புத்தகம்: அ'னா ஆ'வன்னா
எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 104
நூலங்காடி: Bookwards
விலை: 120
💫 மண்ணை விட்டு பிரிந்தாலும் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள கவிஞரின் மற்றொரு மகத்தான படைப்பு.
💫 தான் பிறந்து வளர்ந்த கிராமம், அங்குள்ள மக்கள், தன் நண்பர்கள் என அனைத்து தலைப்புகளிலும் எழுதியுள்ளார்.
💫 அனைத்து கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
💫 சிறு வயதில் படம் வரையச் சொன்னால் ஒரு ரோடு, 2 முக்கோணம் போட்டு ( மலை என்று) நடுவில் சூரியன் வரைந்து, அருகில் ஒரு சிறு வீடு வரைவோமே அது போல - எம்ப்ராய்டரி போட ஆரம்பித்ததும் 2 வாத்துகளை போடாமல் பெண்கள் இருந்ததில்லை.
"வாத்துகள் ரெக்கைகள் இருந்தும் அதிக நேரம் பறப்பதில்லை. பிறந்த வீடு, புகுந்த வீடு என பெண்களைப்போலவே தண்ணீருக்கும் தரைக்கும் அலைபாய்வதே வாத்துகளின் வாழ்க்கை "
💫 புத்த(க)யா - புத்தக வாசிப்பு மற்றும் நூலகத்தின் அவசியத்தைக் கூறும் கவிதை. தனக்கு புத்தகம் எடுத்தாலே தூக்கம் வருது என்று சொல்கிறவர்கள் தங்களுக்கான புத்தகத்தை இன்னும் எடுக்கவில்லை என்று அர்த்தம் - எங்கோ படித்தது.
"ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது
ஒரு உலகம் திறந்து கொள்கிறது
ஒரு புத்தகம் எரிகிறபோது
ஒரு அனுபவம் எரிகிறது."
💫 என்றும் எங்கள் நினைவில் நீங்கள் இருப்பீர்கள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்