Jump to ratings and reviews
Rate this book

என்பிலதனை வெயில் காயும் [Enbilathanai Veyil Kayum]

Rate this book

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, தாழக்குடி பகுதி, வீரநாயணமங்கலம் சிற்றூரில் பிறப்பு. நெல், தென்னை, வாழை சூழ்ந்து, மேற்கில் பழையாறு, வடக்கில் தேரேகால் ஊர் எல்லை. இயற்பெயர் சுப்பிரமணியம். பெற்றோர் கணபதியாபிள்ளை, சரஸ்வதிஅம்மாள். பிறந்தநாள் 31.12.1947

பிழைப்பு தேடி பம்பாய் பயணம் செய்து, பம்பாய் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் தனியார் நிறுவனம் ஒன்றிலும் தினக் கூலியாகச் சில காலம். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் எழுத்தர், பண்டகக் காப்பாளர், தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரிந்து விற்பனைப் பிரிவின் மேலாளராக இந்தியா முழுக்கப் பயணம். 1939ல் கோவைக் கிளைக்கு மேலாளராக மாற்றம் பெற்று 2005 ல் ஓய்வு தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சூரத் பக்கமிருக்கும் நவ்சாரி என்Ī

341 pages, Kindle Edition

Published March 14, 2018

9 people are currently reading
36 people want to read

About the author

Nanjil Nadan

43 books80 followers
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.
இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
28 (50%)
4 stars
15 (27%)
3 stars
9 (16%)
2 stars
3 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Premanand Velu.
241 reviews40 followers
December 17, 2022
ஆரம்பத்தில், தான் படித்து வளர்ந்த நாஞ்சில் நாட்டை விட்டு மும்பைக்கு வேலை தேடிச் சென்று, மிக எளிமையான துவக்கத்துக்குப் பின் படிப்படியாய் வளர்ந்து, ஆரம்பித்த கம்பெனியிலேயே மேலாளராக உயர்ந்தவர் சுப்பிரமணியம் என்கின்ற நாஞ்சில் நாடன். தன்னைவளர்ந்த மண்ணின் மீதும் மொழியின் மீதும் தாளாத நேசம் கொண்டவர்.

முகம் தெரியாத ஊரில் எளிமையாகத் துவங்கிய அவருக்கு, அவர் பிறந்த மண்ணின் மீதான அடையாளம் மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நாஞ்சில் நாடன் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றும்.

மும்பைக்கு செல்லும் தமிழர் பலர் தவறாமல் சந்திக்கும் பிரச்சினை ஒன்றுண்டு. வடநாட்டில் இருக்கும் பெயருக்குப் பின்னாலான, பின்னொட்டு தான் அது. தமிழகத்தில் இருக்கும் வரை, சில தலைமுறைக்கு முன் சுயமரியாதை சிந்தனைகளால் காணாமல் போன பின்னொட்டு, இங்கிருந்து அங்கே போன பின் அவர்களில் சிலருக்கு பிள்ளை பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் திடீரென முளைத்து விடுவது உண்டு. அப்படி ஏதும் நெருக்கடி நாஞ்சில் நாடனுக்கு ஏற்படவில்லை என நினைக்கிறேன்.

மாறாக அவர், தனது மொழியும், தன் மண்ணும் தான் தனக்கான அடையாளம் என்று முடிவு செய்திருக்க வேண்டும். இன்று அதுதான் அவரை தமிழ் மண்ணில் , தமிழின் குறிப்பிடத்தக்க சில எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளம் தந்திருக்கிறது. தொடர்ந்து அவர் எழுத்துக்கள், அவர் பிறந்த மண்ணையும், வாழ்ந்த நிலப்பரப்புகளையும், அவற்றில் உலவிய மனிதர்களையும் சித்திரமாய் வடித்து வந்திருக்கின்றன. அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், மனவோட்டங்களையும், வார்த்தையில் வடிப்பதை ஒரு கலையாகவே நாஞ்ல் நாடன் சிறக்க வைத்திருக்கிறார்.

பொதுவாக சுயமரியாதை என்பது, தன்னம்பிக்கையின் அடிநாதம். ஒரு சமூகமாக அதை நாம் அணைத்துக் கொண்டு கடந்து வந்திருக்கும் பாதை மிக நீளமானது. நம்மில் சுயமரியாதை கொண்டவர்களாக அடையாளப் படுத்துபவர்களில் கூட, சில நேரங்களில், பாசத்திற்காக, நட்பிற்காக என்று செய்யும் சமரசங்களால் தங்களை அறியாமலே சில விஷயங்களில் சுயமரியாதை உணர்வை இழப்பதுண்டு. அப்படி நேரும் போது அவர்களை சார்ந்தவர்களும் அவரோடு சேர்ந்து வழுக்கி விழும் நிலை வருவதுண்டு. அதைப்பற்றிய முடிச்சு தான் இந்தப் புதினம்.

