நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தங்களது திறமையாலும், கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் வாழ்க்கையில் சிறிது, சிறிதாக முன்னேறியவர்களே இன்று உலகின் முன்னணி பணக்காரர்களாக உள்ளனர். இவர்கள் தங்கள் பொருளாதாரத்தை மட்டும் உயர்த்திக் கொள்ளவில்லை. பல இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இன்றைய உலகப் பொருளாதாரத்தையும் உயர்த்தி விட்டார்கள். இவர்கள் வெற்றிக் கதையைப் படிக்கும் பொழுது நமக்குள் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. இவர்கள் சிகரம் ஏறிய கதை, முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஓர் உற்சாக டானிக். இவர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் அல்ல. இவர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக உருவெடுக்கவில்லை. இவர்கள் தங்கள் உழைப்பு+திறமை மீது நம்பிக்கை கொண்டவர்கள்.