Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).
Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.
Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.
Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.
புத்தகம்: நியூட்டனின் மூன்றாம் விதி எழுத்தாளர்: நா. முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள்: 64 நூலங்காடி: Bookwards விலை: 80
💫 மண்ணை விட்டு பிரிந்தாலும் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள கவிஞர் நா. முத்துக்குமாரின் கவிதை புத்தகத்தோடு இந்த ஆண்டின் வாசிப்பு ஆரம்பமாகிறது.
💫 எனக்கு மிகவும் பிடித்த கவிதை : குழந்தை மாமாக்கள் மற்றும் அக்காவின் கடிதம். எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் நம் சமூகத்தில் பெரிதும் கொண்டாடப்படும் உறவு - தாய் மாமா. திருமணமாகி புகுந்த வீடு சென்ற அக்கா, பிறந்த வீட்டிற்கு எழுதும் கடிதம். தன் புகுந்த வீட்டில் படும் கஷ்டங்களையும் பிறந்த வீட்டை நினைத்து ஏங்குவதையும் பார்க்க முடியும்.
💫 "அடைகாத்து வைத்திருக்கும் புத்தக மூட்டைகளை பேப்பர்காரனிடம் போட்டால் தான் நான் உருப்படுவேன்!
💫 ஆதவன் முத்துக்குமாரின் அறிமுக கவிதை புத்தகத்திற்கு கூடுதல் சிறப்பு.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
நா. முத்துகுமார் அவர்களின் எழுத்துக்கள் யாருக்கு தான் பிடிப்பதில்லை? மனம் துவண்டு போகும் போதெல்லாம் நான் வாசிப்பிற்காக தேர்ந்தெடுப்பது இவரைதான், இவரின் எழுத்துக்கள் தான்.
இது ஒரு கவிதை தொகுப்பு புத்தகம், ஒரு கவிதை வாசிக்கும் போது, "எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதோ" என்று நம்மை வாய் பிளக்க செய்து, சிந்திக்க வைப்பது தானே கவிதைகளின் அழகு.
அவ்வகையில் முத்து அண்ணனின் கவிதைகள் எப்பொழுதும் மனம் வருடுபவையாக, சிரிக்க, சிந்திக்க வைப்பவைகளாக தான் இருக்கிறது!
புத்தகத்தின் வாசிப்பு எனக்கு ஒரு "Quick bite" ஆக அமைந்தது🦋
"நியூட்டனின் மூன்றாம் விதி" நா . முத்துக்குமார் -------------------------------------------
திரு நா. முத்துக்குமாரின் கவிதைகள் வாசிக்கும்போது நம்மையறியாமல் ஒரு வறட்சி புன்னகை மலர்ந்து மறைவதை தடுப்பதற்கில்லை. அப்படியான சிறுகவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் . நமது கிராமங்கள் ஊடேயும், தெருக்கள் ஊடேயும், வீடுகளுக்குள்ளும் புகுந்து, யதார்த்தமான வாழ்க்கையை அழைத்துவந்து அதன் சாரத்தையும் விசாரத்தையும் கைநிறைய அள்ளிக் கொட்டிவிட்டுப் போகிறது. நகைச்சுவையும் வலியும் ஒருங்கே தரவல்ல ஆழமான கருத்தியல்களை கவிதைகளாக கொண்டுள்ளது . சில கவிதைகளின் வரிகள் ஆழமானது அழுத்தமாக மனதில் பதியக்கூடியது. புன்னகைக்கவும் துயரப்படவும் ஆழ்ந்துபோகவும் ஏராளம் உள்ளன இக்கவிதைகளில்.
சில கவிதைகளின் தலைப்புக்களும், அதை பற்றிய சிறு குறிப்புகளும்:
"நியூட்டனின் மூன்றாம் விதி" - மாடியில் குடியிருப்பவன் தன் தரைதளம் மூலம் கீழ்த்தளத்தில் இருப்பவனுக்கு தரும் சப்தங்கள். அதற்கு கவித்துவுமாய் கீழ்தளக்காரன் ஆற்றும் எதிர்வினை.
"வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்" - பதின்ம சிறுவனின் பார்வையில் வெண்டைக்காயுடன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் உண்டான தொடர்பை சொல்கிறது.
"அனுமதி இலவசம்"* - இருபது வருடங்களுக்கு முன்பு வரை, இறப்பையும் அதை ஒட்டிய இறப்பு வீட்டு நிகழ்வையும் வீடியோ காட்சிப் பதிவு செய்வது வழக்கம். வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் பார்ப்பதற்காகவாம். கல்யாண வீடியோ காசெட்டுகளை சாவகாசமாய் ஒரு மாலையில் பார்ப்பதை போல இறப்பு நிகழ்வையும் பார்க்க அனுமதி இலவசம் என்கிறது.
