தப்புகளின் கரத்தை பிடிக்கத் துவங்கும்போதே தண்டனையின் கண்கள் விழிப்புறத் துவங்கிவிடுகிறது.
காணாமல் போன ஜட்ஜின் மகனைத் தேடுவதில் கிடைத்த தகவல்கள் மேலும் குழப்பத்திலே ஆழ்த்தவிடுவதால் விசாரணையை நுணுக்கமாக விரிவடைய அதில் கிடைத்த கறுப்பு நெருப்பு என்ற வார்த்தைக்கான பொருளை தேடும் விவேக்கிற்குச் சரியான பதில் கிடைக்காமல் போகிறது.
விமானப் பணிப்பெண் மானஸாவின் மரணம் அதன் மூலம் கிடைத்த சில சங்கேத வார்த்தைகள். டிவியில் வேலைச் செய்யும் பரிதியின் தலைமறைவு அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் அனைத்தும் ஜட்ஜ் மகனிடம் வந்து முடிகிறது.
நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியைத் தடைப்படுத்த வெளிநாட்டினர் தகவல் தொழில்நுட்பத்துடன் சீர்குலைக்கக் கறுப்பு நெருப்பு என்ற பெயரில் நடத்தியதற்குத் துணைப்போன டாக்டர், டிவிசேனல் முதலாளி அனைவரும் பிடிப்படுகின்றனர். அங்கே வேலைச் செய்த ஜட்ஜ் மகனும்,பரிதியும் அவர்களுக்கு எதிரான காரியம் செய்ய முற்பட்டதால் சித்தத்தைக் கலங்கடித்து மனநல காப்பகத்தில் சேர்த்த செய்தி கிட்டுகிறது.