ஆசிரியர் சுவைமிக விவரித்த விதமே மேலும் என்னை ஈர்த்தது! திம்மய நாயக்கரின் துப்பறியும் படலம், அவர் சொல்லும் விஷயங்கள், உண்மை தெரிந்த போதும் கூட்டத்தில் உடைக்காமல் ராமசுப்பா நாயக்கரிடம் தனித்து சொன்ன இங்கிதம், பொன்னுசாமி நாயக்கரும் அவர் மனைவியும் செய்யும் திருட்டு வேலைகள், செய்யாத தவறுக்கு அவருக்குக் கிடைத்த தகுந்த தண்டனை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கரிசல் மன்னனின் படைப்புகளில் இது என் முதல் வாசிப்பு. அவரின் எழுத்து நடையும், சுவாரசியமான கிராமிய விஷயங்களும் அவரின் இதர நூல்களை வாசிக்கத் தூண்டுகின்றன. It is a book that made me feel it could've been longer. Must read.
கரிசல் மன்னன் கி. ராஜநாராயணன் வெறும் 80 பக்கங்களில் ஒரு எளிய கதையை அழகாகச் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் கிராமப்புற ஆடுமாடுகளின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம், அவர்களின் நம்பிக்கைகள், தப்பெண்ணங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் முக்கியம���க ஒரு சம்பவம் ஆணையும் பெண்ணையும் எப்படி பாதிக்கிறது என்பதே இச்சிறுநாவலின் அடிநாதமாக நான் கருதுகிறேன்.
கிடை ஆடுகளின் கதை ஒருபக்கமிருக்க, எல்லப்பனின் கல்யாண ஊர்வலமும், செவனியின் பேயோட்டு வைபவமும் தான் சமூகத்தின் உக்கிரமான முகமாக இருப்பதாய் கிழித்து காட்டி இருக்கிறார் கி.ரா. அவர்களின் பாலினம், சாதி மற்றும் நிதி நிலை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகம் அவர்களை வித்தியாசமாக நடத்துகிறது என்பதை படிக்கும் பொழுது நெஞ்சம் சற்று கனமாகவே இருக்கிறது.
ஆடுகள் மற்றும் அதனை மேய்பவர்களை பற்றி தெளிவாக விளக்கம். ஆடுகள் மேய்பவர்கள்யிடையான காதல், அவர்களின் வாழ்வு, ஜாதியின் வெளிப்பாடு, எல்லப்பன் செவனியின் பிரிவு. திம்மய நாயக்கர் ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை பதம் பார்த்து விடுகிறார்: ஒன்று ராக்கம்மாவுக்கு நஞ்சை அழிவுக்கான நஷ்ட ஈடு, இரண்டு பொன்னுசாமியின் களவுக்கு தண்டனை, மூன்று எல்லப்பன் கல்யாணம். கிதாரி, துண்டங்கள், பாங்கு, அழிம்பு இது போன்ற பல வார்த்தைகள் அதன் அர்த்தங்கள் தெரிந்து கொண்டேன். சுமார் 57 வகையான ஆடுகளை கூப்பிடும் பெயர்கள் அறிந்தேன்.
செவனி - காதல் கதையின் முக்கியமான உணர்வுப்பூர்வமான அங்கம். சாதியங்களால் பிரிக்கப்பட்ட காதல், கிராமிய ஒழுக்க விதிகளால் துடிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் என்ற அவர்களின் கதையில் மறைந்திருக்கும் நம்பிக்கை, பயம், ஏமாற்றம்.
மொத்தத்தில், கிராமிய வாழ்க்கையின் இருண்ட ஓரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த நாவல், மனதில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாதாரணமானதாகத் தோன்றும் கிராமிய இலக்கியத்திற்கே ஒரு முக்கியமான அடையாளமாக இந்தக் கதை திகழ்கிறது.
மீண்டும் கரிசல் காட்டிற்குள் ஒரு பயணம். இம்முறை அங்கிருக்கும் சாதிய கண்ணோட்டத்தை நமக்கு எடுத்துக் கூறுகிறார்.....ஆனால் ஒரு மேல் சாதி பார்வையில் இருந்து
"கிடை", கி.ரா அவர்களின் கரிசல் இலக்கிய படைப்புகளில் ஒன்று. இக்குறுநாவல் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயணிக்கிறது.
