காதலால் புது உறவுகளை அமைத்துக் கொண்ட பிறகு பழைய உறவுகளின் அன்பை உதாசினப்படுத்த வேண்டியது இல்லை. காதலில் உறுதியாக இருப்பவர்களை அவர்களின் நிலைப்பாடே சேர்த்து வைக்கும்.
வீட்டில் செல்ல பெண்ணாக வளரும் வர்ஷா, காலேஜ்ஜில் ராகிங்கில் சீனியர் கார்த்திக்கிடம் லவ் கார்ட்டு கொடுக்கச் சொல்ல முசுடானவனான கார்த்திக் கை நீட்டி அவளை அடித்து விடுகிறான்.பதிலுக்கு வர்ஷாவும் டைம் கிடைக்கும் போது அவனை அடித்து விடுகிறாள். இந்த நிகழ்ச்சியே இருவரையும் இணைக்கக் காரணமாகிறது.ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொள்கின்றனர் ஆனால் படிப்பு இடையில் இருப்பதால் காத்திருக்கின்றனர்.
கார்த்திக் தன் குருவாக நினைக்கும் டாக்டர் ராம்மின் மகள் தான் வர்ஷா என்று தெரிந்தால் விலகிடுவானோ என்று அதை மறைத்து விடுகிறாள்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு படிப்பை முடித்தவர்களின் காதல் வீட்டில் தெரிந்து இணைத்து வைத்து விடுகின்றனர்.
வர்ஷாவின் தம்பியாக வரும் வருணுக்கும் இருக்கும் காதல் கிளைக் கதையாக வருகிறது. இவர்கள் நான்கு வருட காதலை வளர்க்க சுகாவின் காதல் துணைபுரிகிறது.
அழகான அன்பான குடும்பமைப்புக் கதைகளில் வரும் குடும்பங்களுக்கிடையே அதீத கற்பனை இல்லாமல் தெளிவான எதார்த்தமான காட்சியமைப்பு படிப்பவர்களுக்குப் பிடிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.