வனவாசம்...
என்ன சொல்ல..!
கவிஞர்(கண்ணதாசன்) 'பிரித்தெடுத்திருக்கிறார்'. அடிபொலி!
ஒரு சுயசரிதை இவ்வளவு சுவாரசியமாக படிக்க வைத்துவிட முடியுமா! முடியுமென்றால் அதற்கு 'வனவாசமே' பதில்.
1943 முதல் 1961 வரை தன் வாழ்வில் நடந்த, குறிப்பாக தனது அரசியல் வாழ்வில் நடந்த சம்பவங்களை அப்பட்டமாகவும், அதே நேரம் ரசம் குறையாதவாரும் 60க்கும் மேற்பட்ட அத்தியாயங்களாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
'தான் உத்தமர்' என்று கவிஞர் எங்கும் குறிப்பிடவில்லை..கிட்டதட்ட அனைத்து தீய பழக்கங்களகயும் கற்று, பின் அதிலிருந்து மீண்டு வந்ததாகவே எழுதப்பட்டிருக்கிறது.
#திமுக
(இப்பதிவை எழுதும் போது அறிவாலையத்தை கடக்கிறேன், Ola Cabல்)
ஒரு மனிதன் அரசியலில் என்னென்ன செய்யக்கூடாது என்பதற்கு உதாரணம், கவிஞர்.
என்னென்ன செய்தால் அரசியலில் உச்சாணிக் கொம்பில் நீடித்து நிலைத்து நிற்கலாம் என்பதற்கு உதாரணம், கலைஞர்.
அதாவது இளம்பிரயாத்தில் என்னென்ன தவறுகள் செய்யமுடியுமோ அவ்வளவையும் கூட்டாக சேர்ந்து செய்து, தவறுகளுக்கான தண்டனைகளை தான் ஒருவன் மட்டுமே ஏற்பது என்பது வஞ்சனையே. அதன் வெளிப்பாடே கவிஞரின் அரசியல் 'வனவாசம்'.முதலில் ஒரு சில அத்தியாயங்களை தவிர மீதி அனைத்தும், திமுக/அண்ணா/கலைஞரே நிரம்பியுள்ளனர்.
ஆரம்பத்தில் திராவிட கொள்கைகளின் மீது பற்று கொண்டு, கடவுள் நிந்தனை செய்தாலும், பின்னால் மனம் மாறி 'அர்த்தமுள்ள இந்துமதம்' எழுதியதும் கவிஞர்தான்.
என்னை பொறுத்தவரை, Anti திமுகவினருக்கு அல்வா* இப்புத்தகம்.
(* - இனிப்பு என்ற காரணத்தை தவிர வேறு எந்த உள்ளர்த்தமும் இல்லை)