இந்தப் புதினத்தைப் படித்த போதும், பிறகு அதைப்பற்றிய நூல் அறிமுகங்களை படித்தபோதும், எனக்கு ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் சுடலையாண்டி என்ற பதின்ம வயது ஆணின் ஊசலாட்டங்களை நாஞ்சில் நாடன் சிறப்பாக வடித்திருந்த விதத்தைத்தான் குறிப்பிட்டிருந்தனர். வெகு சிலர் அவன் தாழ்வுணர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டிருந்தனர்.

எனக்கென்னவோ அதையும் தாண்டி, இல்லாத ஒரு தாழ்ச்சியை தனக்குள்ளதாக நினைத்துக்கொண்டு, அதன் மூலம் தனக்கு நேரும் இகழ்வுகளை நியாப்படுத்திக்கொள்ளும் இயல்பை, அதன் ஆதி முடிச்சைத் தொட்டிருக்கிறாரோ என்று தான் தோன்றுகிறது.
சுடலையாண்டி சிறுவயதிலேயே தாயையும் தந்தையும் இழந்தவன். அவன் தந்தை, தன்னை விட தாழ்ந்த சமூகம் என்று கருதப்படும், மாற்று மொழி சமூகத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை கைபிடித்தவர். இளவயதில் தாயையும், தந்தையையும் இழந்த அவனுக்கு அவர்களைப்பற்றிய நினைவுகள் ஒரு துளங்காத சித்திரமாகவே இருந்தது.

“அப்பா பற்றியதான முதல் ஞாபகம் தனக்கு எப்போது தொடங்கியது? சுடலையாண்டி மூளையைத் தூர் வாங்கினான். எங்கிருந்து தொடங்கினாலும் அந்த நிகழ்ச்சியில் தான் சென்று எண்ணம் நின்றது.அதுதான் முதலில்.அதற்கு முன்பு? ஒன்றும் புலப்படாத மங்கல். பழையாற்றின் கயத்தில் ஆழங்கண்டு மண் எடுக்க முக்குளிக்கையில், கொஞ்ச ஆழம் இறங்கியதும், மூச்சு முட்ட லோடு கூடி நீரின் கூரையைப் பார்க்கையில் ஒரே நீலமாகத் தோன்றுமே, அதுபோல் எங்கும் நீலம். அடர்வான நீலம். சிந்தனைக் கத்தி துளைக்க முடியாத கட்டி நீலம்… சன்னஞ் சன்னமாக அந்த முதல் நிகழ்ச்சி சுடலையாண்டியின் மனதில் ஆழமாகச் செலுத்தப்பட்டு விட்டது. அப்போது எத்தனை வயதிருக்கும்? ஆறு அல்லது ஏழு.”

“இந்தப் பாலக் கலுங்கில் படுத்துக் கொண்டு ஆகாயத்தைத் துளைக்கையில் - இனம் புரியாத அந்த வயதில் அப்பாவுக்கு உண்டாக்கிய காயம்.”

“அம்மா சிவப்பாகவும் வாட்ட சாட்டமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். “ஒரு சாக்கு நெல்லை ஒத்தையிலே தூக்கீருவா...” “நாலு கொடந் தண்ணீ பிடிக்க வென்னிப் பானையைச் சடக்குண்ணு தூக்கிப் பொறவாசல்லே கொண்டு வச்சிருவா...” ஆத்தா வெவ்வேறு சமயங்களில் சொல்லிய செய்திகள் எல்லாம் நினைவில் வந்தன. முகம் மட்டும் நெஞ்சில் கூடவே இல்லை.”

அவன் தந்தை சாதிமாறிக் கைபிடித்த பெண்ணையும், அந்தப் பெண் பெற்ற பையனையும் சமயம் வாய்க்கும் போது ஊரில் உள்ளவர்கள் சாதிக்காழ்ப்பால், அவன் பிறப்பை வைத்து அசிங்கப்படுத்திடும் நிலை இருந்தது. சுடலையாண்டிக்கு பெற்றோர் இல்லை என்றாலும், அவன் தந்தையை பெற்றவர்கள் அவனை பேரன் என்று, பெற்ற மகனுக்கு வழங்கியதை விட அதிக பாசத்துடன் , கடும் ஏழ்மையிலும் விடாமல் தாங்கிப் பிடித்திருந்தனர்.

