பிட்காயின் (BitCoin) என்பது கண்ணில் பார்க்க முடியாத அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பணம். இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் (online shopping) செய்யலாம். தற்போது பிட்காயின் என்ற சொல் புரிந்தும் புரியாமலும் மக்களை கதி கலக்கி வருகிறது. பிட்காயின் குறித்த தகவல்களை மக்கள் கூகுளில் தேடத் துவங்கி விட்டனர். பங்குச் சந்தையில், நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதைப் போன்றுதான் இது என்றும், இல்லை, இது ஒரு ஏமாற்று வேலை என்றும் தகவல் பரவி வருகிறது. டாலர், பவுண்ட், ரூபாய் என்று இல்லாமல் உலகத்திற்கே ஒரே நாணயமாக பிட்காயின் உள்ளது. பிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்சி. இந்த பிட்காயினை வைத்துக் கொள்ள இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி கொள்ளலாī