இந்தக் கதையில் தான் கிரைம் ஆபிஸர் விவேக் ரூபலாவை திருமணம் செய்த போகும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
எவரோ செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்தவன் மனம் துவண்டு உதிர்க்கும் சொல்லுக்கு வலிமை உண்டு.
பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய பிணம் தற்கொலை தான் என்று சொன்னாலும் தூக்குப் போடுவதற்கு உபயோகப்படுத்திய விஷயங்கள் எதுவும் காணாமல் போனதால் அது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் விவேக்கிற்கு எழுகிறது.
நீலப்படம் பார்த்துத் தகித்துப் போய் இருக்கும் நாட்டியா வீட்டிற்கு ஏசி ரிப்பேர் பண்ண வந்த நிர்மலை மிரட்டி தனக்குப் பணிய வைக்கும் போது அண்ணன் சந்திரசூடன் வந்ததால் சம்பவத்தை மாற்றிப் போட்டு நிர்மலை குற்றவாளியாக்க கோபத்தில் அவனைத் தாக்கி விட்டு இறந்து போய்விட்டான் என்று தவறாக நினைத்து ரயில்வே டிராக்கில் போட்டு விட அங்கே இருக்கும் லைன்மேனால் காப்பாற்றப்படுகிறான்.
நாட்டியாவின் நீலப்பட மோகத்தை அறிந்த ஒரு குரூப் அவளைக் கடத்திபோய் அண்ணன் கண் முன்னே படம் எடுத்ததால் பைத்தியமாகிறாள், தங்கையின் நிலைமையைப் பார்த்த சந்திரசூடன் தான் பூட்டிய அறையில் தொங்கிய பிணம், தற்கொலைக்கு ஐஸ்கட்டியை வைத்ததால் தடயம் முதலில் விவேக்கின் கண்ணில் பிடிபடாமல் போகிறது.