மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து மறுகுரலில் மக்கள் மொழியில் ஒரு பெரும் புதினம் புனைய வேண்டுமென்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. ஒரு மகாசமுத்திரம். அதில் அலையாடும் பெண்களை அணுகப் பேரச்சம். அவர்களுடன் உரையாட மலைப்பு.பாரதப் பெண்கள் பலதரப்பட்டவர்கள். காலங் காலமாகப் போகப் பொருளாகவும் கேளிக்கைச் சாதனமாகவும் நித்திய கன்னியாக வாழ்ந்துவரும் தேவதை கங்காதேவி. யமுனையில் படகோட்டிச் சேவைசெய்த மச்சர் குலப் பெண் சத்தியவதி.ஆணாதிக்கத்தால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவள் அம்பை.தன்னை செயற்கைக் குருடாக்கிக்கொண்டு இயற்கைக் குருட்டுக் கணவனைக் கைப்பிடித்தவள் காந்தாரி.
Poomani (Tamil: பூமணி) (born 1947) is a Sahithya Academy Winning Tamil writer from Kovilpatti in the south Indian state of Tamil Nadu.He won Sahithya Academy Award for his novel Agnaadi in 2014.
மகாபாரதத்தின் சுருக்கிய வடிவம் . மகாபாரதத்தில் உள்ள பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை அதிகம் மேற்கோள் காட்டி எழுதப்பட்டது. மகாபாரதம் மிகவும் பிடித்தவர்களுக்கு இந்த நாவல் பிடித்து போக வாய்ப்பில்லை. நாவலில் கண்ணனை பூமணி நடத்தும் விதம் கிருஷ்ண பக்தர்களுக்கு சங்கடத்தை தரலாம். கிருஷ்ண பக்தர்கள் நாவலை தவிர்ப்பது நல்லது. பூமணி முந்தைய நாவல்களை மனதில் வைத்து படிக்க ஆரம்பித்தாள் ஏமாற்றமே மிஞ்சும்.
This book is strictly not for Lord Krishna Devotees. Narration style is sometimes very annoying. In the introduction the author says Krishna is like my friend, is this the way you portray your friend.......
கொச்சை படுத்தப்பட்ட மஹாபாரத பாத்திரங்கள்... கற்பனை வறட்சியும் தற்கால அரசியல் சரியும் பக்கத்துக்கு பக்கம்... ஜெயமோகனுக்கு போட்டியாக மஹாபாரதம் எழுத நுழைந்துள்ளாரோ என உள்ளது....