பணத்திற்காக விலைபோகும் புத்திசாலிகளால் எப்பொழுதுமே ஆபத்து.
ஊட்டியில் நடக்கும் விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் விஞ்ஞானி ராஜ்நாத் என்பவர் பெரும் தாக்குதல் நடத்தி உயிரிழப்பை ஏற்படுத்த போகிறார் என்று உளவுத்துறைக்குத் தகவல் வருகிறது. தகவலை சொல்லியவன் கொடூரமாகக் கொல்லப்படுகிறான்.
ராஜ்நாத்தை கண்காணிக்கும் பொறுப்பு கிரைம் ஆபிஸர் விவேக்கிற்குக் கொடுக்கப்படுகிறது. தீவிர கண்காணிப்பில் இருப்பவரை திடீரென ஒரு கும்பல் கடத்திவிடுகிறது.
அந்தக் கும்பல் தன்னை விடுவிக்க வேண்டும் என்ற நினைப்பில் முக்கியத் தீவிரவாத கும்பலின் தலைவனிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கையும் இங்கே தான் விஞ்ஞானிகளை அழிக்க வந்ததையும் ராஜ்நாத் ஒப்பு கொள்கிறார்.
விவேக்கால் உருவாக்கப்பட்டது தான் இந்தக் கடத்தல் நாடகம் என்று அறியும் போது எவ்வித சேதாரமும் இல்லாமல் விஞ்ஞானிகளின் மாநாடு நடக்கத் தொடங்குகிறது.