ஒன்று இரண்டு முறை குறி தவறினாலும் நியாயத்தின் பக்கம் நின்று எய்துபவர்களுக்கு அடுத்த முறை இலக்கை தாக்கும்.
தன் பிறப்பிற்குக் காரணமானவனும் அடுத்தப் பெண் கிடைத்தவுடன் கர்ப்பிணியான தாயை உதறி தள்ளிய எக்ஸ் எம்.எல்.ஏ வான நிலாதாசனை கொல்ல பத்திரிக்கையாளியான தர்மா இரண்டு முறை முயலும் போது வேறு இருவர் அவளின் குறியில் மாட்டி இறந்து போகின்றனர்.
கிரைம் ஆபிஸர் விவேக்கின் விசாரணையில் நுழைந்து தர்மாவை நெருங்கும் நேரத்தில் நிலாதாசனை முடித்துத் தன் பழிவெறியை தீர்த்து கொள்கிறாள்.