அது போதும் சுயமரியாதை கொண்ட ஒருவனுக்கு. ஆனால் அதையும் மீறி சுடலையாண்டிக்கு ஒவ்வொரு முறையும், தன் பிறப்பைப்பற்றிய, தாயைப் பற்றிய வசவு வரும்போதெல்லாம், தாழ்வுணர்ச்சியால் குமைந்து கொள்கிறான். அப்போது அவன் தாத்தா பாட்டியின் உணர்வின் பின் இருக்கும் நியாயமும் புரிவதில்லை; அதன் பலமும் பயன்படுவதில்லை.

“எப்போதும் இப்படியே அப்பாவின் திவசத்தன்று இந்த ஊமைக் கூத்து. அவரவர் மனங்களில் அவரவர் சுமைகள். ஒப்பாரியாகக் கரைக்க முயன்ற ஆத்தா. விழுங்கிச் சீரணிக்க முயன்ற தாத்தா. என்னவென்று அறியாத ஒரு மனப் பிசையல். வீட்டில் இருக்க முடியாமல் எழுந்து வெளியே நடந்தான் சுடலையாண்டி.”

“தாள்களை வாங்கிக் கொண்டு நகர்ந்த பிறகு, தங்கப்பனிடம் சுந்தரம் சொல்வது கேட்டது. “அதில்லடா தங்கப்பா... உனக்கு விசயந் தெரியாதா? பயகிராசுல்லா. படிக்கதுக்குக் கேக்கவா வேணும்.” பல நாட்கள் அதன் பொருள் புரியவில்லை. சுடலையாண்டிக்குப் புரிந்தபோது – நெஞ்சு சுட்டது. இது சுடச்சுட, வேறு மாணவர்களிடமிருந்து விலகத் தொடங்கினான். அண்டை அசல் பையன்களோடு அவன் சண்டை போட்டால், சண்டை முடிந்ததும் பையன்களின் பெற்றோர் அவனை மட்டும் குறிப்பாக்கித் திட்டிய போது... எல்லாம் சின்னச் சின்னக் காயங்கள்.”

"பலவேசம் பிள்ளையின் கண்களைப் பார்க்கப் பயமாக இருந்தது. உக்கிரமான ஆராசனைக்காரன் முகம் போல்... “ஓடுலே செறுக்கி மவனே... தோப்புக்குள்ளே இனி காலை வச்சே, முட்டுக்குக் கீழே மொறிச்சிருவேன். அப்பன் பேரு தெரியாத பயலுக்கு ஆசை. ஓடுலே இங்கேருந்து...”

என் நண்பர்கள் வட்டத்தில், சிறு வயத்தில் இருந்தே பழகி வரும் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் என்னிடம் எப்போதும், எனக்கு ஒப்புமை இல்லாத, நான் அதீத வெறுப்பு உணர்வு என்று கருதும் கருத்துக்களைக் கொட்டுவது வழக்கம். நட்பிற்காக என்று சிறு வயதில் இருந்தே அவன் கூறுவதற்கு மேலோட்டமாய் ஆமோதிப்பை தந்தாலும், ஒரு வழிப்பாதையான அவன் பேச்சுக்களை வெறுமனே கேட்டுக் கடந்து வந்திருக்கிறேன். அந்தக் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை என்று அவனுக்கு தெரிந்த போதும், நான் ஆமோதிப்பைத�� தருகிறேன் என்பதால், தொடர்ந்து அதன் வீரியம் கூடிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அந்த முரண்பாடால் விழைந்த அழுத்தம் எனக்குள் கூடிக்கொண்டே போனது.

இதைப்படித்தவுடன், மின்னல் வெட்டியது போல் ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டது. எதற்காக ஒப்புதல் இல்லாத ஒன்றுக்கு தொடர்ந்து, செவி கொடுத்திருந்தேன் என்று யோசனை வந்தது. நட்புக்கு பங்கம் வந்து விடுமோ என்று வெறுமனே அவன் குரலுக்கு செவி கொடுத்தது புரிந்தது. அதன் பின் அடுத்த முறை சிறு சீறலுடன், அரசியல், வாழ்வியல், நம்பிக்கை சம்பத்தப்பட்ட எதையும் தவிர்த்து எது வேண்டுமாலும் பேசலாம் என்று உறுதியாகக் கூறினேன். அதன் பின்னால் நட்புக்கு ஏதும் பங்கம் வரவில்லை. மாறாக ஒப்புமை இல்லாத எதையும் நான் இனியும் காது கொடுத்து கேட்க மாட்டேன் என்ற புரிதல் அவனுக்கு வந்தது. அவன் அதன் பின் அதிகமாக நான் விரும்பாதவற்றை பேசுவது இல்லை.

