புலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன் போன்றோர் தொடங்கி வைத்த பிரிட்டிஷ் எதிர்ப்பை, போராட்டமாக மாற்றியவர்கள் மருது பாண்டியர். தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி, மருது பாண்டியர் நடத்திய போராட்டமே, முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டமாகும். தூந்தாஜி வாக், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர் உள்ளிட்டோர் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். முதல் இந்தியச் சுதந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, பதினெட்டாம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டீஷ் இந்தியா காலத் தமிழகம், பிரிட்டிஷாரின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்களை விரித்துச் செல்கிறது இந்நாவல்.
India's first freedom fight starts in South India only. Pooli Devar, Thunji Was, Tippu Sultan and Marudu brothers started the first war of freedom against British people. But all of them are failed not due to their incompetence rather than due to some individuals treachery. This novel explains some of such events.
மு. ராஜேந்திரன் (M. Rajendran) இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த காலத்திலிருந்தே தன் தீவிரமான அரசாங்கப் பணிகளுடன், இலக்கியம் சார்ந்தும், வரலாறு சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டு இவர் உருவாக்கும் வரலாற்று நூல்கள் எளிமையான மொழி நடையில் வரலாற்று ஆவணங்களை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கி வருகின்றன. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு இவர் எழுதிய 'காலாபாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் தாலுக்கா வடகரை கிராமத்தில் ராஜேந்திரன் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளில் சட்டக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். வரலாற்றை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்து இந்திய ஆட்சிப்பணியாளராக உயர்ந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களில் இருந்த 1500 கல்வெட்டுகளை பணியெடுக்கும் பணியை துவக்கி வைத்த பெருமை இவருக்கு உரியதாகும். வரலாற்றுச் செப்பேடுகள் சொல்லும் செய்திகளை அனைத்து நிலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் தொடர்ந்து எழுதிவருகிறார். சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள் முதலியவை தொடர்பான இவருடைய நூல்கள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சிகளாக அமைந்தவையாகும்.
அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இவருடைய மூதாதையரின் கதையில் இருந்து தொடங்கி, மூன்று தலைமுறையின் தொடர் வாழ்வினை ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற தன் வரலாற்று நூலாக எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வில் இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1801ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் நடந்த காளையார் கோயில் போரை மையமாக வைத்து,1801 என்ற வரலாற்று நாவலை எழுதியுள்ளார். 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வு இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சியில் முதன்முதலில் மன்னர்களை நாடு கடத்துதல், காளையார் கோயில் போரில்தான் தொடங்கியது. அப்போது சிவகங்கையின் அரசராக இருந்த வேங்கை பெரிய உடையணத் தேவரையும் அவருடன் போராளிகள் 71 பேரையும், தங்களின் வெற்றிக்குப் பிறகு பினாங்குக்கு நாடு கடத்தினார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான இப்போராட்டத்தினை மையமாகக் கொண்டு ‘காலா பாணி’ என்ற நாவலை இவர் எழுதியுள்ளார். 1857 சிப்பாய்க் கலகத்திலிருந்து தொடங்கும் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வரலாறு தென் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த 1801 போர்களிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதால் காலா பாணி நூல் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் நூலாக உள்ளது.
எல்லாருக்கும் பெயரளவில் தெரிந்து முழுதாய் ஆராயப்படாத விடுதலை வீரர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே எல்லா மாநிலத்தவரிடமும் இருக்கும் . அப்படி தமிழர்கள் பெயரளவில் மிகவும் பழக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்கள் தான் மருது சகோதரர்கள் . மருது சகோதரர்களின் ஆங்கிலேய எதிர்ப்பின் ஆரம்பம் , அதில் ஈடுபட்டவர்கள் , அதன் காரணம் , அந்த எதிர்ப்பின் முடிவு என்று பெரிதாய் அறிந்திராத தென்னாட்டின் ஆங்கிலேய எதிர்ப்பை பதிவு செய்யும் புத்தகம் தான் இந்த 1801 . இந்தியாவில் அதிகம் அறியப்படாத முதல் (உண்மையான ) சுதந்திர எதிர்ப்பை கதைக்களமாக எடுத்து அதை வரலாற்று பாடமாக சொல்லாமல் , விறுவிறுப்பான கதையாக வாசிப்பவரிடம் கொண்டு சேர்த்ததில் எழுத்தாளர் தனி கவனம் பெறுகிறார் . சில இடங்களில் தொடர்பு விட்ட மாதிரியும் சில கதாபாத்திரங்களை ஒரேயடியாக மறந்து போல் தெரிந்தாலும் முடிவில் அனைத்தையும் சரி செய்து ஆரம்பித்த கதையை அருமையாக முடித்துள்ளார் . கதையின் முடிவில் இந்த புத்தகத்திற்கு சமபந்தமுள்ள வரலாற்று இடங்களை புகைப்படங்களாக தொகுத்து வழங்ப்பட்டிருக்கிறது . வரலாற்று புனைவு எழுதும் அத்தனை எழுத்தாளர்களும் இந்த யுக்தியை கையாளலாம் . கதையுடன் ஒன்ற அந்த புகைப்படங்கள் கண்டிப்பாக உதவுகிறது . தமிழ் சுதந்திர வரலாற்றை படிக்க விரும்பும் சிறுவர்களுக்கு , மாணவர்களுக்கு எளிதாய் பயிற்றுவிக்க ஆரம்ப புத்தகமாக இதை பரிந்துரைக்கலாம் . கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு வரலாற்று புதினம் .
தென்னிந்திய வீர புரட்சியின் உயிர் அழியாத சாட்சியம்.
இந்த நூல், மருது சகோதரர்களின் வீரத்தையும், அவர்களை வஞ்சித்து வீழ்த்திய வரலாற்றையும் நமக்குக் கண்முன் காட்சிப்படுத்துகிறது. புதின வடிவில் தொகுக்கப்பட்ட இந்த வரலாறு, வாசிப்பவரை நேரடியாக அந்தக் காலச் சூழ்நிலையில் கொண்டு செல்லும் திறன் கொண்டது. ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து, புலனாகிய நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டிருப்பது நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரமுடிகிறது. இந்த நூல் மூலம், இந்திய விடுதலைக்கான முதல் முழக்கம் தென்னிந்திய மண்ணிலிருந்து எதிற்கும் ஈடாக எழுந்ததை நமக்கு நினைவுபடுத்துகிறார் ராஜேந்திரன். மருது சகோதரர்கள் மட்டுமல்ல, வீரத்தால் தீண்டிய தமிழக வரலாற்றை உணர விரும்புவோருக்கான வரலாற்றுப் புதினம் இது.
This is a must read for anyone who's trying to understand the South India as it was during the late 18th century. The author has researched a lot of documentation and has provided us with a story version of real events. Do not miss it if you are a history buff!