தன்னிடம் இருக்கும் குறைகள் அடுத்தவரின் பார்வை சுவட்டில் பதியவில்லை என்பதே அவர்களின் மீது பேரன்பை பொழிய வைக்கும்.
விபத்தால் உடலில் சிறு குறைபாடு அடைந்த கீர்த்தியின் மனதில் தாழ்வுணர்ச்சியே அதிகம் இருப்பதால் தனிமையை மட்டுமே விரும்பி ஏற்பவளின் வாழ்வில் அன்பு செல்வத்தின் வருகை மாற்றத்தை கொண்டு வருகிறது.
பெற்றவர்களை இழந்து சொத்துக்கள் கைவிட்டு போன பிறகே வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்த அன்பு செல்வன் அச்சொத்துக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் முழுமனதாக ஈடுபட்டாலும் கீர்த்தின் பார்வையில் இருக்கும் காதல் அவனை அவளின்பால் நெருங்க சொல்கிறது.
கிராமத்தில் தான் தனக்கான அடையாளம் இருப்பதால் கீர்த்தியை அங்கே அழைப்பதில் தயக்கம் கொள்பவனுக்கு கீர்த்தியின் உறுதியே அவளிடம் மேலும் நெருங்க சொல்கிறது. எப்பொழுதும் தன் குறையை மட்டுமே யோசித்து கொண்டு இருக்கும் கீர்த்தியின் யோசனையில் அன்புவின் பிரவேசம் அவளின் எண்ணத்தை விசாலமாக்கி விடுகிறது.
முழுநேர விவசாயியான அன்பு செல்வனின் ஆளுமையாகிறாள் கீர்த்தி.