ரன்வேயில் வேகம் எடுத்த விமானம் எதிர்பாராத ஒரு விநாடியில் ரன்வேயை விவாகரத்து செய்துவிட்டு மேலே எம்பியது. ஆகாயத்தின் சமதளத்துக்கு வந்ததும் பெல்ட்டுகளை விடுவித்துக்கொண்டார்கள். “நான் பின்னாடி சீட்டுக்கு போகட்டுமா பாஸ்?” “போ...! லொட லொடக்காதே... கொஞ்சமா பேசு. நிறைய அப்ஸர்வ் பண்ணு.” விஷ்ணு எழுந்தான். பின்இருக்கைக்கு வந்தான். வாக்மேனை ரசித்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் நிமிர்ந்தான். விஷ்ணு ஏதோ கேட்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு வாக்மேனை கழற்றினான். “எஸ்...?” “உங்களுக்குப் பக்கத்தில் காலியாய் இருக்கிற அந்த சீட்டில் நான் உட்கார்ந்துக்கலாமா...?” “யூ... கேன்...! நோ ப்ராப்ளம்...” “தேங்க்யூ...” விஷ்ணு அந்த இருக்கைக்குப் போய் சாய்ந்தான்.
வேலை விஷயமாக டெல்லி வரும் விவேக்கிடம் பிளைட்டில் சந்திக்கும் முன்னணி நடிகை ராஜி தன்னை ஒருவன் ஒருவாரமாகத் தொடர்ந்து வந்தது மட்டும் இல்லாமல் தற்போது பிளைட்டிலும் இருப்பதைச் சுட்டி காட்டுகிறாள் ஆனால் வந்தவன் இறந்து போய்விடுகிறான். விசாரணையில் அவன் மனநல ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டது தெரிகிறது.
பல வருடங்களுக்கு முன்பு முகம் தெரியாதவர்களால் சுடப்பட்டு இறந்த தயாரிப்பாளரின் மகன் சத்யேஷ் ஒட்டுமொத்த திரையுலகம் துபாய் கலைநிகழ்ச்சிக்குச் செல்லும் போது அழிக்க மைக்ரோ டைனமைட்டை ராஜி மொபைலில் செட் செய்தது தெரியவருகிறது துணைக்காகத் தன் தந்தையின் நண்பரை வைத்துக்கொண்டு அதை உருவாக்கியவனையும் பிளைட்டிலே கொன்றுவிடுவதால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் திணறும் போது அவர்களிடம் கிடைத்த சிறு தடயம் அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது.
Another interesting thriller from Rajeshkumar. However, I feel like the story could have been developed and that the secrets were revealed in the last couple of pages hastily. Anyway I enjoyed reading it and will keep reading more Rajeshkumar novels.