சில நேரங்களில் உறவுகளை மீறி பணம் முக்கியத்துவம் அடையும்.
இரண்டு வருடங்களாகக் காதலித்த பீட்டரை ஜோதி திருமணம் செய்ய ஏழ்மையான குடும்பச் சூழல் தடையாக வருகிறது.
ஜோதியின் அண்ணி சாம்ராஜ்யம் தான் வீட்டில். இவள் கல்யாணம் செய்து போனால் சம்பளம் கிடைக்காது என்று பல வேலைகள் செய்து அதைத் தடைபட முயற்சி செய்கிறாள்.
பீட்டர் வீட்டில் இருப்பவர்கள் மனதுக்கு மதிப்பு கொடுத்து அவர்களே செலவு செய்து நடத்தலாம் என்று முடிவெடுக்கும் போது ஜோதிக்கு பீட்டர் அப்பாவின் சிபாரிசு மூலம் பெரிய வேலை கிடைக்கிறது.
ஜோதியின் அண்ணி அவளின் மனதை கலைக்க முயற்சிப்பதை அறிந்து உடனடியாகத் திருமணமும் நடத்தி வைத்துவிடுகிறார்.