ஆனால் பாவம் சுடலையாண்டிக்கு, அவன் வாழ்வின் வறுமையும், அதைத் கடக்க அவன் போராடும் வாழ்வியல் உண்மையும், அவனுக்கு அந்த மாற்றத்தைக் கொடுக்கவில்லை.
அதனால்தான், வறுமை சற்றே நீங்கிய நிலையிலும், சமாதானத்தின் பெயராலும், அடக்கத்தின் பெயராலும் அவமானங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறான். அவற்றை சிலுவைகள் போல் சுமக்கிறான். கடைசியில் வேலை தேடி செல்லும் மாமனிடமும் , அவன் வெறும் காசு கொடுத்தது அவமானப் படுத்தும் போதும் கூட, தன்மான உணர்வின்றி பரிதாபமாக அவர் முகத்தைப் பார்த்து நிற்கின்றான். சுயமரியாதை என்ற எழும்பில்லாத உயிராக அவமானம் என்ற நெருப்பில் தொடர்ந்து உழல்கிறான் சுடலையாண்டி.

“தலையைத் தண்ணீருக்குள் நுழைத்துக் கொண்டு சத்த மெழுப்பிக் கொண்டு அழுதான். ஒரு மலையாள ஈழவப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடி வந்த அப்பாவுக்காக, அப்பாவை நம்பி வந்து அல்லல் தாங்காமல் தன்னையே அழித்துக் கொண்ட முகம் தெரியாத தன் அம்மாவுக்காக, அந்த அம்மா வயிற்றில் பிறந்து விட்டதால் அங்கீகாரம் இழந்து நிற்கும் தனக்காக.”

“ 'ஜோலியா? அது அத்தற எளுப்பமாயிட்டு கிட்டுல்லல்லோ... வல்லிய பாடாணு... எனிக்கு ஆரும் அறிஞீடா... தான்... வேறு எவிடயெங்கிலும் அன்யேஷிச்சோ-எடீ! நீ ஒரு பத்து ருப்பியா எடுத்தோண்டு வா...' ஒரு மெளன நாடகக் காட்சியாய்த் தெரிந்த நினைப்பி னுள்ளும், அந்த மாமா முறை மனிதரின் முகத்தில், அம்மாவின் சாயல் ஏதேனும் காணக் கிடைக்கிறதா என்று சுடலையாண்டி தேடினான். “
Profile Image for Jagan K.
50 reviews15 followers
February 21, 2016
Read full review here: http://orukozhiyinkooval.blogspot.in/...

நாவலைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களை தெளிவு படுத்துகிறேன். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலில் அட்டை படத்தில் நாவலின் பெயரையே தவறாக அச்சிட்டிருக்கிறார்கள். "என்பிதலனை வெயில் காயும்" என்றிருந்ததை கொஞ்சம் உற்று நோக்கியபின் தான் புரிந்தது. தலைப்பையே குளறுபடி செய்யும் அளவிற்கு என்ன ஒரு விட்டேற்றித்தனம் என்று தெரியவில்லை. பதிப்பகத்தார் கவனிக்க வேண்டும்

நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க தொகுப்பை தான் முதலில் வாசித்தது. நாஞ்சிலின் படைப்புகளுக்கு ஒரு திறப்பு வெளியாக அமையும் என்பதாலும் அது சாஹித்ய அகாடமி விருது பெற்றதாலும் தேர்ந்தெடுத்து படித்தது. ஆனால் சாஹித்ய அகாடமி விருது படைப்புக்காக அல்லாமல் படைப்பாளிக்காக தரப்படுகிறது என்பதே சமீபத்தில் ஆ.மாதவன் வாங்கியபோதுதான் புரிந்தது. ஏனெனில் சூடிய பூ சூடற்க நாஞ்சிலின் எழுத்துக்களில் அதீத பரிச்சயம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்று தோன்றுகிறது. அதனைக் காட்டிலும் என்பிலதனை வெயில் காயும் என்னை வெகுவாக ஈர்த்தது.

சுடலையாண்டியின் சுய தேடல் என்பிலதனையின் உயிர் நாடி. நாவலின் பயணம் சுடலையாண்டியின் நிகழ் காலத்தின் நுண்ணிய சித்தரிப்புகளுடனும், கடந்த கால நினைவூட்டல்களுடனும் பொதிந்திருக்கிறது. பதின் வயது முடியும் தருவாயில் இருக்கும் சுடலையாண்டி தன் பாட்டன், பாட்டியுடன் இறந்து போன பெற்றவர்களுக்கு செய்யும் நீத்தார் கடனுடன் நாவல் துவங்குகிறது.

