முதல் குற்றம் செய்யும் போது தான் தயக்கமும் பதட்டமும் எழும், அதை மறைக்க முற்படும் வேளையில் அடுத்து அடுத்து என்று குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்.
தான் யார் என்று மறந்த நிலையில் மனநல மருத்துவரை தேடி வந்தவளின் பூர்வீகத்தைத் தேடும் போது அரசியல்வாதியின் வாரிசு அகப்படுகிறான்.
காதலிப்பது போல் நடித்தது நளினாவிற்குத் தெரிந்த பிறகு அபிஷேக் நண்பனுடன் சேர்ந்து அவளை உபயோகித்துக் கொன்றுவிடுகிறான். நளினாவின் உடலை அழிக்கும் போது எதிர்பாரமல் அதைப் பார்த்த ஆர்த்தியை தாக்கியதில் அவளின் நினைவுகள் அழிந்து போய்விடுகிறது.
போலீஸ் அதிகாரி ஒருவர் அரசியல்வாரிசுகளின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர யாருக்கும் சந்தேகம் வராமல் அபிஷேக்கையும் அவனின் நண்பனையும் கொன்றுவிடுகிறார்.