கதையிலிருந்து: "சாரி தமு..!! உன்னை ஹர்ட் பண்ணனும்ன்னு நினைக்கலை..ஒன்ஸ் அகைன் வெரி சாரி..!!" என்ற நளனை பார்த்தாள் தமயந்தி.. "இதெல்லாம் நம்ம கல்யாணத்திற்கு பிறகு உனக்கு மெதுவா புரிய வச்சுக்கறேன்.. கண்டிப்பா அப்போ உனக்கு என்மேல கோபமோ, வருத்தமோ வராது.. இப்போ நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுடறேன்.. என்னதான் நீ நண்பர்களா இருக்கலாம்ன்னு நீ சொன்னாலும் என்னால அது முடியாது.. நாம கணவன் மனைவிங்கறதை உன் மனசுல இப்போ இருந்தே பதியவை.. கணவன் - மனைவிக்குள் நட்பு இருக்க வேண்டும் தான், ஆனா அதுக்கு நண்பர்களா இருக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை...!!" என்று நிறைய சொன்னான் நளன்.. தமயந்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாளா? இந்த கதையை வாசித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
பிள்ளை வளர்ப்பில் குடும்பத்தாரின் கண்காணிப்பு எவ்வளவு முக்கியம் என்று சொல்லும் கதை.
தவறாக வளர்ந்தவன் தான் அழிவதுடன் சுற்றி இருப்பவர்களையும் அழித்த பிறகே சில நேரங்களில் ஞானோதயம் ஏற்படும்.
மற்றவர்கள் தன்னைப் புகழ்வதே பெரும் போதையாகக் கருதி அதிலே திளைத்திருக்கும் அஸ்வின் திருமண நாள் அன்று தாலி கட்டிய மனைவி தமயந்தி குண்டாக இருக்கிறாள் என்று நண்பர்கள் கேலி செய்வதைப் பொறுக்க முடியாமல் கட்டிய தாலியை அன்றே அறுத்ததுடன் கூசும் சொற்களை அவளின் குடும்பத்தாரின் முன்பு வீசியதால் அவர்களுக்கு மனநிலையுடன் உடல்நிலையும் பாதிக்கிறது.
பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு எழாத தமயந்தியை நளன் சந்திக்கிறான். தந்தையை இழந்த பிறகு தாயின் வளர்ப்பில் வளர்ந்த நளன் பெண்ணின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்டவனாக இருப்பதே அவனுக்குத் தமயந்தியின் மீது முதல் ஈர்ப்பு ஏற்படக் காரணமாகுகிறது.
தந்தையின் பார்ட்னரின் வாரிசாகக் கருதப்பட்ட நளனே தனக்குக் கணவனாக வந்த பிறகு பெற்றவர்களின் கவலை குறைந்ததை உணர்ந்த தமயந்திக்கு அவனின் புரிதல் ஆசுவாசம் கொடுத்ததுடன் அவளை வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு போகும் நகர்த்தலை விரும்பியே ஏற்கிறாள்.