ஆடுகளை காவல் காக்கும் முறையும், அதற்கு "கிடை"யில் கடைபிடிக்கப்படும் ஒழுங்கும் விவரிக்கப்படுகின்றன. அந்த "ஒழுங்கு" சமூகத்திலும் கடைபிடிக்கப்படுவதற்கு கிராமிய அமைப்பு சாதிய அடிப்படையில் நிறுவும் விதிகளையும், அவற்றை காப்பதற்கு ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமும் தான் கதையின் கரு.
எல்லப்பன்-செவனி இருவரின் காதல், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வினால் அடையும் முடிவை சமகால கிராமிய பிண்ணனியில் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். அந்த ஏற்றத்தாழ்வு சில சமயம் சாதிய அடிப்படையிலும், சில சமயம் பொருளாதார அடிப்படையிலும் அமைகிறது. முடிவில் எல்லப்பனின் வீட்டில் நடக்கும் படலமும், செவனியின் வீட்டில் நடக்கும் படலமும் சமூக முரணை பிரதிபலிக்கின்றன.
கரிசல் காட்டுக் கதைகளை பதிவு செய்வதில் கி.ரா-வுக்கு நிகரில்லை என்றால் அது மிகையாகாது. அதற்கு முதல் காரணம் அவர் கரிசல் காட்டின் மைந்தன், வாழ்க்கையின் பின்னாளில் புதுச்சேரிக்குப் பயணப் பட்டிருந்தாலும் அவரின் ஆதி கோவில்பட்டி தான்.
இந்த குறுநாவல் மிகக் குறைந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு இறுக அடர்த்தியாக பின்னப்பட்டக் கதை. ஆடுகளையும் அதை மேய்ப்பவர்களைப் பற்றியும் அத்தனை துணுக்குகள்.
ஒரு சாதாரண கதையாய் தொடங்கி, துப்பறியும் கதைக்களமாய் மாற்றி விறுவிறுப்பைத் தந்து, ஒரு கனப்பொழுது காதல் கதை தானோ என்று நினைக்கும் மாத்திரத்தில் அடுத்த இரண்டு பக்கங்களில் சாதிய ஆதிக்கம், பொருளாதார அடிப்படையிலான ஏய்ப்பு, எளியவர்களுக்கெதிரான கூட்டுச் சதி, முறிக்கப் படும் காதல் என அத்தனையயும் முடித்து வைக்கிறார்.
பட்டினம் மாதிரி இல்லை, கிராமப்புறங்கள் வேறு. காதும் காதும் வைத்தற்ப்போல் காரியம் முடிப்பார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இது தான் போலும் அது!!!
கிடை ❤️ • கி.ராஐநாராயணன் இன் குறநாவல்களில் கிடை முக்கியமான ஒன்று. ஆடுகளுடனான அழகிய உலகையும் அம்மக்களின் வாழ்வியலையும் மையமாக கொண்டு கிடை மேய்கிறது. ஆடுகளுக்கு அவர்கள் வைக்கும் வண்ண அடிப்படையிலான பெயர்கள் ஒரு புறம், ஆட்டுப்பாலின் மகத்துவம், ஆடு மேய்ப்பவர்களின் வழக்கங்கள் என அணைத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். • ஆடுகளுடன் தொடங்கிய கதை சமூகத்தின் பக்கமும் திரும்புகிறது. சமூகத்தில் நிலவும் ஆதிக்க சமநிலையின்மையும், சாதி வேற்றுமைகளையும், மூடநம்பிக்கைகளையும் அங்கங்கே கதையுடன் இணைத்து 60 ஏ பங்களில் சிறப்பாக படைத்திருக்கிறார்.
Elements involved in writing this story criticize caste and economical background of society... Descriptive part of this story is almost regional in its context Superb!
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் வாசித்து முடித்த பின் நான் எடுத்த மூன்றாவது புத்தகம் இந்த குறுநாவல்.
