ஔரங்கசீப்பின் கடைசி நாட்களைப் பற்றிய நாவல். இந்திய வரலாற்றில் நீதி மறுக்கபட்டவர்களின் கதையை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்கிறது இடக்கை. தமிழ் நாவல் வரலாற்றில் இந்நாவல் போல வரலாற்றை நுண்மையாக எழுதிய நாவலே இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். மத்திய இந்தியாவில் நடைபெறும் இக்கதை தமிழ் நாவல் பரப்பிற்கு புதிய கதைக்களனை அறிமுகம் செய்துள்ளது.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
“உன் வயிறு ஏன் பசிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கே கல்வி தான் வேண்டும். பசிக்கிற நேரத்தில் உனக்கு மட்டும் உணவு கிடைக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள படிக்கத்தான் வேண்டும், இவ்வளவு ஏன்? நீயும் நானும் மட்டும் ஏன் வேலை செய்து சாப்பிடுகிறோம். சிலர் பணத்திலும் போகத்திலும் திளைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள படிக்கத்தான் வேண்டும் நண்பா.”
‘எஸ்.ராமகிருஷ்ணன்’ எழுதிய ‘இடக்கை’ நாவலிலிருந்து...
இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த இடதுசாரிகளை கொண்ட பாராளுமன்றம் அமையும் இந்த நேரத்தில் இந்த நாவல் மிக முக்கியமான செய்திகளை எடுத்துக் கொண்டு வந்தது. அரசு இயந்திரம் எப்படி சாமானிய மக்களை சீரழிக்கிறது என்பதனை இந்த நாவல் பேசுகிறது.
ஒளரங்கசீப்பின் இறுதிநாளில் தொடங்குகிறது நாவல். அதனைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். ஒருவர் ஒளரங்கசீப்பின் விசுவாசி. அரசியல் கைதி. கைதான உடனே விசாரணை என்கிற தண்டனை தொடங்குகிறது. இன்னொருவர் சாமானியன். தாழ்த்தப்பட்டவர். காத்திருப்பு என்கிற தண்டனை தொடர்கிறது. இந்த இழையில் இருந்து இந்தியாவின் கடந்த காலத்தின், நிகழ்காலத்தின் நீதியை, நீதிமுறையை விசாரணை செய்கிறது இந்த நாவல்.
மரணம் பற்றிய பயம். அதிகாரத்தின் கருணையற்ற இரும்பு கை. முட்டாள்களின் அரசாட்சி. நீதிக்காக காத்திருத்தல். எந்த அரசாட்சியிலும் பெண்களின் நிலை. பசி. ஆட்சியாளர்களுடைய கவிதை பற்றிய பயங்கள். அரசியலில் வியாபாரம். வியாபாரிகளின் அரசியல். காதல். சாதியத்தின் கொடூரங்கள். அன்பிற்காக ஏங்கும் மனித மனங்கள் மற்றும் அதனுடைய இருள் என பல தளங்களில் இந்த நாவல் விரிந்து பரந்து செல்கிறது.
பொதுவாக எஸ்.ரா அவர்களுடைய எழுத்தில் திருடர்கள், பெண்கள், குழந்தைகளின் உலகங்கள் கவித்துவமாக வெளிப்படும் அதுவும் மாய யதார்த்த களம் என்பது அவருக்கு சொந்த மைதானத்தில் சிக்ஸர் அடிப்பது போன்றது.
பள்ளி காலங்களில் முகலாய வரலாற்றை படித்த போது, அதில் ஒளரங்கசீப் மட்டும் தனித்து தெரிந்தார். அரசு பணத்தை கட்டிடம் காட்டுகிறேன் என்று வீணாக்காமல். போதை எடுத்துக் கொள்ளாமல். தன் தேவைக்கு குல்லா தைய்த்து, குரான் படி எடுத்த, இளமையில் தன்னுடைய அப்பாவாலும் முதுமையில் தன்னுடைய மகனாலும் வீழ்த்த முடியாத ஒரு ‘டேவிட் பில்லா’ என்கிற படிமத்துடனேயே இத்தனை நாள் என் மனதில் இருந்த ஒளரங்கசீப்பின் முதுமையை முற்றிலும் வேறு கோணத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர்.
உதாரணமாக, தன்னுடைய இறுதிக் காலத்தில் மரணம் பற்றிய பயம் தன்னை சூழ்ந்திருக்கும் போதிலும் ஒளரங்கசீப் மனதில் நினைத்துக் கொள்வார்.
‘மரணத்தின் காலடி ஓசைகள் கேட்கிறது. ஆனாலும், அது என் அறைக்குள் வர என் அனுமதி கேட்டு காத்திருக்கிறது.” இந்த ஒருவரி ஒளரங்கசீப் என்ற மனிதனின் கதாபாத்திரத்தை அவனது மொத்த வாழ்க்கையை விவரிக்கிறது.
ஒரு புத்தகத்தில் ஏதேனும் சில வரிகள் அருமையாக இருந்தால், அதனை அடிக்கோடிட்டு படிப்பது வழக்கம். என் பிரதியில் முதல் அத்தியாயம் முழுக்கவே இப்போது அப்படி அடிக்கோடிடப்பட்டுள்ளன. இந்த முதல் அத்தியாயத்தை மட்டுமே தனியாக பிரித்து ஒரு சிறுகதையாக வெளியிடலாம்.
நேராக ஒரு விஷயத்தை சொல்வதை விட ஆசிரியர் தன் கதையில் ஒன்றை ஒழித்து வைத்து அதனை வாசகன் கண்டடைவது என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அப்படி இந்த கதையில் எஸ்.ரா பல விஷயங்களை ஒழித்து வைத்திருக்கிறார்.
