சாலைகளும், தெருக்களும் நம்முடைய சமூக வாழ்கையின் இரத்த நாளங்கள் போன்றவை. இவை இரண்டும் எவ்வளவிற்கு தரமானதாகவும் உயர்வாகவும் இருக்கிறதோ அவ்வளவிற்கு நம்முடைய வாழ்கை தரமும் இருக்கும். ஒரு குடியிருப்பின் சமூக பொறுப்புணர்ச்சி எப்படியானது என்பதை அறிந்துகொள்ள அந்த சமூகத்தின் தெருக்களிலும் சாலைகளிலும் இருக்கும் பம்பர்களை (bumper) கொண்டே தீர்மானித்துவிட முடியும். அந்த அளவிற்கு அவை மனிதர்களை பிரதிபலிக்க கூடியது. மனிதர்களை பிரதிபலிக்க கூடிய அவை அதன் வழி வரலாற்றையும் பிரதிபலிக்கும்தானே. தெருக்களும் சாலைகளும் கூட மிக சிறந்த கதை சொல்லிகள்தான். அதிலும் வரலாற்று கதைகளை. வரலாற்றில் இரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் கதைகளை.