கி.ராவின் கதை சொல்லும் பாணி, "மைய கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் வேண்டும் ஒரு கதைக்கு" என்ற எண்ணத்தை இல்லாமல் ஆக்கிவிடுகிறது.
இந்த குறுநாவல் கிராமப்புற சூழலையே ஒரு ���தாபாத்திரமாக சித்தரிக்கிறது. இது கி. ராவின் அழகியல். இவரின் படைப்புகளின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் மண்வாசனை கொண்ட பேச்சு. இதில் உள்ள பேச்சுவழக்கு உரையாடல் , கி.ரா. அவர்கள் நம்மை அந்த கிராமத்திற்கே அழைத்து செல்வதில் எந்த சிக்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அந்த மொழியாடல், நாம் அந்த கிராமத்தில் வாழும் ஒருவர் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது.
சின்னஞ்சிறிய ஒரு குழந்தை கிடை மறித்தாலும் அதனை மதித்து கிடை வெளியேறாது என்று சொல்லும் இடத்தில் கிராமப்புற வாழ்க்கையின் அழகியலை சிலாகிக்க வைக்கிற��ர்.
"அதிகார இயக்கவியல்", இந்த நுட்பமான கருத்தியலை, கிடை மறித்த ராக்கமாவின் பருத்தி காட்டை கண்டு வர செல்லும் தின்னப்ப நாயக்கர் என்ற ஒரு கவித்துவமான கதாபாத்திரத்தின் மூலம் கி. ரா அழகாய் அழுத்தமாய் வெளிப்படுத்தி இருக்கும் விதம், இந்த படைப்பு ஏன் கிளாசிக் என கூறப்படுகிறது என்பதை உணர வைத்துவிடுகிறது.
காதல் வயப்படும் இருவர் அவர்களின் சாதிய வேறுபாட்டால் பிரிக்கப்பட்டு மேல் சாதியை சேர்ந்தவருக்கு திருமணம் என்னும் தண்டனை தந்து கீழ் சாதியை சேர்ந்தவருக்கு பிடித்த பேயை ஓட்ட கிடைக்கும் சவுக்கடிகளே தண்டனை என்று கூறி முடிக்கிறார்.
அதிகாரம் மற்றும் அதற்கு எதிரான போராட்டம் என இரண்டையும் எடுத்துக்காட்டி, இந்த இரு சக்திகளுக்கு இடையில் சாதாரண மக்கள் சிக்கும்போது எழும் பிரச்னைகளையும் பேசி இருக்கிறார்.
மிக மிக மேலோட்டமாக பார்த்தால் வர்க்க அரசியல் பேசுவதை போல் தோன்றும் இந்த குறுநாவல் வாசித்து முடித்த பிறகு நம்மை பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கிறது. கிடை, 67 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய படைப்பு. ஆனால் அதன் மூலம் கி.ரா சொல்லும் சேதி மிகவும் முக்கியமானது.
ராமசுப்பா நாயக்கர், கிட்ணக் கோனார், லவகுணக் கவுண்டர் என வேறுபாடில்லாமல் அனைவரும் கீதாரிகளாகச் சுற்றும் சமூகம். இதில் ராக்கம்மாவின் தோட்டத்தில் இருந்த பருத்தியை முழுவதும் ஆடுகள் தின்றுவிடுகிறது.
அந்த அழிமானத்துக்குக் காரணம் யாரெனக் கண்டறிய திம்மய நாயக்கருடன் மேலும் இருவர் என மூவராக பருத்திக் காட்டுக்குள் செல்கின்றனர். அங்கே ஒரு உடைந்த வளையலும் முள்வாங்கியும் கிடைக்கிறது. ஆனால் அவர் அதை அவர் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
ரகசியம் என்னவென்றால் அதே ஊரில் பள்ளக்குடியில் இருக்கும் பதின்பருவத்தைச் சேர்ந்த செவனிக்கும் திம்மய நாயக்கரின் மாப்பிள்ளை எல்லப்பனுக்கும் நடந்த காதல் விளையாட்டின் காரணமாக மேய்க்க வந்த ஆட்டு மந்தையை இருவரும் மறக்க, அந்த ஆடுகள் ராக்கம்மாவின் பருத்தியை நாசம் செய்கின்றன.