நாவலின் ஒரு அத்தியாயத்தில் ஒரு கதை சொல்லி புராணக் கதை ஒன்றை சொல்கிறார். அதில் ஒரு புழு நீதி கேட்டு செல்கிறது. ஒரு தேரோட்டிக்கு தண்டனை தரப்படுகிறது. புழு சொல்கிறது, குற்றம் செய்தவள் ராணி அவளை தண்டிக்க வேண்டும். அரசு புழுவை வெளியேற்றுகிறது. பின்னர் அந்தப் புழு கடவுளை நீதி கேட்க அழைத்து வருகிறது. பின்னர் ராணி குற்றவாளி என தீர்ப்பு வந்த பிறகு புழு அவளை மன்னித்து விடுகிறது. இந்தக் கதையை கதைசொல்லி சொல்லி முடித்ததும். விசாரணைக் கைதிகள் தனக்கு ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற செய்தியை எடுத்துக் கொள்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டுமானால் இறைவனே நேரில் வர வேண்டும் என்கிற செய்தியை கதாநாயகன் எடுத்துக்கொள்கிறான். மன்னிப்பே பெரிய தண்டனை என்பதனை வாசகன் கொள்கிறான்.
அதையும் தாண்டி, அடுத்த அத்தியாயத்தில் சிறையில் ஒரு பெண் சொல்கிறாள். அவளுடைய கணவன் கொஞ்ச நாள் முன்பு மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தான் என்று. அவன் ஒரு தேரோட்டி. மேலே சொன்ன கதையில் புழு, ராணி, கடவுள் என்ற பலரும் தங்கள் வேலையை முடித்து கிளம்பிய போதும், “எதற்கு நான் தண்டிக்கப்பட்டேன்?” என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் நின்று கொண்டிருந்த தேரோட்டியின் பிம்பம் இந்த அத்தியாயத்திற்கு வருகிறது.
இன்னும் சில அத்தியாயங்கள் தாண்டி ஒருவனின் பிணம் ஆற்றில் மிதந்து வருகிறது. அவன் ஒரு பிரபுவின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தவன். அவன் யார் எப்படி இறந்தான் என்கிற விசாரணை நடக்கிறது. அதைப் படிக்க படிக்க ‘ஆந்தோன் செகாவ்’ வின் ‘பச்சோந்தி’ என்கிற சிறுகதை நியாபகம் வந்தது.
ஆக, நீதி என்பது புராண காலத்திலும், ஒளரங்கசீப் காலத்திலும், ஆந்தோன் செகாவ் காலத்திலும், இன்றைக்கும் எளியவர்களை நசுக்குவதையே செய்து வருகிறது. இன்றும் சஞ்சய் தத்கள் வெளியிலேயும் ஏழு தமிழர்கள் உள்ளேயும் இருப்பதை காணலாம்.
இந்தியாவின் எமர்ஜென்சி காலத்தில் சிறு சிறு வழக்குகளில் உள்ளே சென்றவர்கள் விசாரணைக்கே அழைக்கப்படாமல் பல நாள் சிறையில் இருந்தனர். அதைப் போலவே இந்த நாவலிலும் காலா என்றழைக்கப்பட்ட திறந்தவெளி சிறையில் பல விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டனர். குற்றங்களில் சாதி இல்லை என்பதால் அனைத்து சாதியினரும் உள்ளே இருந்தனர். ஆனால், குற்றவாளிகளுக்கு சாதி உண்டு என்பதால் அங்கேயும் தீண்டாமை கொடுமை இருந்தது. அங்கே கொண்டு வரப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களும் கழிவுகளை அகற்றும் வேலைகளை தான் செய்தனர், சாதிய கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். இது அப்படியே மனதிற்குள் ஒரு பிரிட்டிஷ் இந்தியாவை வரைகிறது. மொத்த இந்தியாவும் அடிமை அதிலும் சிலர் இந்தியர்களுக்கு அடிமை. கீழே இருந்தவனுக்கு சமூக விடுதலையை கொடுக்காமல் எப்படி பிரிட்டிஷ்காரர்களிடம் இவர்கள் அரசியல் விடுதலையை கேட்டார்கள் என்பது புரியவில்லை. தாழ்த்தப்பட்டவனுக்கு சிறையும் விடுதலையும் ஒன்று தானே. பின்னர். எதற்கு அவன் விடுதலை கேட்க வேண்டும்?
இந்தக் கதையின் நாயகன் ஒளரங்கசீப் அல்ல. மொத்தக் கொடுமைகளையும் அனுபவித்த சாமானியன் தூமகேது தான் இந்தக் கதையின் நாயகன். அவன் இந்தப் பக்கங்களில் ஏதோ ஒரு பக்கத்தில் காணாமல் போய் விடுகிறான். இந்திய மக்கள் கடலில் எங்கு கரைந்து போனான் என்று தேடிக் கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கலவரத்தில் கையில் கத்தியுடன் நிற்கிறான். கொஞ்ச நேரம் கழித்து பல்லாயிரம் மைல் தூரம் கடந்த ஆற்றில் பிணமாக வருகிறான். அவனை புதைத்து விட்டு வீட்டிற்கு போனால் அங்கே எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கிறான். பின்னர் ஒரு விபச்சார விடுதியில் விளக்கு தூக்குகிறான். இது என்ன இப்படி கதையில் சுற்றிக் கொண்டிருக்கிறானே என்று நினைக்கும் போது தான் தெரிகிறது. இது ஒரு தூமகேதுவின் கதை அல்ல. இந்நாட்டில் உள்ள அனைத்து சாமானியனும் தூமகேது தான்.
இதற்கெல்லாம் முடிவாக இறுதியில் தூக்கு கயிற்றை விற்றுக் கொண்டு வருகிறான். மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறான். ‘தப்பித்தல் என்பது வ���று விடுதலை என்பது வேறு’ இது புறத்திற்கு மட்டுமல்ல அகத்திற்கும் சேர்த்தே சொல்லி நகர்கிறான்.
அடையாளம் துறத்தல் தான் எவ்வளவு ஆனந்தமானது என்பதற்கு இந்த நாவலில் ஒரு அருமையான காட்சி வருகிறது. ஒளரங்கசீப் ஒருநாள் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறார் அப்போது ஒருவர் அவரை ஒருவர் “சகோதரா!” என்று அழைக்கிறார். அதுவரை அவரை யாரும் அப்படி அழைத்தது இல்லை. இதை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்.