சுடலையாண்டி தமிழ் தந்தைக்கும் ஈழவ மலையாளப் பெண்ணுக்கும் பிறந்தவன். தன் தாயைப் பற்றி அதிகமான நினைவு ஒன்றும் இல்லை அவனுக்கு. காதால் கேட்ட கதை மட்டுமே. தன் தந்தையைப் பற்றி ஒரே ஒரு நிகழ்வைத் தவிர அவனுக்கு வேறெதுவும் ஞாபகத்தில் இல்லை. அதுவும் இன்பமான நினைவு அல்ல. தீட்ட தீட்ட ஒன்றும் கிடைக்காது தனக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளத்தை நிறுவிக் கொள்வதே சுடலையாண்டியின் முதல் குறிக்கோளாக உள்ளது.

அந்த குறிக்கோளுக்கு பங்கம் விளைவிக்குமாறு என்ன சம்பவித்தாலும் அது அவனுக்கு மிகப் பெரிய இழுக்காகத் தோன்றுகிறது. இதைத் தான் அவன் தேங்காய்க் கள்ளன் என்று அடையாள படுத்தப் படும்போது உணர்கிறான். அதே போல் சுடலையாண்டி சற்று குட்டை என்று நாவலில் ஒரு இடத்தில் கூறப் படுகிறது. இதனால் அவனுக்குள் அவனையே அறியாமல் ஒரு நெப்போலியன் காம்ப்ளக்ஸ் உருவாகிறது. தன்னை மற்ற மாணக்கர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற ரீதியில் காட்டிக்கொள்வதில் அவன் அவ்வுணர்வுக்கு தீனி போடுகிறான். இந்தி டீச்சரிடம் வீம்பு பிடித்துக் கொண்டு வகுப்பில் திமிராக இருப்பதிலும் இது நமக்குத் தெரிகிறது.

சுடலையாண்டியின் கட்டுப்பாடற்ற மன ஓட்டங்களின் வீச்சினையும், வீரியத்தையும் தன் மொழி ஆளுமையினாலும், சொல் வளமையினாலும் பிரமிப்பூட்டும் வகையில் கையாள்கிறார் நாஞ்சில் நாடன். தொடர்பற்ற பல சம்பவங்களை நேர்த்தியாகக் கோர்த்து சென்ற காலமும் நிகழ் காலமும் மாறி மாறி அவனுள் ஏற்படுத்தும் உணர்வுகளை விரிவாக எடுத்துக் கூறுகிறார். இத்தகைய "எல்லாம் தெரியும் படர்க்கை கூற்று முறை" கொண்ட மொழிபின் மூலம் நம்மால் அவனைப் பற்றியும், அவன் எண்ணங்களைப் பற்றியும், அவன் செயல்களைப் பற்றியும் அவதானிக்க முடிகிறது.

நாவலின் ஒரு பகுதியில் வகுப்பு விட்டும் வரும் சுடலையாண்டி பெரும் மழைக்கு நடுவில் சிக்கிக் கொள்கிறான். அப்போது எதிரே மாட்டு வண்டியில் செல்லும் ஆவுடையம்மாளையும் காண்கிறான். அவளுக்கு வலிந்து கட்டிக் கொண்டு உதவி புரிபவர்கள் இருப்பதை நினைத்து எரிச்சலடைகிறான். அந்நேரத்தில் காலின் கீழ் ஓடும் நீரில் இருக்கும் மிதவைகள் அவன் கவனத்தை திசை திருப்புகிறது.

மங்கிய வெளிச்சத்தில் ஆற்றில் நாலைந்து கலப்பைகளும், நுகமும் மிதந்து வருவது தெரிந்தது. எந்தக் குடிசையிலிருந்து அடித்துக் கொண்டு வருகிறதோ? பூவரச மரமொன்று புரண்டு புரண்டு உடைப்பு வழியாக வயற்காட்டில் பிரயாணம் துவங்கியது. தென்னங்கன்றுகள் சில போயின ... பயிரெல்லாம் என்னத்துக்கு ஆகும்? தலை பழுத்துச் சாய்ந்து கிடக்கும் வயல்கள். அறுவடைக்கு முன் சில நாட்கள் காய்ச்சலுக்காகக் கிடப்பவை. கர்ப்பிணி வயிற்றில் எருமை மிதித்ததுபோல் இந்த வெள்ளம் ... உடைப்பு விழுந்த இடத்தில் பதினைந்து ஏக்கருக்காவது மணல் பாயும். வெள்ளம் கட்டி நின்றால் பயிர்கள் அழுகத் துவங்கும். நெல் மணிகள் முளைக்கும். உதிரும்.

எதிர்பாராத சேதம்

இதனால் எனக்கு என்ன ஆயிற்று?

