என் எழுத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் இடமுண்டு; புத்திசாலித்தனங்களுக்கு இடமே இல்லை. அசட்டுத்தனமாகவும், கள்ளம் கபடமற்ற சிறுபிள்ளைத்தனமாகவும் இருப்பது இயல்புதான். உணர்வுகள் பகடை உருட்டா. தொழுத கையுள்ளும் படை ஒடுங்காது. தரையில் விழுகிற மழைத் தாரை மாதிரி கொப்புளம் வெடிக்கும். ஆனால், உடனடியாக உடைந்து தண்ணீரோடு தண்ணீராகித் தரை நனைக்கும். எழுத்தும் தரை நனைக்கத்தான்.
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram
முதல் சில சிறுகதைகளை வாசித்து முடித்ததும் அந்த அழுத்தம் தாங்காமல் புத்தகத்தை மூடி வைச்சாச்சு. மனிதர்களும், அவர்களின் வாசனைகளும், நினைவுகளும், யாருடனோ அவர்கள் இணைந்து கிடந்த தருணங்களும், ஒவ்வொரு மழைக்காலமும், மண்பாண்டமும், நாவல் மரங்கள் நிறைந்த சாலைகளும், சுவரில் பூத்த அரசமர இளந்தளிரும் இணைந்து ஒரு முடிவிலா உலகை எழுதிக்கொண்டே செல்கின்றன. வண்ணதாசன் ஐயாவின் உலகில் சஞ்சாரம் செய்ய நாம் வேறொருவராக மாற வேண்டும். நம் பெருமைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, யாரோ ஒரு கர்ப்பிணி பொம்மையை விற்கும் காட்சியைப் பார்த்தும், ஒரு பேரிழப்பின் பிறகு மனைவின் தோள்களில் சாய்ந்துத் தன் ஆகப்பெரிய ரணங்களைப் பகிர்ந்து கொள்ளும் கணவனைப் பார்க்கவும், நமக்கு ஒரே சமயத்தில் இளகிய மனமும், மனவலிமையும் தேவைபடுகிறது. சொல்லப்போனால், எழுத்தின் வேலை அதுதானே! ❤️❤️❤️
An absolute mess of a collection. Every story felt meaningless, poorly written and completely devoid of impact.
I kept waiting for something, anything to click but it never did. It’s been years since I’ve quit on a book midway, but this one made it feel like a mercy. A pointless, frustrating read I wouldn’t recommend to anyone.