உண்மையில் மனிதர்கள் அனைவரும் விக்ரமன் படத்தில் வருவது போன்ற அன்பானவர்கள் தான். எந்த தயக்கமும் இன்றி புதிதாக யார் அறிமுகம் ஆனாலும் அவரை பெரும்பாலனோர் சகோதரனாகவே பார்க்கிறோம். அவனது அடையாளம் தெரியும் வரை. அவனது மதம், மொழி, சாதி தெரிந்தவுடனே தான் அவன் நண்பனாகவோ எதிரியாகவோ ஆள்பவனாகவோ அல்லது அடிமையாகவோ மாறி விடுகிறான்.
இதில் பிஷாடன் என்கிற ஒரு அரசன் வருகிறார். இன்று மீம்களில் வரும் அரசியல்வாதிகளுடன் கொஞ்சம் சேடிஸம் சேர்த்தால் வரக்கூடிய உருவம் தான் பிஷாடன். “ஒரு அரசனுக்கு தன் மக்களை தன் நாட்டை அழிக்க கூட உரிமையில்லையா?” எனக் கேட்பவன். வரலாறு நெடுக கொடுங்கோலர்களுக்கு என்ன நடந்ததோ அதே முடிவு பிஷாடனுக்கும் வருகிறது.
இந்த நாவலில் அரசியல், நீதி, கொடுங்கோண்மை என்று பேசப்பட்ட புற விஷயங்களைப் போலவே மனித உணர்வுகளையும் மிக அழகாக கையாண்டுள்ளார்.
கணவனுக்கு உடல் சுகம் தர முடியாத மண்ணாலான பெண் தன் உடலைக் கரைத்து மதுவாக மாற்றி கணவனுக்கு தருகிறாள். அவன் குடிக்கிறான், நண்பர்களுக்கும் கொடுக்கிறான். மதுவின் வெறி அதிகமாக அதிகமாக அவளை மொத்தமாக கரைத்து குடித்து விடுகிறான். இப்போது அவனிடம் கிணறு நிறைய மது இருக்கிறது. ஆனால், மனைவி இல்லை .குற்றவுணர்வு அதிகமாக இப்போது கிணற்றை மூடிவிட்டு ஒரு மதுபானக்கடைக்கு போய் குடிக்கிறான்.
ஏதாவது ஒன்றை அடைய நினைக்கிறோம். அதை அடைய வேண்டும் என்ற வெறியில் அறத்தை கவனிக்காமல் எப்படியாவது அடைந்து விடுகிறோம். பின்னர் முழுவெற்றியை ருசிக்க முடியாமல் குற்றவுணர்வில் தவிக்கிறோம். ஆனால், அதே குற்றவுணர்விலேயே அதனை அனுபவிக்கவும் தொடங்குகிறோம்.
ஊரின் மிக அழகான விபச்சாரி. அந்த ஊரின் அத்தனை பெரிய மனிதர்களையும் பார்த்தவள் ஒரு ஓவியன் மீது காதல் கொள்கிறாள். அப்படியென்றால் காதல் என்பது காமம் கடந்ததா? ஆனால், அவன் தன் தோழியின் காதலன். அப்படியென்றால் காதலில் துரோகம் சரியா? அந்த ஓவியன் அவளை ஒரு வியாபாரியிடம் விற்று விட்டு செல்கிறான். இப்போது எது காதல்?. ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டாலும் இவர்களை தான் இந்த சமூகத்தில் பிழைக்க தெரிந்தவர்கள் என்கிறோம்.
அந்த தோழி இப்போது தற்கொலை செய்து கொள்கிறாள். தன்னை சார்ந்தவர்கள் தனக்கு துரோகம் செய்யும் போது, அவர்களை தண்டிக்க முடியாத போது வெள்ளந்திகளின் மனம் தங்களையே தண்டித்து கொள்கிறது.
“அள்ளிக் கொள்ளுங்கள்” என்று வாசகன் முன்பு ஒரு பெரும் கடலை விரித்து வைத்துள்ளார் ஆசிரியர். இதனை எழுதிய எஸ்.ரா அவர்களுக்கு அவருடைய இடது கையில் முத்தங்கள்.
நான் முதன்முதலாக வாசித்த எஸ்.ராவின் படைப்பு.அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புதினம். சங்கிலித்தொடர் போல நிறைய கிளைக்கதைகள் வாசிப்பவருக்கு உற்சாகம் தருவதாக அமைகிறது.எஸ்.ரா சிறந்த கதைசொல்லியாக வாழ்கிறார் இப்புத்தினத்தில்.விதி வலியது
The Novel is a typical S.Ramakrishnan work that imitates most aspects of his previous works. The dry narrative, the uneven storytelling, the loose prose that frequently makes us question the literary quality of the work, the unrelatable characters that don't have much purpose as the book progresses and more than all that the fact that it appears more like a loosely beaded short stories set in the same setting and time rather than Novel.
It's what you have when you write a few short stories about characters living in the same time, around the same incidents and then split them into various chapters and mix them up.
The set up is in the time period of Emperor Aurangzeb and the year that follows after his death. Right when you think of this as a historical novel, it simply diverges from the path and goes into fantasy and then into some wierd fable that sounds more like a children's story with adult elements into it. And then it diverges its path again into political and casteism debates.
At one point we see that we are being taken criss and cross across different threads which don't point towards any solid ending. And in the end it is what happens, we get nothing solid.
Having said that, one needs to appreciate the many engaging and engrossing chapters we read across. Chapters about Aurangzeb himself , Chapters about the common people, about the jail are particularly filled with intelligent debates on the political circumstances about Monarchy that seems valid even these days. And for that I give it 3 stars.
I really love to read a novel by S.Ramakrishnan that's actually a novel with a solid plot and not short stories in a similar setting that are split as chapters.