ஊரில் பஞ்சாயத்து கூட்டப்படுகிறது. பஞ்சாயத்தில் உண்மை தெரிந்ததா? எல்லப்பனும் செவனியும் என்ன ஆனார்கள் என்பதே கிடை...
வேறு வேறு சாதியினராக இருந்தாலும் எல்லோரும் பங்காளிகளாகவே பழகுகிறார்கள். முருகா முருகா என்று நேர்மையாக வாழும் ராமக்கோனார் மதிக்கப்படுகிறார். திருட்டுத்தொழிலின் காரணமாக பொன்னுசாமி நாயக்கர் ஊராரின் ஏய்ப்புக்கு உள்ளாகிறார். அவரவர்க்கு கிடைக்கும் மரியாதை அவரவர் செய்கையைப் பொறுத்தே அமைகிறது. இதெல்லாம் உற்று நோக்க வேண்டிய விஷயம்.
கலெக்டர் நாயக்கர், ரெட்டைக்கதவு நாயக்கர் என கி.ராஜநாராயணன் அவர்களின் characterisation ரசிக்க வைப்பதாய் இருக்கிறது. கீதாரிகளின் வாழ்வியலும், கலாச்சாரமும், ஆடுகள் குறித்த அவர்களது நம்பிக்கையும் ஒரு வறள்காட்டின் வாழ்க்கை முறையை நம் கண் முன் விரிக்கிறது.
ஐம்பது பக்க Novella என்றாலும் அதற்குள்ளும் ஒரு காதல் கதை, மனதை பாதிக்கும் சம்பவங்கள் என படிக்கப் படிக்க சுவாரசியமூட்டுகிறது கிடை...
அடுத்த கதை:- ஒரு ஊரில் துரைசாமி நாயகர் என்னும் ஒரு சம்சாரி இருந்தார். அவருக்கு 4ஏக்கர் நிலம் உண்டு. ஒன்றுவிட்ட சகோதரி 4பேர் அவர்களுக்கும் 4ஏக்கர் நிலம் உண்டு. அவர்களும் வாழவெட்டியாக வாரிசு எதும் இல்லாமல் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ஆக மொத்தம் 8ஏக்கர் கரிசல் நிலம் வைத்துள்ளார். அதுவும் கரிசலக்காடு புள் பூண்டு முளைக்காத இடமாகும். சகோதரி பெண் பிள்ளைகள் வீட்டையும் காட்டு வேலையும் ஒன்றுமாக நாயக்கருக்கு உதவி வந்தார்கள். பிறகு நாயக்கர் திருமணம் செய்து ஒரு பெண் பிள்ளை ஆண் பிள்ளை என வாரிசும் வந்து விட்டது. அந்த காலத்திலேயே நல்ல ஜட்ஜை போல புத்திக்கூர்மை உள்ளவர். நிலத்தையும், மக்களையும் எப்படி கையாள வேண்டுமென்று தெரிந்து வைத்துள்ளார். ஜோதிடம், உறவுக்காரர்களையும் வாழ்க்கையிலிருந்து அறவே தள்ளி வைத்தார். ஊரார் வீட்டின் விசேஷங்களுக்கு செல்வார் ஆனால், எந்த வீட்டினுளும் கை நினைக்க மாட்டார் மொய் வைக்கவும் மாட்டார். வீட்டில் நிலம், பணம் கூடி வர சிறிது சிறிதாக சொத்து சேர்த்து ஆடம்பரதிற்கு ஏதும் ஆசைப்படாமல் கடைசிவரை காரைவீடும் இருந்தும் குடியேறாமல் தகரவீட்டினிலே இருந்து அறுசுவை உணவும் உண்ணாமல் இருப்பதை வைத்து மன நிறைவான வாழ்க்கையை காலம் சென்று வாழ்ந்தும் முடித்துவிட்டார். ஒரு ஏழை வேலைக்காரன் சம்சாரி வீட்டில் வேலை செய்துக்கொண்டு சாமர்த்தியமாக தன் உழைப்பை மட்டுமே நம்பி கரிசல் நிலத்தை வைத்துக்கொண்டு எப்படி சம்சாரி ஆனர் என்பதுதான் இந்த கரிசல்க்காட்டில் ஒரு சம்சாரியின் கதை. இப்படிக்கு கி.ரா வின் வாசகி..
