சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் காலம் கடத்தினாலும் அதனால் தவறாகப் புரிந்து கொண்டு அதை வாய்ப்பளிப்பவருக்கே இழப்பு அதிகம்.
சிறு பெண்ணாக இருப்பதால் தான் காதலிக்கும் அத்தை பெண் மஞ்சரியிடம் வேல் சொல்லாமல் பழகுவதால் அவன் வேறு ஒருத்தியை காதலிப்பதாகத் தவறாக நினைத்து அவனிடம் இருந்து ஒதுங்கி செல்கிறாள்.
ஜாதியால் தன் நண்பன் காதலில் தோல்வியடைந்து போதை பழக்கத்திற்கு அடிமையாகியவனைக் குணமாக்கி அவன் காதலியின் கணவன் விபத்தில் இறந்த பிறகு காதலனுடனே மறுமணம் நடத்தி வைக்கிறான் வேல்.
மாமாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவசர அவசரமாக இவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். அதன் பிறகு நண்பன் காதலியுடன் பேசுவதைத் தவறாக நினைத்து கர்ப்பமான நிலையில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் மஞ்சரி.
நான்கு வருடங்களுக்குப் பிறகு தன் கணவன் வீட்டிற்கு வரும் மஞ்சரி உண்மை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள்.