எஸ் ராவின் இடக்கையால் எழுதியது போல் ஒரு விசனத்தை தரும் இந்த படைப்பு (நாவல்?) எந்த வகையில் நாவல் வரிசையில் அடங்கும் என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. இதில் வரும் கதாபாத்திரங்கள் தூமகேது, ஆய்ஜா, பிசாடன், ஔரங்கசீப், சம்பு போன்ற ஒவ்வொருவரும் சிறு குட்டிக்கதைகள் மூலமாக எங்கும் ஒட்டாமல் பயணிப்பது அலுப்பை தருகிறது. ஏதோ எழுதவேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக எழுதியது போன்றும் இடக்கைக்கும் இக்கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போன்ற பிரமையைத் தருகிறது. மொத்தத்தில் எஸ் ராவின் மிக மோசமான படைப்பு எது என்றால் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும் என்று நம்பத் தோன்றுகின்றது.
நாவல் : இடக்கை ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : உயிர்மை நாவலைப்பற்றி……. கை மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மனிதனின் இரு கைகளில் ஒன்று வலக்கையாகவும் , மற்றொன்று இடக்கையாகவும் அறியப்படுகிறது, பொதுவான விமர்சனமாய் மனித சமூகத்தில் வலக்கைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இடக்கைக்கும் எப்போதும் கிடைப்பதில்லை( இடக்கை பழக்கம் கொண்டவர்களைத் தவிர) இடக்கை எனும் போதே மனித மனதினுள் இழிவு என்ற எண்ணம் தானாகவே தோன்றுவது இயல்பாய் அமைந்த நேரத்தில் ”இடக்கை” என்ற தலைப்பைக் கொண்டே நாவலின் வரவு எனக்குள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு அதை வாங்கத்தூண்டியது. இதற்கும் இந்நாவலுக்குமான என்ன தொடர்பு இருக்கமுடியும் என்ற கேள்வியோடே படிக்கத் தொடங்கிய போதே இதன் முக்கிய கருத்தாக்கத்தை நம்முள் ஆழமாய் பதித்துவிடுகிறது. இந்நாவல் இல்லாதவர்களின் வாழ்வையும், அவர்களின் இயலாமையையும் அதனால் ஏற்படும் இழிநிகழ்வுகளையும், நீதிகளின் மறுபக்கத்தையும் அதன் இயல்பானத் தோற்றத்தை ஒரு கானல் நீராக்கி எளிய மனிதனின் தாகத்தை போக்கும் சாதனமாய் இருப்பதையும் பற்றி விரிவாயும் அழுத்தமாயும் பேசுகிறது. நாவலின் காலம் ஒளரங்கசீப்பின் அந்திமக் கால வரலாற்றுக்கதையை வேராய் பற்றி சமகால பிரச்சினைகளின் கதாபாத்திரங்களை அக்காலப் பாத்திரங்களின் புனைவகளாய் உட்புகுத்தி வேறுபாட்டைக் கொணராமல் ஒன்றரக்கலந்து நம்மை அதனுள் ஈர்த்துக்கொள்கிறது. ஆசிரியரின் சிறப்பாக கதை ஒரு தளத்தில் தொடங்கி நேர்கோட்டில் சென்று முடியாமல் பல்வேறு கதாபாத்திரங்களை புகுத்திக் கதைக்குள் கதையாக விரிந்து அதன் பாதையில் பயனித்து முடிவில் நாவலின் முக்கியக் கதாபாத்திரத்தின் தொடக்கத்திற்கு முற்றுப்புள்ளியைக் குறீயீட்டால் உணர்த்தி முடித்து வைக்கிறார். எதனடிப்படையில் இது குறீயீடாக மாறுகிறது என்பது நாவலின் முக்கிய கதாபாத்திரமான தூமகேது சிறுபான்மை இனத்தில் பிறந்து ஒளரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குள் உட்படும் சிற்றரசனான பிஷாட மன்னன் ஆளும் சத்கர் மாநிலத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் ஆட்டுத்தோலைத் திருடினான் என்ற பொய்யான குற்றம் சாட்டப்பட்டு காலாச் சிறையில் தள்ளப்படுகிறான். இவனுடைய ஏழ்மையும், பிறந்த சாதியும், இவனுக்கெதிராக அத்துனை சாட்சியங்களையும் வரவேற்கிறது. இவனது சமூகம் இந்த அதிகார வரம்பின் அக்கிரமத்தை எதிர்க்க முடியாமல் அடங்கி ஒதுங்கி சிதறும் நிலையில் சமகால நீதி எப்படி உள்ளவனுக்கு ஒரு விதமாகவும் இல்லாதவனுக்கு ஒரு விதமாகவும் கொடுக்கப்படுகிறது என்பதை புனைவோடு நகர்த்திச்செல்லுகிறார். சிறையினுள் அவனுக்கு பெரும்பான்மை சாதியினரால் ஏற்படும் சொல்ல முடியாத துயரத்தின் விளிம்பில் அதே உயர்நிலை சாதியன் ஒருவரின் உதவியால் தன்னை சிறையிலிருந்து விடுவித்து புதிய மனிதனாய் பரிணமிக்க உதவிகிறார். அதன் பிறகான அவனது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில் சிரமமாக்க் காட்டியிருந்தாலும் சாதியினடிப்படையிலான துயரம் கொண்டதாய் இல்லாமல் நகர்ந்து அவனது குடும்பத்தை கால இயலாமல் ஒடுங்கும் நேரத்தில் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகான அரசியல் மாற்றங்களும், அவன் குடும்பத்தைத் தேடி உயிரை ஒடுக்கலாம் எனும் கட்டத்தில் அந்நகரில் நடக்கும் தர்கா ஊர்வலத்தில் கிடைக்கும் நீரும் உணவும், ஒளரங்கசீப்பின் குல்லாவும் , சாமந்திப் பூ மாலையுமாய் கதை முடிகிறது. தர்காவை நோக்கிய பயணம் அவனுக்கான புதிய ஆரம்பக் குறியீடாக இருக்கலாமோ என்ற எண்ணத்தை எனக்குள் தோன்ற வைக்கிறது. நாவலில் மற்றுமொரு ஆழமான கதாபாத்திரமாய் வருவது ஒளரங்கசீப்பின் அந்தரங்க உதவியாளாய் பணிபுரியும் அஜ்யா எனும் கதாபாத்திரம். இவர் ஒரு அரவாணி. இவரின் ஆரம்பமும் அந்திமமும் துயரமிக்கதாய் இருப்பினும் இவருக்கான இடைப்பட்ட வாழ்க்கைக் காலம் பேரரசரின் கீழான பணி என்ற பெருமையையும், ஒளரங்கசீப்பின் உயிலில் அவருடைய பெயரும் உட்படுத்துமளவிற்கான நம்பிக்கை கொண்ட மிகப்பெரிய ஆளுமையாக வருகிறார். அரசரின் நிழலாய் இருந்த காரணமே அவளது அந்திமக்காலத்தை துயர்மிக்கதாய் மாற்ற காரணமாய் இருந்து விடுகிறது. கடைசிக்காலத்துயரத்தை வாசிக்கும் நேரம் நம்முள் மனம் கனம் கொள்வதை உணர முடிகிறது. நாவலின் களம் பல்வேறுபட்ட தளங்களை தன்கையில் புனைவாக்கி சதுரங்க விளையாட்டை தொடர்கிறது. இது அரசியல், நீதி, சாதீயம், மொகலாயப் அரசின் வீழ்ச்சி, அதன் பின்னான காலனி ஆதிக்கம் என எல்லா நிலைகளையும் தொட்டிருப்பதும் தத்துவார்த்த அடிப்படையிலான கருத்தியல்களை கொண்ட நாவலாய் பரிமளிப்பதும் பெரும் பலத்தைக் கொடுக்கிறது. நாவலின் பலத்தைப் பற்றி சொல்லும் நேரத்தில் எழுத்துப் பிழைகளால் உயிரோட்டமான கதாபாத்திரத்தின் பெயரை இரண்டு இடங்களில் மாற்றியிருப்பதும், வரலாற்று நிகழ்வுகளின் சில வெளிப்படையான தவறுகளும், ஒரு குறிப்பிட்ட சாதீயின் பெயரை வெளிப்படுத்தி நாவலை சாதீயக் குறியீடுக்குள் கொண்டு வர நினைப்பதும் , இசைக்கலைஞர்களையே பிடிக்காத ஒளரங்கசீப் போருக்குப் போகும் போது தன்னுடன் இசைக்கலைஞர்களை கூட்டி செல்வதாய் சொல்வதும் முரண் சமக்காலத்து எழுத்தாளர் என்பதால் சமகால சமூகப்பிரச்சினைகளை உட்புகுத்த நினைக்கும் நேரத்தில் இன்றைய சாதீயத்தின் கொடுமையை யார் செய்கிறார்கள் என்பதை மாற்றி பழங்கதையை உட்புகுத்தி இன்றைய நிலைமையை மறைப்பதாய் தோற்றம் கொள்ள வைக்கும் நேரத்தில் மண்புழுவின் கதை மூல இன்றைய நீதியை நேர்மையாக பகடி செய்திருப்பது போற்றுதலுக்குரியது. நாவலின் மொழிநடையும் சிறிது விமர்சனத்திற்குட்படுவதாய் தோன்றுகிறது. காரணம் மொழிபெயர்ப்பு நாவல்களின் மொழிநடை சில இடங்களில் கொண்டிருப்பதாக இருக்கிறது. நாவலின் பலவீனத்தைத் தவிர்த்து நோக்கும் போது நாவலானது இன்றைய சமகால விவகாரங்களை வரலாற்றின் நிகழ்வில் புனைவுகளாய் புகுந்து நம்முள் இன்றைய காலத்தின் மாற்றத்தின் தேவைக்கான கருத்துக்களாய் ஆணியாய் உறைய வைக்க முயற்சிக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை…
It's not a novel with one story, the tales are interweaving, unrelated and left for your own interpretation if you really want to connect. It's still fantastic for common readers.
இந்த நாவலைப்ப்றி எந்தபொரு எதிர்பார்ப்பும் இல்லாமலே வாசிக்க் ஆரம்பித்தேன். முதலில் வாசிப்பிற்க்கு பிடிக்கொடுக்காமல் இருந்த நாவல் , நேரம் செல்ல செல்ல வசப்பட்டது.
இந்த நாவல் பலவாறு தன்னை விரித்துக்கொண்டு செல்கிறது. பலக்கதைகள் ஒரு மையத்தை நோக்கி நடக்கின்றன. அந்த மையம் நீதி. நீதி என்பது என்ன?
நீதி என்பது ஒரு வரையறக்கு உட்பட்டதன்று. அது இடத்திற்கு தகுந்தவாறு தன்னை வளைத்துக்கொள்ளும் அல்லது வளைக்கப்படும். ஆளுக்கேற்றவாறு அதை வளைத்து கொண்டு வாழ்வதே அதிகாரத்தில் இருப்பவர்களின் வாடிக்கை. இல்லையெனில் அவர்கள் அழிந்துவிடுவார்கள்.
நீதியினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அதிகாரத்த்ற்க்கு உட்பட்டவர்களும் , சமூதாயத்தில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருப்பவர்களும், கீழ்சாதிக்காரர்களும் தான். இதை சொல்வதே இடக்கை.
Lot of potential in the book, but was rushed to finish.
The book started with lot of potential. Plot wandered with its main character without any purpose. Felt like historical context was go de fitted to tell the story of a commoner. Characters were short lived, under developed and wasted.
ஔரங்கசீப் காலத்தில் நடக்கும் இக்கதை non-linear பாணியில் எழுதப்பட்டுள்ளது. பல விசித்திர மனிதர்களை நேரில் சந்தித்தது போல ஒரு அனுபவம். ஆங்காங்கே fantasy சாயலும் தென்படுகிறது.
