பெரியவர்களாகி மனதிற்கினிய வாழ்க்கை வாழ தான் சிறுவயதில் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியது இருந்ததோ...?
கிராமத்துக்கு டாக்டராக வரும் கண்ணம்மாவை அங்கே இருக்கும் நிலை சொல்லி விளையாட்டாகப் பயப்படுத்துகிறார் டாக்டர் ஆனந்தன்.
சிறுவயதில் பிரசவத்தில் தாயை இழந்து, ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் கஷ்டபட்டு டாக்டராகிக் கிராமத்தில் சேவை செய்யச் சொல்லும் தந்தையின் பேச்சை கேட்டு சேவை மருத்துவம் மட்டுமே துணையாக இருக்கும் ஆனந்தன்..அந்த ஊருக்கு பல லேடி டாக்டர் வந்து போனாலும் ஜனங்களின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பவன் இவன் ஒருவனே.
சித்தி கொடுமையைத் தாங்கி எப்படியோ டாக்டராகி இருக்கும் கண்ணம்மாவை தன் தம்பிக்குத் திருமணம் செய்ய முடிவெடுப்பதால் வீட்டை விட்டு வெளியேறி ஆனந்தன் இருக்கும் அதே ஊரில் மற்றும் ஒரு டாக்டராகப் பணி செய்ய வருகிறாள்.
அனைத்து கஷ்டங்களையும் உள்ளடக்கி எப்பொழுதும் சிரிப்புடனே வலம் வரும் ஆனந்தனை பிடித்துவிடத் தன் மனதை வெளிக்காட்டும் கண்ணம்மாவை மறுத்துவிடுகிறான் மருத்துவச் சேவை மட்டுமே தனது வாழ்வின் இலட்சியம என.
அந்த ஊரின் பெரிய ஆள் கண்ணம்மாவை காதலிக்க அவள் ஏன் இங்கு வந்தால் என்று கண்டுபிடித்துத் திருமணத்தை நடத்த பல வழிகளைக் கையாளுகிறான்.
கண்ணம்மா எவ்வளவு நாட்கள் ஆனாலும் ஆனந்தனுக்காகக் காத்திருப்பேன் அது வரை அவருடன் சேர்ந்து சேவை செய்வேன் என்று சொல்லி மறுப்பதால் அவளைப் பலவந்தப்படுத்தும் போது காப்பற்றப்படுகிறாள்.
இப்பொழுது தேவை கண்ணம்மாவிற்குப் பாதுகாப்பு என்று திருமணம் செய்து பிறகு காதலிக்கலாம் என்று முடிவெடுத்து ஊரை விட்டு வேறு இடம் நோக்கி செல்கின்றனர்.