Jump to ratings and reviews
Rate this book

அமைப்பாய் திரள்வோம் - கருத்தியலும் நடைமுறையும்

Rate this book
தலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.

உழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.

- இரா. ஜவஹர்
மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்

இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர் திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மியளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்தகத்தைப் பார்த்து மலைத்துப் போகிறேன். அவரது வித்தகத்துக்கான சான்று - இந்தப் புத்தகமே ஆகும்.

- கவிஞர் தணிகைச்செல்வன்

520 pages, Paperback

First published February 1, 2018

23 people are currently reading
131 people want to read

About the author

Thol. Thirumavalavan (தொல். திருமாவளவன்) or Dr. Thirumavalavan is an Indian politician, scholar and activist from the state of Tamil Nadu. He is a Member of Parliament from Chidambaram and current president of Viduthalai Chiruthaigal Katchi (VCK). He rose to prominence in the 1990s as a Dalit leader, and formally entered politics in 1999. His political platform centres on ending caste discrimination and consequently the caste system. He has also expressed support for Tamil nationalist movements in Sri Lanka.

He worked in the government's Forensic Department as a scientific assistant, from which he later resigned in 1999 to contest in elections. He completed his Ph.D. at Manonmanium Sundaranar University and was awarded his doctorate in 2018. He is an author, and has also acted in Tamil cinema.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (65%)
4 stars
6 (26%)
3 stars
2 (8%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
249 reviews8 followers
July 23, 2019
A very good book. Thiruma has managed to write a book that is very abstract. He has not used himself or his party or even Tamil Nadu or Indian politics as a reference but carefully explained the steps and measures one should take to organize people. Due to this approach the book is some what prosaic and lengthy than it should be. But still it seems there is no other better way to write these concepts. I think parts of this book should be included in syllabus for political science, social science and people management related courses.
Profile Image for Gowtham.
249 reviews50 followers
November 8, 2020
2018 -ஆம் ஆண்டு அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஆசிரியர் கீ.வீரமணி அவர்களின் உரையை வலையொளியில் கேட்டுவிட்டு 2020 ஆம் ஆண்டு நடந்த புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்.

டாக்டர் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளைக்குள் வாசித்து முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து தொடங்கினேன். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு பகுதிக்கு மேல் வாசிக்க முடியவில்லை, காரணம் அதில் கூறப்படும் செய்திகள் ஆழமானவை செழுமையான கருத்துக்கள் நிறைந்தவை . ஒரு மாணவனுக்கு எளிமையாக விளக்கும் வகையில் ஒருவொரு இயலும் ஆழமான கருத்துக்களும் கற்பிதங்களும் கொண்டவை. ஆமை வேகத்தில் வாசித்து நேற்று இரவு தான் முடித்தேன்.

ஒருவொரு இயலை பற்றியும் தனியாக எழுதலாம் அந்த அளவுக்கு சிந்தனை வளம் மிகுந்த நூல். மானுடவியல் தத்துவங்கள்/கோட்பாடுகள் அனைத்தையும் உளவியலோடும், நடைமுறையோடும் தொடர்புபடுத்தி எழுதியுள்ளார்.

இது விடுதலை சிறுத்தைகளுக்கு மட்டுமின்றி அணைத்து அமைப்பு மற்றும் கட்சிகளுக்கும் அவர் எழுதிய ‘constitution’ என்றே கூறலாம்.

இதில் கூறப்படும் அமைப்பு சார்ந்த தத்துவங்களை நான் திராவிட இயக்கத்தை எடுத்துக்காட்டாக கொண்டு புரிந்து கொண்டேன். அதே போல் கடைசி 10 இயல்களில் கூறப்படும் தனிமனித ஒழுக்கம் மற்றும் உளவியல் சார்ந்த சிந்தனைகளை என்னளவில் உள்வாங்கிக்கொண்டேன். வாசகனுக்கு ஏற்றவாறு இந்த புரிதல் முறை மாறலாம். ஆனால் எத்தகைய சிறு அமைப்பாக இருந்தாலும் இந்த விதிகளுக்குள் அமைவது அவசியம். அமைப்பின் வளர்ச்சி மற்றும் இலக்கின் வெற்றி யாவும் அமைப்பின் செயல்பாடுகளை பொருத்தும் இயங்கியல் சூழலை பொருத்தும் மாறுபடும். அணைத்து விதமான அமைப்பு இயக்கம் கட்சி ஆகியவற்றுக்கும் இந்நூல் நிச்சயம் ஒரு வழிகாட்டியாக அமையும்.

குறிப்பாக சில இயல்களில் தனது அனுபவங்கள் மூலம் மேலும் மெருகேற்றி உள்ளார் என புரிந்துகொள்ள முடிகிறது. நட்பு முரண்-பகை முரண், தலைமை, தனிநபர் ஒழுக்கம், இயக்க கட்டமைப்பு, கொள்கை ஒருமைப்பாடு, விமர்சனம் போன்ற பல்வேறு சிக்கலான கருத்தாக்கங்களை எளிமையான முறையில் விளக்கியுள்ளார்.

இணையத்தில் களமாடும் தோழமைகள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். உங்களின் சித்தாந்தம் எதுவாக வேணாலும் இருக்கலாம் ஆனால் இதில் கூறப்படும் செய்திகள் எல்லாவற்றிக்கும் அடிப்படை. தொடர்ந்து 3 இயலுக்கு மேல் வாசிக்க முடியாது, புரிந்துணர்ந்து வாசிக்க நேரம் எடுக்கும். முடிவில் உங்கள் புரிதலிலும் அணுகுமுறையிலும் நிச்சயம் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அமைப்பு தொடங்க வேண்டும் என்று நினைக்கும் தோழர்களும், அமைப்பு நடத்தும் தோழர்களும் அவசியம் வாசியுங்கள். இந்நூல் உங்கள் அனைவரின் சிந்தனையிலும் எள் அளவு மாற்றத்தையேனும் நிகழ்த்தும்.

ஆசிரியர் அவர்களின் உரை - https://youtu.be/JBrkxWOQ1vs



BOOK: அமைப்பாய்த் திரள்வோம்
AUTHOR: டாக்டர் தொல்.திருமாவளவன்

#Mustread
#Politics


1 review
July 14, 2020
அறிவு சார்ந்த கருத்துக்களை மட்டுமே கொண்ட புத்தகம்
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.