ஆட்சியும், அதிகாரமும் எப்ப தோன்றியதோ அப்ப இருந்து மறுக்கப்பட்ட நீதிக்கான குரல்களும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன, அப்படி நீதி மறுக்கப்பட்டவர்களின் வேதனை குரலே இடக்கை.
மாபெரும் இந்துஸ்தானத்தின் மன்னர் ஔரங்கசீப் தன்னுடைய மரணம் எப்படி நிகழும்னு தெரிஞ்சுக்க பாலைவனத்தில் உள்ள ஷுபியை பார்க்க பயணப்படுவதாக தான் கதை தொடங்குது.
என்னதான் மனிதன் மரணத்தை பற்றி வெளிப்படையாக பேச மறுத்தாலும் எல்லா மனிதனுக்கும் தன்னுடைய மரணம் எப்படி, எங்கு நிகழும்னு தெரிஞ்சுக்க ஆர்வம் தான். ஏனென்றால் மரணத்திற்கு பின்னான வெறுமையையோ, இல்லாமையயோ எந்த மனித மனமும் ஒரு போதும் ஏற்று கொள்வது இல்லை.
வாழ்வின் சுக போகங்களை அனுபவித்த மன்னருக்கு பாலைவன வெயிலும், வறட்சியும் தான் முதல்முறையாக ஒரு மனிதன் நிம்மதியாக வாழ ஒரு மரமும் அது தரும் நிழலும் மட்டும் போதாதானு யோசிக்க வைக்குது.
அதிகாரம் தரும் அகந்தையும், அறியாமையும் எவ்வளவு கொடுரம்னு, ஔரங்கசீப் தன்னால அடக்க முடியாத குதிரையை வெட்டி வீழ்த்திய இடமும், கேலி செய்ததற்���ாக தாதியை யானையின் காலில் இட்டு கொலை செய்ததும், முட்டாள் அரசன் பிசாடன் தான் வளர்த்த குரங்கையும், ஆயிரக்கணக்கான நாய்களையும், பல சாமனியர்களை கொன்று குவிக்கிற இடம் உணர்த்துகின்றன. உண்மையில் அதிகாரத்தின் கண்களுக்கு குதிரையோ, நாயோ, குரங்கோ, மனிதனோ எதுவும் தெரியாது அதிகாரத்திற்கு தெரிந்ததெல்லாம் அடக்குமுறை மட்டுமே.
ஔரங்கசீப்பின் இறப்பிற்கு பிறகு புதையல் ரகசியம் தெரி���ும் என அஜ்வாவும், பொய் குற்றத்திற்காக சத்கரில் தூமகேதுவும் எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யப்படுகிறார்கள். உண்மையில் ஒருவன் குற்றமற்றவன் என நிருபிக்க தான் காரணங்கள் தேவை குற்றவாளி என நிருபிக்க அதிகாரத்திற்கு எந்த ஒரு காரணமும் தேவைப்படுவதே இல்லை ஒரு சில அனுமானம் தவிர.
கதையில் வருகிற இடக்கை பற்றியான குறிப்பு தூங்கிட்ட இருக்குற ஒருத்தன சட்டென எழுப்பிய மனநிலைய ஏற்படுத்திவிட்டது. நம் உடலின் அங்கமான கைகளுக்குள் எவ்வளவு பாகுபாடு. வலது கைக்கு குடுக்குற மரியாதை இடக்கைக்கு எப்பொழுதும் குடுக்குறது இல்லை. இடக்கை பற்றியான குறிப்பு கதை நெடுக தொடர்ந்து கொண்டே இருக்கு அது இடக்கை யின் இருப்பை தொடர்ந்து உணர்த்திட்டே இருக்கு. இடக்கை என்பது வெறும் உடலின் அங்கம் அல்ல அது மறுக்கப்பட்ட நீதிக்கான அடையாளம்.
அஜ்வா என்கிற திருநங்கை தனது பால்ய கால நண்பனான தர்சனை சந்திக்கின்றன இடத்துல நடக்கிற உரையாடல் தான் மனித மனதோட உச்சம்-னு நினைக்கிறேன். சக மனிதனோட அதீத கோவத்தையோ, வெறுப்பையே கூட ஏற்று கொள்கிற மனித மனம், ஒரு போதும் அதீத அன்பை மட்டும் ஏற்று கொள்ள முடிவதே இல்லை. அது அவனை குற்ற உணர்ச்சிக்கு தள்ளுகிறது.அத்தனை அன்பிற்கும்,கருணைக்கும் தான் நிகரானவன் இல்லை என நினைக்க வைக்கிறது அதீத அன்பும்,கருணையும்.
கதையின் பிற்பகுதியில் அஜ்வாவிற்கு ஏற்பட்ட அவமானங்களையும், அநீதிகளையும், அது எல்லாவற்றையும்விட வாழ்வின் இறுதியிலும் கூட நன்றி சகோதரானு சொல்லி நிற்கிற இடத்தை என்னால அவ்வளவு எளிதாக கடந்து போக முடியல.
கதைகளின் உதவியால் சத்கரில் இருந்து தப்பிய தூமகேதுவிற்கு அதன் பிறகு நடக்கிற எல்லா சம்பவங்களும் ஒன்றை மட்டும் உணர்த்துகின்றன. தப்பி பிழைப்பது மட்டும் ஒரு மனிதனுக்கு நீதியையோ,இயல்பு வாழ்க்கைய குடுத்துறாது. தூமகேது அதன் பிறகு தன் குடும்பத்த தேடி பயனப்படுகின்ற எல்லா இடங்களிலும் நீதிக்காக போராடுற குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. தூமகேது தனிமனிதன் இல்லை, கடைசி வரை தனக்கான நீதியை பெறாமல் நிர்க்கதியா நிற்கிற மனிதர்களின் அவல குரல் தான் தூமகேது.
