"பட்டாம்பூச்சி பற பற" - நாம் அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களையும் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் உள்ளடக்கிய எளியக் கதையே. மாறி வரும் சமூக சூழலில் மனித உறவுகளிடையே ஏற்படும் சவால்களுக்கும், காலம் காலமாக அழுத்தமாக மனதில் ஊறிய பழமையான எண்ணங்களுக்கும் இடையில் கண்ணுக்கு தெரியாத ஒரு போர் நடந்துக்கொண்டே இருக்கிறது. அந்த யுத்தத்தின் சில கோணங்களை கதையின் போக்கில் லேசாக தொட்டு செல்லும் முயற்சியே இந்த நாவல். மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் இக்குடும்பக்கதை வாசிப்பவர் மனதில் நீங்காது இடம் பிடிக்கும்.