"மலையாளம் கலர்(பகல் காட்சி மட்டும்) "* - 18+திரைப்படத்தைத் திரையில் பார்த்தவனின் மனவோட்டம்.
"கெட்டாலும் மேன்மக்கள்" - கிராமத்தில் ஈசல் சமைத்து உண்டவன், நகர வாழ்க்கையில் அது வாய்க்காது போனதின் உள்ளக்கிடக்கையை சொல்கிறது.
"அஃறிணையாளர் சங்கத்திலிருந்து ஒரு வேண்டுகோள்"* - திருவாளர் ஒயின்ஷாப் வாடிக்கையாளாரின் மிக்ஸிங் அளவிற்கு, (துடைப்ப குச்சிக்காக) ஒயின்ஷாப்பின் துடைப்பங்கள் மெலிகிறது என அஃறிணையாளர் சங்கத்திலிருந்து புகாராக ஒரு அறிக்கை.
"வெளிநடப்பு"* - வயிறுவலிக்கு காவி நிறமா?, கம்யூனிஸ்ட் நிறமா? எந்த நிற மருந்து என குழம்பி சென்ற கடவுளின் வெளிநடப்பை பற்றி.
"ஐந்து கட்டளைகள்" - ஐந்து ஆசைகள், கட்டளைகளாக(1. குடிகார தகப்பனின் மகன் தோள்வலிமை பெற , 2. ஆடு மேய்ப்பவன், தான் தொடரமுடியாத கல்வி ஞாபகத்திற்கு வராமலிருக்க, 3. பறக்கும் பட்டங்கள் மின்கம்பிகளில் சிக்காமலிருக்க, 4. பனங்காட்டு பழம் எடுக்க பாம்புகள் மடிந்திருக்க, 5. கணவனிடம் கோபித்து தாய் வீடு செல்லும் மனைவிகளின் கையிலுள்ள குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்து பயப்படாமல் இருக்க.
"களவு" - மாடு களவானதா? அல்லது தானே தொலைந்ததா? என தேடும் படலம்
"குழந்தை மாமாக்கள்"* - மாமாக்களின் காதல் தூதாகும் குழந்தைகள். கடிதம் கொடுக்கப்பட்ட அக்காகளை விட மாமக்களே குழந்தைகளின் பிரியமானவர்கள். காதல் தோல்வி குறித்தும் கடைசி வரி(லி)களில்.
"உறுப்பு நலன் அறிதல்" - காலைக்கடன் கழிக்க வந்தவர்களின் உறுப்புகள் கண்டு அதிர்ந்து குழம்பும் குளமும் நீர்கோழியும்.
" செய்முறை" - சாக்லேட் உறைகளில் உருவாக்கப்படும் பொம்மைகள் பற்றியும் பெண்ணாய் பிறந்தவளின் புலம்பல் பற்றியும்.
"காந்தி ரோடு"* - எல்லா ஊரிலும் உள்ள இப்படி ஒரு ரோடில் நடக்கும் கீழ்ப்படிநிலை சமூக சம்பவங்கள்.
"அக்காவின் கடிதம்"* - திருமணமான அக்கா தனது கையறுநிலை வாழ்க்கை குறித்து எழுதும் கடிதம்., வலியுடையதாய் இருப்பினும் நலமாய் இருக்கிறேன் என்று முடிக்கிறாள்.
"இன்று செய்த சமூக சேவைகள்" - தான் செய்த சிறு உதவிகளுடன் தான் எழுதிய புத்தகத்தை வெளியிடாததையும் சேவையாக சொல்கிறது.
"உனக்கும் எனக்கும் புரியாத கவிதை" - புரியாத புதிர் கவிதை கடவுளை வைத்து.
புத்தகம் : நியூட்டனின் மூன்றாம் விதி கவிஞர் : நா. முத்துக்குமார் பக்கங்கள் :64 பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
இது நா. முத்துக்குமார் அவர்களின் படைப்புகளில் நான் வாசிக்கும் மூன்றாம் படைப்பு, இரண்டாவது கவிதை தொகுப்பு.
அவர் எழுத்துநடையில் அதிகம் என்னை ஈர்த்தது எதார்த்தம் தான். ஏதோ பரந்து விரிந்த ஒரு பெரிய கருத்தை புரியாத பாஷையில் எழுதி கவிதை என்று நம்மை தலையை சொரிய வைக்காமல், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து வந்த, திரும்பி பார்க்கும் இயல்பு கணங்களை அழகு தமிழில் வார்த்தைகள் கோர்த்து கவிதை செய்திருக்கிறார்.
