கரமுண்டார் வூடு
*******************
ப்பா..ஆஆஆ..என்ன ஒரு write-up. விரைந்து வாசிக்க தூண்டிய இந்நாவலை எழுதிய "தஞ்சை பிரகாஷ்" அவர்களுக்கு நன்றி!!!
உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டதாக கூறப்படும், இந்நாவலின் களம், காலம்.,
தஞ்சை 'அஞ்சினி' கிராமமாகவும், 80களின் இறுதியில் நடைபெறுவதாகவும் இருக்கிறது.
புத்தக தலைப்பாக, கரமுண்டார் வீடு என்பதற்கு பதிலாக, ஏன் கரமுண்டார் 'வூ'டு என்பதற்கான விடை முதல் பக்கத்திலேயே கிடைத்துவிடும்.
ஆம்; நாவல் முழுவதும் வட்டார பேச்சு வழக்கு கையாளப்பட்டுள்ளது.
பெரும்பாலும் , வட்டார வழக்கில் உள்ள நாவல்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்பதாக நினைத்ததுண்டு. ஆனால், இந்நாவலை வாசிக்கையில் அப்படி தோன்றவில்லை.
கள்ளர் சமுதாயத்தை சார்ந்த கரமுண்டான் குடும்பம், அதாவது பல கிளை குடும்பங்கள் வசித்து வரும் வீடுதான் பிரதான கதைக்களம்.
எட்டு கட்டு வீடு, பின் கட்டை தொட்டுச்செல்லும் காவிரி, அஞ்சினி கிராமம், அச்சமுகங்களின் வாழ்வியல் என கதையின் போக்கு உள்ளுக்குள்ளேயே சுழல்கிறது.
கள்ளர்/பள்ளர் என வேறுபட்ட சமுதாய வகையறாக்கள் இருந்தாலும் அச்சமுக மக்கள் ஒன்றுக்குள் ஒன்றாக, அதாவது "அவன்/அவ எங்க வூட்டு பள்ளனாக்கும்/ப��்ளச்சியாக்கும்." என சொல்லுமளவிற்கும், அதேபோல் "ஆண்டே...ஆண்டே" எனச்சொல்லி மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வதும் என ஒன்றொடு ஒன்று பின்னி பிணைந்து வாழ்வதாக காட்டப்படுகிறது.
என்றாலும், பெண்களை மாறி மாறி கவர்ந்து அல்லது அவர்களாகவே செல்வதும், அதை தொடர்ந்து ஏற்படும் சாதி கலவரங்களும், அதனை தொடர்ந்து ஏற்படும் பலிகளும், பின் இரு சமுக மக்களும் அதிலிருந்து மீண்டு சுமுகமாய். வாழ்வதுமா���் கதை முடிகிறது.
இதில், முக்கியமாக சொல்லபடவேண்டிய விஷயமாக, கரமுண்டான்களின் பலதார மணம், ஆனால் அந்த முடிவையும் அப்பெண்களே எடுக்கிறார்கள். ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதற்கேற்ப எந்தகாலமானலும் எந்த ஒரு பாதிப்பிற்கு(impact) பின்னும் பெண் இருக்கிறாள் என்பதாகவே உணரமுடிகிறது.
மெல்லிய Lust நெடியுடன் பயணப்படும் கதை. NonLinearஆக முன்னும் பின்னும் போனாலும், கதையை புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை.
மேலும், மேற்சொல்லபட்ட சமுகங்களின் வாழ்வியல் முறையை எந்த சமரசமும் இல்லாமல், வெகு இயல்பாக, மிக நேர்த்தியாக பதிவு செய்யப்படிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.