இள வயதில் பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் ஒரு கவனக் கூர்மையின்மை போலவே சுடலையாண்டியின் கவனமும் விஷயத்திற்கு விஷயம் தாவிக் கொண்டே ��ருக்கிறது. ஒரு நிமிடம் ஆவுடையம்மாளைப் பற்றியும் அவளுக்கு உதவு செய்ய வந்த பெரியவரைப் பற்றியும் நினைத்தவன் திடீரென்று மழையால் சேதமடையும் குடும்பங்களைப் பற்றி எண்ணுகிறான். இதே கட்டத்தில் சுடலையான்டிக்குள் ஓடும் இருத்தலியல் எண்ணங்களைப் பற்றிய தெளிவும் நமக்கு கிடைக்கிறது. "இதனால் எனக்கு என்ன ஆயிற்று?" என்று அவனுள் தோன்றும் எண்ணம்தான் அதற்கு சான்று.

சுடலையாண்டியின் பாலுணர்வு அனுபவங்களும் அவனுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை இருவேறு சம்பவங்கள் மூலம் நமக்கு தெரியப்படுத்தப்படுகிறது. மழையிலிருந்து தன்னை காப்பாத்திக் கொள்ள அவன் ஒதுங்கிய இடத்தில் வரும் ஒரு ஜோடியின் காம நெடி நிறைந்த பேச்சு அவனுக்குள் இருக்கும் பாலுணர்வைத் தூண்டுகிறது. இதை விவரிக்கும் இடம் மிக அற்புதம்.

பக் பக்கென்று பீடி நுனியில் நெருப்பு சிவந்தது .

ஒற்றையாக

மன்மதனை எரித்த மூன்றாம் கண்ணாக

அந்த நினைப்பிநூடே அவன் தனக்கு ஏற்பட்ட முதல் பாலுணர்வு அனுபவத்தை நினைவில் அசை போடுகிறான். சுவாமி ஐயப்பன் படத்தை சினிமாக் கோட்டையில் கண்டபோது தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த 30 வயது பெண் அவன் கையை எதேச்செயாக எடுத்து அவள் தொடை மேல் போட்டது, அவன் வெடுக்கென்று கையெடுத்த பின் மீண்டும் அதை அவள் வைத்தது என்று அவன் ஞாபகத்தில் மங்காது ஒளிர்ந்து கொண்டிருக்கிறது அச்சம்பவம். அப்பெண்ணின் செயலை விவரிக்கும் சொல்லாட்சியும் அற்புதம்.

யானை பொரி தின்று பசியாற நினைத்ததுபோல்

அது முதல் சுடலையாண்டி பெண்களைப் பார்க்கும் தோரணையே மாறுகிறது.

சுடலையாண்டி ஆவுடையம்மாள் உறவுமுறை பள்ளிக் கூடத்திற்கே பிரத்தியேகமாக இருக்கக் கூடிய ஒரு காதல் கதை. பல சினிமா படங்களில் கண்டு சலித்தது போனதுதான். உள்ளூர காதல் போன்ற உணர்விருந்தாலும் சுடலையாண்டிக்கு ஆவுடையம்மாள் ஒரு எதிரி ரூபம். வசதியில் விஞ்ச முடியாது என்பதால் தேர்வுகளில் அவளைத் தாண்டி வெல்வதென்பது முக்கியமாகப் படுகிறது. ஆவுடையம்மாளை தனிப்பட்ட பெண்ணாகக் கருதாமல் அவளை அவன் சமூகத்தின் வசதியானவர்களின் பிரதிநிதியாகவும், அவளை வீழ்த்தி முன்னேறுவதின் மூலம் அந்த சமூகத்தையே வீழ்த்துவதாகவும் நினைக்கிறான். இதன் மூலம் தனக்கு ஏற்பட்ட அந்த அடையாள போராட்டத்தை அவளுக்கு அளிக்கிறான்.

இருந்தாலும் ஆழ்மனதில் தனக்கு இருக்கும் பிரியத்தை மறைத்து கொள்கிறான். எல்லா வகையிலும் அவள் தனக்கு பொருத்தமானவள் எனினும் தன் குடும்பப் பின்புலத்தாலும், வளர்ந்த சூழலாலும், முக்கியமாக அவள் தந்தையும் தம்பியும் தன்னை தேங்காய்க் கள்ளன் ஆக்கியதாலும் அவளுடன் எவ்வித உறவும் சாத்தியப் படாது என்பதை உணர்கிறான். நாஞ்சிலின் வரிகளில் சொல்ல வேண்டுமேயானால்.