"முன்புக்கு முன்பு, நேற்றுக்கும் நேற்று" போன்ற வார்த்தைகள் தான் எத்தனை அழகு!! கிராமத்து வாழ்க்கையும், பின் நகர வாழ்வுக்கு இடம் பெயர்ந்த மாற்றமும், ஏக்கமும் அவர் எழுத்துகளில் நன்றாக புலப்படுகின்றன.
எல்லா கவிதைகளும் ஏதோ ஒரு வகையில் ஈர்த்ததிருந்தாலும், கடைசி கவிதையின் கடைசி வரிகள் மட்டும் மனம் விட்டு நீங்க மறுக்கின்றது.
"அடைகாத்து வைத்திருக்கும் புத்தக மூட்டைகளை பேப்பர்காரனிடம் போட்டால்தான் நான் உருப்படுவேன்!!!"
இப்படி மாறுபட்ட எண்ண ஓட்டங்களின் தொகுப்பே இந்த நியூட்டனின் மூன்றாம் விதி!!!
இன்னும் பிற கவிதைகளை வாசிக்க தூண்டுகிறது நா. முத்துக்குமார் அவர்களின் எழுத்து.
முதல் முறையாக கவிதை புத்தகத்தை படிக்கநேர்ந்தது. கவிதைகள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து ஒதுங்கியிருந்தேன் அதன் காரணமாக பல நல்ல கவிதை தொகுப்புகளை படிக்காமல் விட்டுவிட்டேன் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.
கவிதைகளின் எளிமையான மொழிநடையும் ஆங்காங்கே இழையோடுகின்ற மெல்லிய நகைச்சுவையும், மெல்லிய சோகமும் ரசிக்க வைத்தன. ஆனால் கவிதைகளின் கருக்களும் அவை சொல்ல வரும் விடயங்களும் ஏற்கனவே பல கவிதைகளில் நாம் வாசித்தவையே.
“தன் காயங்களைக் காட்டி,கவிதை என்பவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.காயங்கள் யாரிடம் இல்லை?வாசகர்கள் கவிஞர்களிடம் வேண்டிவது காயங்களை அல்ல,மருந்துகளை.”நா.முத்துக்குமாரின் 23 கவிதைகள் கொண்ட இக்கவிதை தொகுப்பில்,தபூ சங்கரின் இந்த முன்னுரை வரிகள் என் மனதில் பதிந்தது.
சொற்கள், ஒரு மயக்கத்தை முன்வைத்து ஒன்று கூடும் போது கவிதையாகிறது. நா. முத்துக்குமாரின் கவிதைகள் ஒவ்வொன்றும் மயக்கத்தை தர கூடியது.
இவரிடம் எனக்கு பிடித்த ஒன்று கற்பனையான உலகில் உவமைகளை கொண்டு அழகை வர்ணிப்பது என்றில்லாமல். தன் வீடு, வீட்டிலிருக்கும் மனிதர்கள், அக்கா, அம்மா,தம்பி, வீதி, மாடி வீட்டுக்காரன், கோவில்கோபுரம் என இவர் வாழ்ந்த வாழ்க்கையை எதார்த்த கவிதையாய் எழுதுவதே.
பெண்கள் குறித்தும், குழந்தைகள் குறித்தும் இந்த புத்தகத்தில் இரக்கமும் அவலமுமாய் நிறைய எழுதி இருக்கிறார்.
நியூட்டனின் மூன்றாம் விதி, அக்காவின் கடிதம், களவு, ஐந்து கட்டளைகள் இவை இந்த தொகுப்பில் எனக்கு பிடித்தவை.
பொதுவாகவே நா.முத்துக்குமாரின் கவிதைகளில் எளிய மனிதர்கள் அதிகம் உலாவுவார்கள்; பால்ய காலத்தின் மீதான மீள்வாசிப்பு இவரின் கவிதைகளில் அதிகம் தென்படும். முதியவர்களை அல்லது குழந்தைகளை,மிக நெரிசலான வேளையில், கைபிடித்து சாலையை கடக்க உதவும் மென்தன்மையும் பொறுப்புணர்வும் போன்றதுதான் நாமுவின் கவிதைகள் என்று நம்புகிறேன். இதனை 'இன்று செய்த சமூக சேவைகள்' என்ற கவிதையில் அதிகம் உணர முடிகிறது.