ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் பேசுகிறார்.அனேகமாக மனதை உடல் வெற்றிகொள்வதாகவே பல படைப்புகளின் கதையோட்டமும் அமைந்திருக்கிறது.இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் பரவசத்தைக் கிளர்த்துவதாகவும் அவரது பாத்திரங்கள் காணுகின்றன.இவற்றிலிருந்து வேறுபட்ட தி.ஜானிகிராமன் படைப்பு ‘அடி’.மனமும் உடலும் மேற்கொள்ளும் மீறல்,சமூக நிர்பந்தத்தின் முன் அடிபணிவதை இந்தக் குருநாவல் சித்தரிக்கிறது.ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் பாலுறவின் தனித்த சுழற்பாதையில் பயணம் செய்த மரபை மீறிய கலைமனம் நடமாட்டம் மிகுந்த பொதுவழியை அடைந்ததன் அடையாளமாகவோ,ஆண் பெண் உற்வின் ரகசியத்தைக் கண்டடையும் முயற்சியின் இறுதிப் புள்ளியாகவோ இந்த நாவலைக் காணலாம்.
‘அடி’ தி.ஜானகிராமன் தமது இறுதிக் காலத்தில் எழுதிய குறுநாவல்.உடல் உடலை விழைவதும் உயிர் உயிருக்கு ஏங்குவதும் இறைச் செயல்கள்.அதை மனிதப் புத்தி தோற்கடிக்கிறது.பின்னர் அதுவே நியதியாகிறது.இந்த நியதியைப் புறக்கணிக்கும்போது அடி விழுகிறது.அது விழுவது மனித உடலில் மட்டுமல்ல;தெய்வ மனதிலும்!
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
"அடி" - தி.ஜானகிராமன் =================== 20ம் நூற்றாண்டின் மத்திய வாக்கில், மாயவரத்தை ஒட்டிய கிராமத்திலும், டெல்லியிலும் கதைகளம் அமைந்திருப்பதாக இக்குறுநாவல் எழுதப்பட்டிருக்கிறது.
அக்கிராமத்தில் வசிக்கும் தையும்மாள் வீட்டில், அவளது ஒரே மகனான இராணுவத்தில் பணிபுரியும் செல்லப்பா தனது நினைவுகளை அசைபோடுவதாக ஆரம்பிக்கிறது கதை.
இதில்மேலும் செல்லப்பாவின் மனைவி மங்களத்தம்மாள், தையும்மாளின் தூரத்து உறவுபெண் பட்டு, அவளது கணவன் சிவசாமி அம்பைகடாட்சம் போன்றவர்கள் முக்கிய கதைமாந்தர்களாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் .
இவர்களுக்குள் நடக்கும் உணர்வுக்குவியல்களால் ஆன இக்கதையில், நம்மையும் அவர்களுடன் உள்ளிழுத்து, அந்த உணர்ச்சிகளை நமக்குள் கடத்திவிடுகிறது இக்கதையின் போக்கு. அதாவது, செல்லப்பா எனும் 50வயதினன் பாதை மாறும்போதும், அதை எதிர்கொள்ளும் மங்களம், பட்டு, அதற்கு பரிகாரம் செய்யும் செல்லப்பா இவர்களின் மனவோட்டங்களையும் நம்முள் கடத்திவிடுகிறார்கள்.
அம்பைகடாட்சம் எனும் ஆன்மீக பெரியவரிடம் மிகுந்த பக்தி கொண்ட மங்களத்தம்மாள், அவரிடம் வாங்கும் 'அடி', செல்லப்பாவை சுற்றியிருக்கும் அக்குடும்பத்தவர்களுக்கு புரியவில்லை என்றாலும், செல்லப்பாவிற்கும், வாசிக்கும் நமக்கும் நல்லொழுக்கத்தினையும் நல்ல படிப்பனையையும் சம்மட்டி அடியாக புரியவைக்கும்.
இயல்பான நடையில் எழுதுவது திரு தி.ஜானகிராமன் அவர்களின் சிறப்பு.காலங்கடந்து தற்போதும் வாசிக்கும் படியான கதைக்கருவும் எழுத்துநடையும் கொண்ட இக்கதையில் அவரின் முற்போக்கு வீச்சை அறியலாம். அது தற்போதைய சமுதாயத்திற்கும் தேவையாகவும் இருக்கிறது.
'அடி', குறுநாவல் என்றாலும், நமக்கு ஏற்படுத்தும் கனம் அதிகம்!
தி.ஜாவின் படைப்புகளில் இருந்து சிறிதும் மாறுபட்டது, சபலத்தில் தொடங்கி சமூக நிர்ப்பந்தத்தில் முடியும் உறவு, உடலும் மனமும் ஒன்று சேர்ந்து கடவுளை காரணம் சொல்ல...அதே கடவுள் திருப்பி கொடுத்த "அடி"
Title : அடி Author : தி. ஜானகிராமன் Genere : நாவல Book Type : Paperback Start Date : 21-Jan-25 End Date : 23-Jan-25 Rating : 4/5 Number of Page : 120
வெறும் 120 பக்கங்கள் கொண்ட மிகச்சிறிய நாவல். தி ஜா அவர்களது இறுதி காலத்தில் எழுதி முடிக்கப்பட்ட புத்தகம். புத்தகம் முழுவதும் தி. ஜா அவர்களுக்கே உரியது எழுத்து நடை.
செல்லப்பா, தையும்மா, பட்டு, சிவசாமி, மங்களத்தம்மாள் இவர்களை சுற்றி நடக்கும் கதை. ராணுவத்தில் வேலை செய்யும் செல்லப்பா, அவரது துரத்து உறவினர் பட்டுவும் ஒருவர் மீது ஒருவர் சபலம் கொள்கின்றனர். பந்தமும் சபலம் ஒன்று தான். திருமணத்திற்கு பின்பு வரும் பந்தத்தை என்னதான் புனிதம், தெய்வீகம் என்று கூறினாலும் அது சபலமாகவே பார்க்கப்படும் என்ற எதார்த்தத்தை நெத்தி ' அடி ' யாக கூறுகிறார். இறுதியில் செல்லப்பாவை தன் மகனிடம் தான் செய்ததை சொல்ல வைக்கும் இடத்தில் தி.ஜா வின் final touch தெறிக்கும்
Finished reading it a week ago. And I am still not been able to comprehend the author views. Didn't he try to justify Chellappa's actions? Throughout the book, he amplified how Paattu looks and at the end, he pleases us by saying its only lust and nature's beauty is supreme. Also, I couldn't fully understand this whole saga involving the godman. Otherwise, the book gave me a good visual imagination of this world would have looked.
செல்லப்பா - மங்களம், பட்டு-சிவசாமி . செல்லப்பா-பட்டு சபலம் கொண்டு கூடி விடுகிறார்கள். இறுதியில் யார் யாருக்கு என்ன அடி கிடைத்தது என்பதே அடி நாவலின் அடிநாதம்.