புத்தகம் : கிடை ஆசிரியர் : கி. ராஜநாராயணன் பக்கங்கள் : 64 பதிப்பகம் : காலச்சுவடு
நூற்றாண்டு விழா காணும் ஆசிரியர் கி. ரா அவர்கள் எழுதிய புத்தகங்களில் நான் வாசிக்கும் முதல் புத்தகம்.
இத்தனை காலம் கழித்தும் அவர் கொண்டாடப் படுவதன் காரணம் அவர் புத்தகத்தின் மூலம் தெரிகிறது.
வெறும் 60 பக்கங்களில் சமூகத்தில் நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வு மற்றும் மனிதர்களின் குணங்களை மிக எதார்த்தமாக எளிய நடையில் எழுதியுள்ளார்.
ஏதோ கிடையில் நடக்கும் பிரச்சனையை தீர்க்கும் கதையாக இருக்கும் என்று நினைத்து வாசிக்க அதுவோ எல்லப்பன் செவனியின் காதலை பிரிக்கும் சதியாக இருக்கிறது.
ஆடுகளுக்கு பெயரிடும் வழக்கமெல்லாம் எங்க ஊரில் உண்டு. மற்றும் பேச்சு வழக்கில் எங்கள் ஊர் வாசமும் வீசியது வாசிக்கும் போது மகிழ்ச்சியைத் தந்தது.
அவர் எழுதியிருக்கும் கதாப்பாத்திரங்களை இன்றும் கிராமப்புறங்களில் காணலாம். அத்தனை உயிரோட்டம் மற்றும் உண்மையான மனிதர்களாக இருக்கிறார்கள் அவரின் கதைமாந்தர்கள்.
திம்மநாயக்கரின் சாமர்த்தியம், பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்று செய்த குற்றங்களிலிருந்து தப்பித்து செய்யாத தவறுக்காக சிக்கிக் கொள்ளும் பொன்னுசாமி நாயக்கர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அத்தனை எதார்த்தம். அத்தனை இயல்பாக மனிதர்களை எழுதியிருக்கிறார்.
ஒரு கிடையை வைத்து சாதிய சமூகங்களின் எதார்த்தத்தை மிக அழகாக காட்டியிருக்கிறார்.
பொதுவாய் நாவலில் குறு, சிறு, நெடு எல்லாம் பக்கங்களில் வைத்து அளப்பார்கள். அது குறுவோ,சிறுவோ, நெடுவோ எல்லா புத்தகமும் பெரிய இலக்கையே நோக்கி நம்மை பயணிக்க வைக்கின்றது. "கிடை"யும் அவ்வாறே. கட்டமைப்பான சமூகத்தில் கட்டுப்பாடுகளும், சட்டங்களும் எளியவர்க்கு பாம்பாகவும், மற்றவருக்கு ஏணியாகவும் உள்ளது. இதை பெரிய சினிமா படங்கள் மூலமாகவும், பெரிய பெரிய மேடைகள் போட்டும் மட்டுமே சொல்ல வேண்டுவது இல்லை. அந்த கரிசல் காட்டில் சற்றே வேகமாய் பருத்தி மரம் அசைந்தால் பறந்து விடும் அளவு இருக்கும் நாவலிலும் பேசலாம். "கிடை" - வகைவகையாய் ஆடுகள். "கிடை" - வகைவகையாய் வகையறா. "கிடை"யில் எத்தனை எத்தனை ஆடுகள் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் நமக்கு அவை மொத்தமாய் ஆடுகள். வெள்ளாடு, தாலி, கிடா, மொச்சை இன்னும் இன்னும். எத்தனை மனிதர்கள் - நாயக்கர், கோனார் இன்னும் இன்னும். பள்ளி செவனி என்றாலும், பருவ மணப்பெண்ணோ, பருவமெய்தா மணப்பெண்ணோ. எல்லா சாதியிலும் பெண்"சாதி", எல்லப்பன்களுக்கு சேவை செய்யவே பிறவி எடுத்திருக்கின்றனர். கட்டமைப்பின் கட்டுப்பாடுகள் கோடாங்கியின் கையில் எருக்கம் விளாறாய் மாறி "செவனி"களை அடிக்கின்றன. ஆகசிறந்த படைப்பாளி கி.ரா.
