தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.
Appadurai Muttulingam (Tamil அ. முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.
நான் இப்புத்தகத்தோடு அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். இனி அவர் எழுதி வெளியிடப் போகும் புத்தகங்களை படிக்கவும் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
உலகில் சிறந்த எழுத்தாளர்களில் அ. முத்துலிங்கத்திற்கு ஒரு இடம் உண்டு என்பது என் கருத்து. இவர் எதை எழுதினாலும் மிளிர்கிறது. மிகச் சாதாரணமான விஷயங்கள் கூட இவர் எழுத்தில் மிக ஆழமாக நம் மனத்தில் நிரந்தரமாக நிற்கும்படி ஆகி விடுகின்றன. உண்மை கலந்த நாட்குறிப்புகளில் இந்த ரசவாதத்தைத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்.