உதய நிலவே:::: ****** செய்யும் செயல்கள் உண்மைக்கு மாறாக இருக்கும்பட்சத்தில் எதிர்படும் விளைவுகளும் பயங்கரமாக இருக்கும்.
பள்ளி மாணவியைக் காதலித்து வீட்டை விட்டு ஒடிவர வைத்துத் திருமணம் செய்து அவளை கர்ப்பமாக்கியபிறகும் தன் வீட்டில் அவளுக்கு நடக்கும் உதாசீனங்களைத் தட்டிக்கேட்காமல் பொறுத்துப் போகச் சொல்லும் நல்ல கணவனான வருண். அம்மா மற்றும் மாமா பெண் செய்யும் கூட்டு சதியால் உண்மையை ஆராயாமல் மனைவி தீபாவை தவறாக நினைத்து வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான் குழந்தை பிறந்த பிறகு.
அசிங்கமான வார்த்தைகள், அவமானங்கள் அனைத்தையும் தாங்கி கொண்டு தன் மகன் முகம் பார்க்க பிரிந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவனை நாடி செல்கிறாள்.அவமானங்கள் தொடர்ந்து கடைசியில் சதி அம்பலமாகி தன் மனைவியின் மன்னிப்பால் புது வாழ்க்கை தொடங்குகிறான் வருண்.
உன் மடியில் நான் உறங்க::::::: ********** விருப்பம் இல்லாததை அருகிலே வைத்துகொண்டிருப்போமானால் விரைவில் அதன் மீது அதீத ஆசை ஏற்படும்.
நித்தின் காதலிப்பதை பிடிக்காத அப்பா அவனுக்குத் தெரியாமலே நிவிதாவுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரியவருகிறது. அதை நிறுத்த போன் செய்தவன் சொன்ன விஷயம் அவளைச் சேராமல் சின்னத் தங்கையிடம் போக ஒன்றும் புரியாமல் போனை வைத்து விடுகிறாள்.
மறுத்தும் தன்னை மணந்தால் என்பதால் தன் வீட்டிற்கு வந்தவளிடம் எந்த அக்கறையும் இல்லாமல் பழைய காதலியுடனே சுத்தி கொண்டு இருப்பதைப் பொறுக்க முடியாமல் நிவிதா விலகி சென்றுவிடுகிறாள்.
மனைவி விட்டு சென்ற பிறகு தான் அவள் தன் மனதில் இருப்பதை அறிபவனுக்குக் காதலியின் தொல்லைகளால் அவளை ஒதுக்கிவிட்டு மனைவியைத் தேடி பிடித்துத் தன்னுடன் பிணைத்துகொள்கிறான்.அவனின் தம்பிக்கு அவளின் தங்கையையும் மணமுடிக்கிறான்.