முதலில் கண்ணன் மனிதனா, தெய்வ புருஷனா என்ற சந்தேகத்தை இந்நூல் தெளிய வைக்கிறது. மனிதனாகப் பிறவி எடுத்து, மனித இயல்புகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட ஒரு தெய்வ புருஷனே கண்ணன் என்பதைக் கீதை உணர்த்துகிறது.
Kannadasan (24 June 1927 – 17 October 1981) was a Tamil poet and lyricist, heralded as one of the greatest and most important writers in the Tamil language. Frequently called Kaviarasu (English: King of Poets), Kannadasan was most familiar for his song lyrics in Tamil films and contributed around 5000 lyrics apart from 6000 poems and 232 books,[1] including novels, epics, plays, essays, his most popular being the 10-part religious essay on Hinduism, captioned Arthamulla Indhumatham (English: Meaningful Hindu Religion). He won the Sahitya Akademi Award for his novel Cheraman Kadali in the year 1980 and was the first to receive the National Film Award for Best Lyrics, given in 1969 for the film Kuzhanthaikkaga.
"கண்ணன் அருளிய பகவத் கீதை " - கண்ணதாசன் விளக்க உரை ***********************************************************
1977ல் பகவத் கீதைக்கு எழுதப்பட்ட விளக்கவுரை. கண்ணன் "கடவுளா? மனிதனா?" என்ற கேள்விக்கு "இரண்டையும் இணைக்கும் பாலம் இந்நூல்" என முன்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு கண்ணதாசன் அவர்கள், முதன் முதலாக மூலநூலுக்கு விளக்கம் எழுதியுள்ளார்.
கீதை, போர்க்களத்தில் கண்ணன் பார்த்தனுக்கு உபதேசித்ததை, சஞ்சயன் அங்கிருந்தே அந்த உபதேசங்களை தனது ஞானதிருஷ்டியினால் திருதராஷ்டிரனுக்கு தெரிவிக்கிறான்.
எளிய பாடல் வரிகளில், தெளிவான மொழி நடையில், அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் நடக்கும் விவாதம் மிக அழகாக 18 அத்தியாயங்களில் பாடல்களாகவும் விளக்கவுரைகளாகவும் வடிக்கப்பட்டுள்ளது.
குறைவான பக்கங்களே(160) ஆனாலும், மானுட அற வாழ்வியலுக்கு தேவையான ஆழ்ந்த கனமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்நூல்.
நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்!
முன்னுரையிலிருந்து சில... \ எல்லாவற்றையும், மாயை என்று ஒதுக்கிவிட்டு அமைதி கொள்ளச் செய்யும் வெறும் துறவை மட்டும் பகவான் உபதேசிக்கவில்லை. மனிதனின் உணவு வகைகளில் இருந்து, வாழ்க்கை முறைவரை அனைத்தையும் ஒப்புக்கொண்டு பங்கீடு செய்து காட்டி, இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தி, இகத்திலேயே ஜீவாத்மாவை பரமாத்மாவாக