இப்படி இடக்கைகளா நினைச்ச ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கண்டும் காணாம கடந்த போகிற சாமானிய எளிய மனிதர்களின் போராட்டமே இடக்கை.எந்த மனிதனுக்கான நீதியும் எளிமையா கிடைத்து விடுவதே இல்லை ஆனால் மனிதன் ஒருபோதும் தனக்கான போராட்டங்களை நிறுத்தி கொள்வதே இல்லை. ஒரு வேலை அதில் அவன் தோற்று கூட போகலாம் ஆனாலும் தனக்கான நீதி எங்கேயேனும் கிடைக்குமென தேடிச் செல்கிறான்.
இடக்கை வெறும் கதை அல்ல - எது நீதி, அநீதி, எது குற்றம் எது குற்றத்திற்கான தண்டனை, உண்மையில் தண்டிக்க படுவது மட்டும் தான் தண்டனையா அப்படியென்றால் அதற்கான கால வரையறை என்ன என்பதை பற்றியான மதிப்பீடுகளையும், மனித வாழ்வு எவ்வளவு அற்பமானது என்பதை பற்றியான புரிதலும் தான் இடக்கை.
எஸ்.ராவின் உரைகளை ரசித்த என்னை அவரின் எழுத்துகளையும் பெறும் காதல் கொண்டு ரசிக்க வைத்து விட்டது இடக்கை நாவல்.
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் நாவல் தேசாந்திரி பதிப்பகம் 332 பக்கங்கள்
இந்த நாவலின் தலைப்பில் இருந்தே இந்த பதிவினை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். நம் உடலில் ஒரே மாதிரியாகவே இருந்தாலும் நாம் இரண்டு கைகளுக்கும் ஒரே மதிப்பு கொடுப்பதில்லை. பெரும்பாலும் இடது கையை நாம் பல முக்கியமான வாழ்க்கை தருணங்களில் புறக்கணித்து விடுகிறோம். நல்லது செய்தாலும் வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வலது கை யாருக்கும் தெரியாமல் எத்தனை தீமைகளை செய்கிறது. அதனை இடக்கை அமைதியாக வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறது. அவவ்ளவு ஏன், ஒருவரை காட்டிக்கொடுப்பதும், குற்றம் சுமத்துவதும், எளியோரை எதிர்த்து ஓங்குவதும், ரகசியமாக ஏமாற்றுவதும் என வலக்கை செய்யும் தவறுகளுக்கு அளவுகளே இல்லை. இத்தனையும் அருகில் இருந்து பார்க்கும் ஒரே சாட்சி இடக்கை தான். ஆனால் தன் மீது காரண காரியமின்றி சுமத்தப்படும் பல அநீதிகளை சுமந்து வலக்கைக்கு உருதுணையாக இருக்கும் இடக்கை போல இந்த மண்ணில் நீதி மறுக்கப்பட்டு, நீதிக்காக காத்திருக்கும் மனிதர்களை பற்றிய கதையே இந்த இடக்கை நாவல்.
இந்த நாவல் வாசகனுக்கு ஒரு பெரும் சவாலை கொடுக்கும். நீதிக்காக காத்திருக்கும் மனிதர்களின் பொறுமை எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது நம் பொறுமையை இந்த நாவல் சோதிக்கும் வழி நமக்கு புரிய வைத்துவிடும். வெறும் கதைகளாக இந்த நீதி மறுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை வாசிக்கவே நமக்கு பொறுமை இல்லையென்றால் நிஜத்தில் அத்தனை துயரத்தை தாங்கி, தங்கள் குடும்பத்தை பிரிந்து, தாங்கள் செய்யாத தவறுகளுக்கு தன் வாழ்க்கை முழுக்க நீதி கேட்டு கேட்டு மாண்ட மனிதர்கள் எத்தனை இன்னல்களுக்கு ஆளாகியிருப்பார்கள்.
ஒளரங்கஜிப் இறக்கும் தருணத்துடன் கதை தொடங்குகிறது. அடுத்த மணிமுடிக்காக அவர் மகன்கள் போட்டி போட. ஒளரங்கஜிப் தன் அந்தரங்க மெய்காப்பாளரான அஜ்யா என்ற திருநங்கையிடம் வரைபடம் கொண்ட ஆட்டுத்தோல் ஒன்றை ஓர் இடத்தில் கொடுக்க சொல்லிவிட்டு மாண்டுவிட, அஜ்யா சிறைபிடிக்கப்படுகிறாள். அதே சமையம் பிஷாடா என்ற மன்னன் ஆளும் சத்கர் என்ற நாட்டில் தூமகேது என்ற ஆட்டுத்தோல் பதப்படுத்தும் ஒரு தொழிலாளி தான் செய்யாத ஒரு திருட்டுக்காக சிறைபிடிக்கப்படுகிறான். இவர்கள் இருவரும் வேறு வேறு சிறைகளில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து தங்கள் நீதிக்காக காத்துகொண்டிருக்கின்றனர்.அஜ்யா சிறையிலேயே சித்திரவதை செய்து கொல்லபடுகிறாள். தூமகேதுவோ சிறையிலிருந்து தப்பித்து விடுகிறான். ஆனால், அவன் திரும்பி வரமாட்டான் என்று எண்ணி அவன் மனைவியும், பிள்ளைகளும் ஊரை விட்டு சென்று விடுகின்றனர். அவர்களை தேடி இவன் கால் போன போக்கில் காற்று செல்லும் திசையில் அலைகிறான். பல் வேறு ஊர்களுக்கு சென்று பல விதமான மனிதர்களை சந்திக்கிறேன். இறுதியில் தூமகேது என்ன ஆனான்? தன் குடும்பத்தை கண்டடைந்தானா? அவனுக்கு நீதி கிடைத்ததா? முகாலிய அரியணை யாருக்கு கிடைத்தது? பித்து பிடித்து புத்தி கெட்டு ஆண்ட பிஷாட மன்னனின் நிலைமை என்ன ஆனது? என்பதே இந்த நாவலின் முடிவு.
