நெருக்கடி நிலையில் இருக்கும் போது மூளையை உபயோகப்படுத்தும் கலை அனைவருக்கும் சாத்தியமில்லை.
இராணுவத்திற்காக மிகக் குறைந்த எடை கொண்ட அணு ஆயுதத்தைத் தயாரித்து அதைச் சோதனைக்கு உட்படுத்தும் நேரத்தில் விமானம் விபத்தில் மாட்டி பாலைவன மண்ணில் அது விமானத்துடனே புதைந்து போகிறது.
அணு ஆயுதத்தைக் கொண்டு வர விஞ்ஞானி சைந்தவியுடன் போலீஸ் அதிகாரி விவேக்கும் பாலைவனத்திற்குச் செல்கிறார்.இவர்களுக்கு முன்பே அங்குக் காத்துகொண்டிருக்கும் தீவிரவாதிகளிடம் இருந்து அந்த இரகசிய அணு ஆயுத விவரங்களைப் பத்திரமாக மீட்டெடுத்து இராணுவத்திடம் ஒப்படைக்கும் பணி விவேக்கால் நிறைவாகச் செய்து முடிக்கப்படுகிறது.