முயல்கிறான் கண்ணன். ரத்தபாசத்தில் இருந்து, யுத்த தர்மம் வரை போதிக்கிறான். தொழில் செய்வதில் இருந்து தொழிலை துறப்பது வரை விளக்குகிறான். நித்திய கர்மங்களில் இருந்து சத்திய தர்மம் வரை தெளிவுபடுத்துகிறான். அவன் வேதாந்தம் மட்டும் பேசவில்லை. சித்தாந்தம் பேசுகிறான்; மருத்துவம் கூறுகிறான்; மனோதத்துவம் சொல்கிறான். எங்கெங்கோ பறக்கும் எல்லாப் பறவைகளுக்குமான சரணாலயம் 'ஈஸ்வரனே' என்பதை 'நானே' என்று முடிக்கிறான். சில இடங்களில் 'நான்' என்பதை விட்டுவிட்டு 'ஈஸ்வரன்', 'பரம்பொருள்' என்ற வார்த்தைகளையே உபயோகப்படுத்துகிறான். ஆகவே கண்ணன் 'கடவுளா மனிதனா' என்று கேள்வி எழுந்தால் இரண்டுக்கும் பாலம் என்பது இந்நூலின் மூலம் உறுதியாகிறது. பயணம் செய்வோனுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக பாலம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், இகலோக பரலோக வாழ்வுக்கு பகவத் கீதையம். கண்ணன் பாலமாக காட்சியளித்தாலும் இக்கரையிலும் அவன் வடிவம் தெரிகிறது. அக்கரையிலும் அவன் வடிவம் தெரிகிறது. இக்கரை மனிதத்துவம்; அக்கரை தெய்வத்துவம்; இடையில் இருக்கும் பாலம் ஆத்மதூது. இயேசு கிறிஸ்துவை கிறிஸ்தவர்கள் எப்படி இறைவனின் தூதன் என்றழைக்கிறார்களோ, அப்படியே இந்துக்கள் கண்ணனை 'ஆதியாய் அனாதியாய் நிற்கும் ஆதிமூலத்தின் தூதன்; அவனது மறுவடிவம்; அவனது பிரதிபிம்பம்'என்றழைப்பது பொருந்தும். கண்ணன் மகாத்மா, மனிதருள் தெய்வம், பரலோக பாலம், சர்வசக்தியும் படைத்த தேவசேனாதிபதி. /
\ "சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொல்வதாக கீதை அமைக்கப்பட்டிருக்கிறதே? ஒரு மனிதன் போர்க்களத்தில், நிற்கும் தன் மக்களைப்பற்றிக் கவலைப்படாமல், எதிரியின் தத்துவத்தையா கேட்டு கொண்டிருப்பான்?" பரமாத்மாவைப் பகைவனும் வியந்து பார்க்கிறான், வியந்து கேட்கிறான் என்பதே, கீதையின் பெருமைக்குரிய தொடக்கமாகும். /
\ ஞானம் என்பது அறிவு. விஞ்ஞானம் என்பது அனுபவ உணர்வு. இளமையில் ஞானத்தால் பெற முடியாத பக்குவத்தை எவனும் முதுமையில் விஞ்ஞானத்தால் பெறுகிறான். ஆகவே பட்டு, கேட்டு, தட்டுத் தடுமாறியவனைக் கரை சேர்ப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டது பகவத் கீதை. /
புத்தகத்திலிருந்து... \ போவதைக் கண்டு கலங்காமல், வருவதைக் கண்டு மயங்காமல், பயந்து பயந்து நடுங்காமல், கோபத்தினால் குதிக்காமல் இருக்கிறானே, அந்த மனிதன் தான் உறுதியான அறிவு வாய்ந்தவன்.
ஒரு பக்கம் நன்மை, ஒரு பக்கம் தீமை வரும் போது, இரண்டிலும் வீழ்ச்சியடையாதவனாய், 'என்ன... என்ன' என்று ஆவல் அடையாதவனாய், வெறுப்பில்லாதவனாய் எவன் இருக்கிறானோ, அவனுடைய அறிவே நிலையானது.