How can someone even think about so many layers at once.. How can someone fit so much content in such a short read.. How can someone have such a knowledge about every little thing.. How can someone be crisp with a book yet hit you hard and make you ponder over it for a week.. How can someone portray the characters with such depth, that you feel like they are being born as you read.. . . So this short read is about a day in kidai and the happenings involving the same..(கிடை என்பது ஆடு, மாடு போன்ற காலநடைகளை இரவு நேரத்தில் வயல்போன்ற திறந்தவெளிகளில் தங்கவைக்கும் இடமாகும்) . . I have not known the writer before his demise which happened recently.. I wish I had known him earlier and special thanks to @its for forming a tamil reading group and encouraging us to lift this as our first book.. . . There are many goose bump moments in this fillet read.. So if you have just started reading tamil and need a short and top notch read, I would definitely recommend this little joy bundle..
இது ஒரு கிளாசிக் குறுநாவல். வெங்கடஸ்ரீ ராமானுஜ நாயக்கர் கேரக்டர்ல இருந்து கதை start ஆகுது.
கிடைன்றது ஊரோட ஒட்டு மொத்த ஆட்டுக்கூட்டத்தையும் பராமரிக்குற இடம். ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒவ்வொரு பேரு வச்சு இருக்காங்க. அதுங்களோட தோற்றத்தை வச்சு தான் பேரும்.
அப்படி ஒரு நாள் கிடைல இருந்து ஆட்ட அவுத்து விட்டுட்டு இருக்கும்போது அந்த ஊர்ல இருக்க ராக்கம்மாள் ஆட்டை மறிக்குறா. அவளோட நிலத்துல விளையுற பயிரை பூரா ஆடு மேஞ்சு பாழா போயிருச்சு. இதை யார் பண்ணானு கண்டு பிடிக்குறது தான் மீதி கதை.
கரிசல் மண்ணோட அழகை வட்டார மொழியில கி.ரா அவர்களை தவிர வேற யாராலும் இவ்ளோ நுணுக்கமாவும் அழகியலோடவும் வர்ணிக்க முடியாது.
இந்த bookல வர characters பாக்கும்போது கி.ரா எந்த அளவுக்கு மனுஷங்களை observe பண்ணி இருக்காருன்னு தெரியுது. குட்டி குட்டி details கூட விடாம include பண்ணி இருக்குறது தான் இந்த புத்தகத்தோட அழகே. கிராமத்து சூழலை கண்ணு முன்னாடி கொண்டு வருது.
சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒருத்தரோட வாழ்க்கையை எப்படி மாத்துதுன்ற விஷயத்தையும் கடைசியா இதுல mention பண்ணி இருக்காரு. படிச்சு முடிக்கும்போது பல கேள்விகள் எழுது.
This entire review has been hidden because of spoilers.
கிடை - சிறிய நாவல் என்றாலும், இது எனக்கு ஒரு முந்நூறு பக்க நாவலை படித்த நிறைவை அழித்ததாய் உணர்ந்தேன். இது ஒரு ஊரின் கிடையை மையப்பதினாலும், அதன் சுற்றி இருக்கும் சூழலை மற்றும் வாழும் மனிதர்களை பற்றியும் விவாதித்து இருக்கிறது. மேலும், ஒவ்வொரு கதையும் மனதில் நிற்கும் அளவுக்கு அவர்களை பற்றி சிந்தனையில் கொள்ள முடிகிறது. மேலும் எவ்வளவு வகையான ஆடுகள் உள்ளன என்பதையும் அறிய முடிகிறது. இதன் சிறப்பம்சமாக இதில் நடக்கும் உரையாடல்கள் அப்படி நேர்தியானதாக உள்ளது, படிப்பதற்கு புதுமையாக இருந்தது :). மற்றும் , இதனால் எனக்கு ஒரு சில வார்த்தைகளை அறிந்து கொண்டது மகிழ்ச்சி . கிடை கிதாரி பங்கம் மற்றும் சில வார்த்தைகள். இதில் பேசப்படும் சமூக படிநிலை வாழ்க்கை மற்றும் அரசியல் இன்றளவும் அழியாதிருப்பது வேதனையே.
