சொந்தமே என்று அடுத்தப் பாலினத்தின் மீது அன்பு பாராட்டுவது எதாவது ஒருபுள்ளியில் அவர்களை விட்டு விலகி வாழமுடியாது என்பதை உணர்த்திவிடும்.
பெற்றவர்களை மீறி காதலனை மணந்த மஹாலக்ஷ்மி சில வருடங்களுக்குப் பிறகு மூன்று குழந்தைகளுடன் கணவன் கைவிடத் தாய் வீட்டிற்கு அடைகலமாகி வீட்டின் வேலைக்காரியாகிறாள், ஆனால் அவளின் தம்பி பணத்திற்காக எவரிடமும் சார்ந்து இருக்கக் கூடாது என்று சிறு தொழிலையும் ஏற்படுத்திக் கொடுக்கிறான். அவளின் முதல்மகள் தீபாவை தாய் செய்த தவறுக்கு அடிமை மாதிரி நடத்துகின்றனர்
ஆதாரவில்லாத நேரத்தில் உதவி செய்ததால் நன்றிகடனாக அனைத்தும் தாங்கி கொள்கிறாள்.
தன் படிப்பிற்காகத் தானே உழைக்கும் தீபாவிடம் மஹாலக்ஷ்மியின் தம்பி ஜெய்சங்கருக்கு மதிப்பு அதிகம். இருவருமே அடுத்தவர்களை நன்றாக புரிந்து வைத்து இருப்பர். தீபாவின் தங்கை காதலனை மணக்க இருப்பதால் உடனடியாகத் தீபாவிற்குத் திருமண ஏற்பாடு செய்யத் தொடங்கும் போது ஜெய்சங்கரே மணந்து கொள்கிறான். ஒருவருடம் பிறகு பிரியலாம் என்று சொல்லி இருவருக்குமே திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருப்பதால். அவனுக்குத் தொழிலில் அக்கறை, இவளுக்குத் தந்தையால் ஆண்களின் மீது வெறுப்பு.
திருமணம் நடந்த ஒருவருடத்தில் இருவருக்கும் பல மாற்றங்கள். ஐந்து வருடங்களாக மனதில் தீபாவை நினைத்துத் திருமணத்தை ஜெய்சங்கர் தள்ளி போட்ட உண்மையை உரைக்க அவன்பால் தன் மனம் சாய்ந்ததை உணருகிறாள். இருக்கும் உறவுகள் சுயநலமாகத் தங்களை நெருங்குவதைப் பிடிக்காமல் தனிகுடும்பம் சென்று தொழிலிலும் வாழ்க்கையிலும் முன்னேறுகின்றனர்.
உறவுகளின் சிக்கல்கள், எப்பொழுது மற்றவர்களைத் தனக்குக் கீழே கொண்டுவருது என்பது, தாயே என்றாலும் பிள்ளைகளிடம் பாரபட்சம் பார்ப்பது என்று நுணுக்கமான விஷயங்கள் கையாளப்பட்டிருக்கிறது.