ஒவ்வொரு கதையும் அதனை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனிடம் ஒரு கருத்தை விதைத்து செல்லும். அந்த விதை எவ்வளவு காலம் ஆனாலும் அவன் மனதை முட்டி முளைத்து ஒரு பெரும் விருட்சமாக மாறி வேரூன்றி அவனுக்குள் அது பரவி விடும். அப்படி இந்த கதை எனக்குள் ஒரு விதையை ஆழமாக புதைத்து விட்டது. இந்த உலகில் மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர். ஒன்று உண்மை என்னவென்றே அறிந்து கொள்ள விரும்பாதவர், இரண்டு - அறிந்து கொண்ட உண்மையை வெளியில் சொல்வதா? வேண்டாமா? நம்பலாமா? வேண்டாமா என்று குழப்பத்தில் உள்ளவர். மூன்று - தான் அறிந்த உண்மைகளை இந்த உலகிற்கு உரக்க சொல்பவர்கள். நான் இந்த மூன்றாம் ரகத்தை சேர்ந்தவன். நீங்கள்?
The reason for the title of the book is different and thought provoking. The name and plot makes more sense. The story starts off great with final day of aurangazeb followed by arrest of two common people doomakedhu and ajya. Why are they arrested, the history from their birth till then followed by sequence of events that happen taking them to death is the rest of the plot.
On the whole it is a different start and a very good plot to have. The way SR has taken the plot bringing in some of the actual incidents that happened around the period is great. The thought process and life around the period + cruelity around the period that common people had to face is well explained. When we think on why british rule was kind of blessing for people of india, this story could well help us understand it.
Like how compared to right hand, left hand is treated inferior. The story talks on common inferior people - one person from low caste and another person who turned himself to female being the common thread towards the title is awesome. Where the story loses plot is after escaping from prison dhumakedhu's travel and also being in a place where a person similar to him passes away, does not fit in with the thread and felt like a different plot all together. With some little changes or may be finishing the story a bit earlier the book could have become one of the best by SR.
Still for the thought of it and for the imagination of SR, I would recommend the book, may be you will enjoy lot more than me.
Typical S Ramakrishnan's novel. The novels setting is North India which is quite strange. After the Perumal Murugan issues the author may wanted to deliberately make the story setting out of Tamil Nadu so his criticism of castes, rulers etc won't become an existentialistic issue for him. Not sure whether i can call the novel as political satire or black humour. But unlike his earlier works this one talks political topics bravely. The protagonist "thoomakethu" (who belongs to a lowest caste) and how his life is being destroyed by dominant caste people, the people in power, the ruler etc. The connected strings are king "pishaadan" and emperor "Aurangzeb". The authors philosophical questions are kept on coming through different characters on various subjects like politics, justice and casteism etc. As usual author s.ra uses his abstractive writing with symbols, magical realism techniques which a novice reader might feel difficult to follow. Overall, A good read!
இடக்கை நீதி மறுக்கப்பட்டவனின் கதை. சமூகத்தாலும் சரி அரசாலும் சரி நீதி மறுக்கப்பட்டவனின் கதைதான் இடக்கை. அப்படி நீதி மறுக்கப்படுவதால் அவனது வாழ்க்கை முற்றிலுமாக திசைமாறி படுகுழிக்குள் செல்கிறது அவனது குடும்பம் என்ன ஆகிறது அவனது வாழ்க்கை என்ன ஆகிறது ஒருவனுக்கு நீதி மறுக்கப்படும் போதே இப்படிப்பட்ட விளைவுகளை அது ஏற்படுத்தும் என்றால் நீதி மறுக்கப்பட்ட ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்து இருப்பர் என்று எண்ண வைக்கிறது. அவுரங்கசீப்பின் இறுதி நாட்களையும் அவுரங்கசீப்பின் அரண்மனையையும் அந்தப்புரத்தையும் அவரது வழக்கத்தையும் விவரிக்கும் பொழுது எஸ்ரா அவர்கள் அந்த அரண்மனைகளை எல்லாம் கண் முன்னாலேயே நிறுத்தி விடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் பல கிளைகள் கதையில் விரிய விரிய சில இடங்களில் அந்த கதையின் போக்கு யதார்த்தத்திலிருந்து சற்று விலகி இருப்பது போல் தோன்றியது.
ஔரங்சிப் இறக்கும் தருவாயில் இருந்து அரம்பிக்கிறது கதை. அப்போது தான் அவர் தன் ஆட்சி காலத்தில் அளித்த தவறுகளையும் அநீதிகளையும் உணருகிறார். அவர் இறந்த பிறகு ஆசம் ஆட்சிக்கு வருகிறார். அவரால் அஜ்யா என்னும் பணியாள் கைது செய்யப்படுகிறார். அதேபோல் பிஷாடன் என்னும் குருநில மன்னனால் தூமகேது(ஆட்டுத்தோல் உறிப்பவன்)ம் கைது செய்யப்படுகிறான். இவர்களின் கதை மற்றும் இவர்கள் சந்திக்கும் மனிதர்களும் அவர்களுக்கு கிடைத்த அநீதியே கதை. பிஷாடன் செய்த முட்டாள் தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
The author covers historical and a glimpse of Aurangzeb rule. But there is no story plot. But I enjoyed the whole book because of historical facts and the excellent translation. Being a Tamil speaking person I've read this English version because of the unavailability of the Tamil Novel Idakkai in Kindle version.
Set in the backdrop of end of Mughal era and the beginning of British rule, the work is very much like his previous work Yamam. Parallel stories with multiple characters, with strong descriptions, a bit of slow tempo..The story begins with the death of Arungazeb, and traverses the lives of his personal assistant Ajya, who is an eunuch, Dhoomakethu, who is an outcast and is imprisoned for a crime which is not committed by him to name a few. Throws light on how kings get crazy, intoxicated with power and how the society bears the brunt of bad leadership