வானரக் குட்டி நிலாப் பழம் பறிக்க எண்ணியதுபோல்

நாவலின் தலைப்பு அன்புடைமை குறளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்

எலும்பில்லாத புழுவினை வெயில் வதைத்தேடுப்பது போல அன்பில்லாத உயிரை அறம் வதைத்து துன்புறுத்தும். என்பிலதனை வெயில் காயும் என்ற தலைப்பின் மூலம் சுடலையாண்டியின் வாழ்க்கை புழு வதைபடுவதுபோல் வதைக்கப் படுகிறது என்பது தெளிவாகிறது. தன் பின்புலத்தில் இருக்கும் இழுக்கை பலவீனமாக எண்ணும் சமூகம் வெய்யில் போல் அவனை வாட்டி வதைக்கிறது. அந்த கொடூர சூழலில் அவன் ஏங்குவது அன்பிற்காக மட்டும்தான். எல்லாம் விடுபட்ட சூழலில் அவன் தன் அம்மாவின் சகோதரன் என்பவரைப் பார்க்க செல்கிறான். அவருக்கு அவன் யாரென்றே தெரியாததால் பண உதவி கேட்டு வந்திருக்கிறான் என எண்ணி பத்து ருபாய் தர சொல்கிறார். ஆனால் அவன் அவர் ரூபத்திலாவது தன் தாயை காண முடிகிறாதா என்று ஏங்கி நிற்கையில் நாவல் நிறைவுறுகிறது.

இந்த முடிவைப் பற்றி சிலிகான் ஷெல்ப்பில் ஆர்.வி அவர்கள் தனக்கு நிறைவு தரவில்லை என்று எழுதியதும் அதற்கு முக்கியக் காரணம் நகுலன் நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதியிலிருந்து கடைசி பக்கங்களை கிழித்து எரிந்ததாகவும் அதன் பின்னர் இப்போதிருக்கும் முடிவு வந்ததாகவும் ஜெயமோகன் கூறுகிறார். இதில் நகுலனின் முக்கிய எண்ணம் இருத்தலியல் சிந்தனையை மையப் படுத்திக் கூறுவது என்பதனால் அவர் அதைச் செய்தார் என்றும் கூறுகிறார். அனால் என்னால் இந்நாவலை வேறெந்த முடிவோடும் கற்பனை செய்ய முடியவில்லை. சுடலையாண்டியின் இருத்தலியல் எண்ணங்கள் பல்வேறு இடங்களில் வெளிப்படையாகவே பேசப்படுகிறது. நான் ஏற்கனவே கூறியதைத் தாண்டி பல இடங்களில் அரசியலையும், அரசியலில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களையும் சுடலையாண்டி இகழ்ந்து நோக்கி பார்ப்பதைப் போலவே சித்தரிக்கப் பட்டிருக்கிறது

இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு? மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி

எந்த ரீதியிலும் இருத்தலியல் சிந்தனைகளை பருவமெய்தலிலிருந்து பிரிக்க முடியாது என்பது என் துணிபாகும். அவ்வகையில் என்பிலதனை வெய்யில் காயும் நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்த நாவலாக தோன்றுகிறது. குறிப்பாக நாஞ்சிலின் மொழி நடையில் இருக்கும் ஒரு ஓட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. அவரது பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் சொற்களுக்கு அவர் தரும் முக்கியத்தை நான் கவனித்திருக்கிறேன். லா.ச.ரா விற்கு பிறகு மிகச் சிறப்பான மொழி நடையும் சொல்லாட்ச்சியும் கொண்டவராக நான் நாஞ்சில் நாடனை கருதுகிறேன். குறைத்துச் சொல்லலில் இருக்கும் அழகியலைக் கைவிடாது, அதே நேரத்தில் வெகு சில வார்த்தைகளைக் கொண்டே மொழியின் உச்சத்தை தொடுகிறார் நாஞ்சில் நாடன்.