Intense and impactful works need not necessarily be heavy and voluminous. Kidai - is a quick but a lasting thought provoking read... In the Era of Glocalisation, confining to societal norms might look redundant. It is a reality that is happening in certain parts. It is essential to capture life in it's true form. This book revolves around the life & daily routines Kidaris, the societal tangles & believes are well narrated in the detailed description. The author is a Doyan of the field... which is well evident through his works.
Out of 65 pages he brought more than seven scenes in the story. As I could understand the slang I could thoroughly enjoy the details and the humors in it. Even the people who don't understand slang will not leave the book without finishing it. Interesting part was the author let the readers imagine the rest of the story. Layers of caste's and misbelieves have been ripped strongly in subtle way. Satisfying :)
வெறும் 60 பக்கங்களே கிடை, ஆனால் அதன் எடை அளக்க அளவே இல்லை. ஒரே கருத்து "பிறப்பால் சாதி பார்க்கும் எவரும் பிறப்புறுப்பில் சாதி பார்ப்பதில்லை" . இன்று வரை தொடரும் அந்த ஏற்றத்தாழ்வுகள் தாழிட்டுகொள்கின்றன ஓர் இடத்தில் மட்டும், பிறகு வழக்கம் போல் இந்த சமுகத்திற்கே உரிய பாங்காய் முரண்களும் வேறுபாடுகளும் தொடர்கின்றன.கி.ராவின் உணர்ச்சி மிக்க எழுத்துகளும், அவதானிப்புகளும், கரிசல் நடையும் வாசகனுக்கு தீனியே. கிடை இந்த சமூகத்தில் இன்றளவும் தொடரும் நடை...
ஒரு சுவாரஸ்யமான குறுநாவல் . மூடநம்பிக்கையை எதிர்ப்பு காட்டி அது உருவாகும் காரணத்தையும்,அது பரவும் விதத்தையும் சொல்லுகிறார் கி . ரா. பேயை சாக்கு சொல்லி கலவாடும் விதம். ஒரு பெண் நிலை அறியாது அவளுக்கு பேய் ஓட்டும் கொடுமை. கிடையை மையமாக வைத்து கி ரா சொல்லும் கருத்துகள், சிறப்பும் இயல்பும் உடையதாய் உள்ளது. கதை முடிவில் செவனிக்கி இழைக்கப்பட்ட அநீதி கண்டு மனம் விம்மும்.
This entire review has been hidden because of spoilers.
Its specifies about people leading a pastoral life , their language, their habbits. But it was a little bit tought to understand the slang. while reading Ki.Ra's books its like he himself is sitting beside us and telling us the story like our grandpa. I wished I could have seen him once in my lifetime.
Have heard a lot of good things about this author but reading one of his works only now. The language(within that, the dialect), descriptions, plot esp. subplots n the nuances in that, the details - all fantastic. A five starrer. Only I wasn't happy with the way it ended. Recommended for Tamil literature fans. Rating: 4.5 stars
கரிசல் காட்டு வழக்கங்கள�� நிறைந்த கதை... சீக்கிரம் முடிந்தே என்றகவலை மட்டமே... நாயக்கர் சமுதாயமக்கள் கிடை போடுவார்கள் என்பதை இதிலிருது அறிந்தது மிக ஆச்சஎயமாக இருந்தது .
இது எனது நான்காவது புத்தகம் .மிகவும் கிராமத்து கரிசல் நிலத்தை கடந்து செல்லும் உணர்வு ஏற்படும் .இதில் வரும் செவ்வேனி கதாபாத்திரம் மிகவும் மனதை உலுக்கச் செய்யும் .இது ஒரு குறுநாவல் கி ரா வின் படைப்பில் மிகவும் அற்புதமான படைப்பு படிப்பதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும்.