தேவைப்படும்போது, ஆமை தன் உடம்பை ஓட்டுக்குள்ளே இழுத்துக் கொள்கிறது. அதுபோல, எப்போதும் தன் ஐம்புலன்களையும் உணர்ச்சிகள் தாக்காமல் எவன் மீட்டு கொள்கிறானோ, அவன் அறிவே நிலையானது. /
\ மனம் செம்மையாக நிலைக்கப் பெறாதவனுக்கு அறிவில்லை. அந்த யோகம் இல்லாதவனுக்கு நிலையான சிந்தனை இல்லை . நிலையான சிந்தனை இல்லாதவனுக்கு அமைதி இல்லை. அமைதி இல்லாதவனுக்கு இன்பம் ஏது? /
\ ஞானத்தை சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு புலன்களை அடக்கும் அக்கறையுடன் ஞானத்தை அடைகிறான். ஞானம் வந்த பிறகு சிக்கலில்லாமல் உயர்ந்த அமைதியைப் பெறுகிறான். அறிவும் அக்கறையும் இல்லாமல், சந்தேகப்பட்டே பழகிப்போனவன் அழிந்து போகிறான். சந்தேகப் பிராணிகளுக்கு இந்த உலகமும் இல்லை. வானுலகமும் இல்லை. எந்த காலத்திலும் இன்பமும் இல்லை. /
\ சாப்பிடுவதில் ஒரு அளவு; நடமாட்டத்தில் ஒரு அளவு; காரியங்களில் ஒரு அளவு; தூக்கத்தில் ஒரு அளவு; விழித்திருப்பதில் ஒரு அளவு - இதுவே ஒருவகை யோகம். இதுவே துன்பம் இல்லாமலிருக்க வழி. / \ அர்ஜுனா! நேர்மையான மக்களில் நான்கு வகையினர் என்னை வழிபடுகிறார்கள். ஒன்று, பெரும் துன்பத்தை அனுபவித்தவர்கள்; இரண்டு, இறைவன் தத்துவத்தை அறிய விரும்புகிறவர்கள்; மூன்று, நற்கதி எதிர்பார்ப்பவர்கள்; நான்கு, தேவஞானம் கைவரப் பெற்றவர்கள். /
\ இறுதி நாளிலும் என்னையே பணிந்து உடம்பை விட்டுப் பிரிகிற ஆன்மா, துன்பமற்ற ஆனந்த நிலையை அடைகிறான் . அதாவது என் நிலையை அடைகிறான். இதில் சந்தேகமில்லை. குந்தியின் மகனே ! மரண காலத்தில் எதை எதை நினைத்துக் கொண்டு ஒருவன் உயிரை விடுகிறானோ அவன் அதே நிலையை அடைகிறான். காரணம் அதையே நினைத்ததன் பலன் அது. ஆகவே, ஒவ்வொரு கணையை வீசும் போதும், என்னையே நினைத்துக் கொண்டு போர் நடத்து. உன் மனத்தையும், அறிவையும் என்னிடம் கொடுத்துவிட்டு போரிடு. நீ என்னையே அடைவாய்; சந்தேகமில்லை. /
\ எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் - தனக்கு எந்தவித உதவியும் செய்யாதவனுக்குக்கூட - காலம் அறிந்து, இடம் அறிந்து, நடத்தை அறிந்து கொடுப்பது சாத்வீக தானம்.
'இதை கொடுத்தால் அது கிடைக்கும்' என்று எதிர்பார்த்து, சந்தேகத்தோடும் உள்நோக்கத்தோடு கொடுப்பது ராஜஸ தானம்.
பொருத்தமற்ற இடத்தில், பொருத்தமற்ற நேரத்தில், தகுதியற்றவர்களுக்குத் தருவதும், அலட்சியமாகத் தூக்கி எறிவதும், வசை பாடிக் கொண்டே பிச்சை இடுவதும், தாமச தானம். /
பகவத் கீதா உபதேசத்தை இத்தனை எளிய வடிவில் இனி எவரும் சொல்ல முடியாது. கவிஞர் கண்ணதாசனால் மட்டுமே இதை ��ெய்ய முடியும். புரிந்து கொள்ள இலகுவாகவும் என்ன சொல்கிறது என்பதை ஆணித்தரமாகவும் நிறுவி விடுகிறது.
இந்துக்களின் புனித நூல் என்று சுருக்கி விட முடியுமா. இந்துக்களுக்கு என்று புனித நூல் என்று எதுவுமே கிடையாது. இந்துக்களின் வாழ்வியல் தர்மத்தைப் பற்றி பல நூல்கள் இருக்கிறது. அதிலொன்றே பகவத் கீதை என்று சொல்லலாம்.
Awesome work by Kannadasan. Easy to understand for everyone. Translation laid out from layman perspective without loaded words in simple Tamil. A must read for anyone trying to understand the Gita
His explanation of Varnas as defined in Gita should clear the misconceptions created by dravidian parties from Tamilnadu context