பிரபஞ்சத்தில் உலாவும் அனைத்துமே அடுத்தவர்களுக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பெண் என்ற உருவத்திற்கு உயிர் கொடுக்கும் போதே மற்றவர்களுக்குத் தன்னால் ஆன உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆழமாகப் புதைத்தே உலகிற்கு அனுப்பப்படுகிறாள் பல இன்னல்களைத் தாங்கி கொண்டு முடிவை நோக்கி சென்றாலும்.
பள்ளி படிப்பை முடித்த சாரதா தன் பாட்டிக்கு பயந்து கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் வீட்டிலே இருக்கிறாள்.எப்பொழுதும் ஊரில் இருக்கும் ஆறு பக்கம் உட்கார்ந்து தனக்குள்ளே வாழ்பவள் மறுப்பேதும் சொல்லாமல் அடுத்தவர்களுக்கேற்ப தன்னை வளைத்து கொள்கிறாள்.
பரஞ்சோதி தான் காதலித்து மணம்புரிந்தவளை கொடுமைப்படுத்தி அவளின் வீட்டில் இருந்து பிடுங்கிய பணத்துடன் வாழ. இந்தக் கொடுமைகளைச் சகிக்காமல் தான் பெற்ற குழந்தையை ஐந்தே வயதில் விட்டு விட்டு உலகத்தில் இருந்து மறைந்து விடுகிறாள் அவனின் மனைவி. அடுத்து கட்டியவள் குழந்தை சாரதாவிடம் ஒருமுகத்தையும் கணவனிடம் ஒரு முகத்தையும் காட்டுவதை தெரிந்து அதைப்பற்றி வெளியில் சொல்லாமல் தனக்குள்ளே மறைத்து கொள்கிறாள் சாரதா.
முதல் மனைவியின் அண்ணன் கேட்ட பிறகு குழந்தையைத் தராமல் இருந்தது மட்டுமல்லாது அவள் பெரியவளானவுடன் மோசமான ஒருவனுக்கு அவளைத் திருமணம் செய்து விடுகிறார் பரஞ்சோதி.இவர் ஒரு கணக்கு போட்டுத் திருமணத்தை முடிக்க, வந்தவன் இவர்களை ஆட்டி வைக்கிறான்.
அனைத்து அவமானங்களையும் பொறுத்து போகும் சாரதா பெற்ற மகன்களும் அவர்கள் அப்பாவின் குணங்கொண்டு இருப்பதால் வயதான காலத்தில் அவளை வைத்துக் கொள்வதில் மகன்களுக்குள் சண்டை வருவதைப் பார்த்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள ஆறு பக்கம் செல்பவளை வரவேற்கிறது ஒரு சின்னப் பெண் குழந்தை யாரோ அனாதையாக விட்டு சென்றது.
இனி இந்த உயிர் இந்தக் குழந்தைக்காவது பாடுபடட்டுமே என்று அதை வளர்க்க முடிவெடுக்கிறாள்.
அனைத்து கதாபாத்திரமும் முகமூடி மனிதர்களாக வருகின்றனர்.உள்ளத்தில் ஒன்றை மறைத்து வெளியில் தனக்கான ஒரு மதிப்பை உருவாக்குவதில்.
பரஞ்சோதி என்ற ஒருமனிதனின் ஒழுக்கக்கேடு பலரை முகமூடி அணிய செய்து துன்பத்திற்குள் சுழல வைத்துவிடுகிறது.