Jump to ratings and reviews
Rate this book

உனைச் சேர உயிர் சுமந்தேன்

Rate this book

272 pages, Paperback

First published December 1, 2014

Loading...
Loading...

About the author

விஜிபிரபு

28 books12 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
0 (0%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
2,121 reviews1,113 followers
March 6, 2018
தன் வாரிசுகளுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதில் கடமை மட்டும் இல்லை அதில் அவர்களின் அளவுகடந்த பாசமும் அவமானங்களைக் கணக்கில் கொள்ளாமல் பிள்ளைகளின் சந்தோஷத்திற்கே தாங்கள் வழங்கும் அர்பணிப்பை காட்டும்.

அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவால் வரும் துன்பத்தைக் காலத்தால் கூட ஆற்றமுடியாது.
பாசக்கார குடும்பத்தில் தேவதையாக இருந்தாலும் பெற்றவர்களிடம் இருந்து வலுகட்டாயமாக விலகி தான் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக்கொண்டு சென்னையில் வேலை செய்யும் மயூரி.தன் கம்பெனி ஓனர்ஷிப் கை மாறியதால் வேலையை விட்டுவிடலாமோ என்று யோசிப்பவளை ஐந்து வருட கான்ட்ராக்ட் போட்டு அங்கேயே கட்டிபோடுகிறான் புது முதலாளி.

வந்தவன் நிவாஸ் என்று கண்டுகொண்டவுடன் அதிர்ந்தாலும் சுதாரித்துக் கொள்பவளை அவன் வார்த்தையாலே துடிக்க வைக்க யாருக்கு வந்த விருந்தோ என்ற மனநிலையில் எதுவும் ஏட்டிக்கு போட்டி பதில் சொல்லாமல் வேலையை மட்டும் செய்கிறாள்.

சில வருடங்கள் முன்பு தொழில் விஷயமாக மயூரி வீட்டிற்கு வந்த நிவாஸ்க்கு அவளைப் பிடித்துப் போக அவளிடமும் சாதகமான பதில் வர, அவளின் பெற்றோரிடம் தன் காதலை சொல்லி சம்மதம் வாங்குபவனுக்கு வில்லியாக அவனின் அம்மா நுழைந்து குட்டையைக் குழப்பி விட்டு மயூரியை அவனுக்குப் பெண் தரமுடியாது என்று அவளின் பெற்றோரையே சொல்ல வைத்துவிடுகிறாள்.

தன்னைக் காதலித்து ஏமாற்றினால் என்று பழிவாங்க தற்போது வேண்டும் என்றே தேடி அவள் வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியை வாங்குபவனுக்கு என்ன கடிவாளம் போட்டாலும் அவளிடம் ஆசை தான் ஏற்படுகிறது.ஒரு நேரத்தில் குடிபோதையில் எல்லை மீறும் போது அவளின் பக்கத்தில் ஏதோ நியாயம் இருக்கும் என்று தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு தாய் செய்த தில்லாலங்கடி வேலையைக் கண்டுபிடித்துக் குடும்பத்துடன் மன்னிப்பு கேட்டு மயூரியின் வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்கிறான் நிவாஸ்.

இயற்கை பற்றி வர்ணனையோ வர்ணனை ..

மயூரி அம்மாவின் பாத்திரபடைப்பு அருமை பெண்ணை பெற்ற தாயின் உணர்வுகளைச் சரியாகப் படம்பிடித்தது மாதிரி.
Displaying 1 - 1 of 1 review