நொடியில் அவசரப்பட்டு எடுத்த முடிவு பலரை துன்பத்தில் ஆழ்த்திவிடும்.
கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து கௌதம் கம்பெனிக்கு வரும் ப்ரியங்காவிற்கு அவன் மீது காதலாக, அவனுக்கும் அவளைப் பிடித்துப் போக தன் நண்பனின் தங்கையானவளை பெரியவர்கள் ஆசிப்படி திருமணம் செய்து கொள்கிறான் தாய் ஊரில் இல்லாத போது,அவரிடம் அந்தஸ்து மோகம் அதிகம் இருப்பதால் இந்த உடனடி திருமணம்.
காதலில் கட்டுண்டு இருக்கும் ப்ரியங்காவை ஊரில் இருந்து வந்த கௌதமனின் தாய் மிரட்ட அதே நினைப்பில் வண்டியோட்டி வருபவள் விபத்தைச் சந்திக்கிறாள். இவளின் அம்மாவின் அப்பா ஜோத்பூர் ராஜா பரம்பரை ,காதலித்துத் திருமணம் செய்தார் என்பதால் விலக்கி வைத்தவர் மகள் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று தெரிந்து பிடிவாதம் விலகி பேத்தியை தேடி வரும் போது அவளே விபத்தில் சிக்கியதை பார்த்து தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார் அவளின் தாத்தா.
கார் விபத்தில் தன் மனைவி இறந்துவிட்டாள் என்று பித்துபிடித்தவனான கௌதமனின் மனதை சிபியும், அவனின் மனைவியான கௌதமனின் தங்கை தான்யாவும் மாற்றுகின்றனர்.அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு அதுவே கௌதம் உலகமாக மாறுகிறது.
விபத்தில் முகம் சேதமடைய இரண்டு ஆண்டு இடைவெளியில் அதை சரிசெய்து புதுமுகத்துடன் தன் சொந்தங்களைத் தேடி வருகிறாள் ப்ரியங்கா.
தவறு செய்தவர்களின் தவறுகள் மன்னிக்கப்பட்டுக் குடும்பம் இணைகின்றது.