பருவமெய்தல் என்பதை மையப் புள்ளியாய் கொண்டு இயங்கும் நாவலின் வெற்றி அது வாசகனின் வாழ்க்கையை எந்த அளவிற்கு எதிரொலிக்கிறது என்பதில் உள்ளது. இந்நாவலில் வரும் சம்பவங்களை போல நான் பலவற்றை கண்கூடாக கண்டதாலும், சிலவற்றை அனுபவித்ததாலும் என்னால் இந்த நாவலின் போக்குடன் ஒத்திசைக்க முடிகிறது. மட்டுமல்லாது நாஞ்சில் நாட்டு வாழ்க்கையை நுண்ணிய விவரிப்புகளுடன், துல்லியமான காட்சி வர்ணனைகளுடன், ஒப்பற்ற படிமங்களுடன் நம் கண் முன்னே நிறுத்துகிறார் எழுத்தாளர். அநாவசிய உணர்ச்சிகளைத் தவிர்த்து இயல்பான வாழ்கையையும், மனிதர்களையும், சூழலையும் நமக்கு காட்டும் என்பிலதனை வெயில் காயும் அற வழியில் அன்பைத் தேடும் ஒரு புழுவின் வாழ்க்கை.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Premanand Velu.
241 reviews40 followers
December 17, 2022
ஆரம்பத்தில், தான் படித்து வளர்ந்த நாஞ்சில் நாட்டை விட்டு மும்பைக்கு வேலை தேடிச் சென்று, மிக எளிமையான துவக்கத்துக்குப் பின் படிப்படியாய் வளர்ந்து, ஆரம்பித்த கம்பெனியிலேயே மேலாளராக உயர்ந்தவர் சுப்பிரமணியம் என்கின்ற நாஞ்சில் நாடன். தன்னைவளர்ந்த மண்ணின் மீதும் மொழியின் மீதும் தாளாத நேசம் கொண்டவர்.

முகம் தெரியாத ஊரில் எளிமையாகத் துவங்கிய அவருக்கு, அவர் பிறந்த மண்ணின் மீதான அடையாளம் மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நாஞ்சில் நாடன் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றும்.

மும்பைக்கு செல்லும் தமிழர் பலர் தவறாமல் சந்திக்கும் பிரச்சினை ஒன்றுண்டு. வடநாட்டில் இருக்கும் பெயருக்குப் பின்னாலான, பின்னொட்டு தான் அது. தமிழகத்தில் இருக்கும் வரை, சில தலைமுறைக்கு முன் சுயமரியாதை சிந்தனைகளால் காணாமல் போன பின்னொட்டு, இங்கிருந்து அங்கே போன பின் அவர்களில் சிலருக்கு பிள்ளை பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் திடீரென முளைத்து விடுவது உண்டு. அப்படி ஏதும் நெருக்கடி நாஞ்சில் நாடனுக்கு ஏற்படவில்லை என நினைக்கிறேன்.

மாறாக அவர், தனது மொழியும், தன் மண்ணும் தான் தனக்கான அடையாளம் ���ன்று முடிவு செய்திருக்க வேண்டும். இன்று அதுதான் அவரை தமிழ் மண்ணில் , தமிழின் குறிப்பிடத்தக்க சில எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளம் தந்திருக்கிறது. தொடர்ந்து அவர் எழுத்துக்கள், அவர் பிறந்த மண்ணையும், வாழ்ந்த நிலப்பரப்புகளையும், அவற்றில் உலவிய மனிதர்களையும் சித்திரமாய் வடித்து வந்திருக்கின்றன. அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், மனவோட்டங்களையும், வார்த்தையில் வடிப்பதை ஒரு கலையாகவே நாஞ்ல் நாடன் சிறக்க வைத்திருக்கிறார்.

பொதுவாக சுயமரியாதை என்பது, தன்னம்பிக்கையின் அடிநாதம். ஒரு சமூகமாக அதை நாம் அணைத்துக் கொண்டு கடந்து வந்திருக்கும் பாதை மிக நீளமானது. நம்மில் சுயமரியாதை கொண்டவர்களாக அடையாளப் படுத்துபவர்களில் கூட, சில நேரங்களில், பாசத்திற்காக, நட்பிற்காக என்று செய்யும் சமரசங்களால் தங்களை அறியாமலே சில விஷயங்களில் சுயமரியாதை உணர்வை இழப்பதுண்டு. அப்படி நேரும் போது அவர்களை சார்ந்தவர்களும் அவரோடு சேர்ந்து வழுக்கி விழும் நிலை வருவதுண்டு. அதைப்பற்றிய முடிச்சு தான் இந்தப் புதினம்.

இந்தப் புதினத்தைப் படித்த போதும், பிறகு அதைப்பற்றிய நூல் அறிமுகங்களை படித்தபோதும், எனக்கு ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் சுடலையாண்டி என்ற பதின்ம வயது ஆணின் ஊசலாட்டங்களை நாஞ்சில் நாடன் சிறப்பாக வடித்திருந்த விதத்தைத்தான் குறிப்பிட்டிருந்தனர். வெகு சிலர் அவன் தாழ்வுணர்ச்சியைப் பற்றி குறிப்பிட்டிருந்தனர்.

எனக்கென்னவோ அதையும் தாண்டி, இல்லாத ஒரு தாழ்ச்சியை தனக்குள்ளதாக நினைத்துக்கொண்டு, அதன் மூலம் தனக்கு நேரும் இகழ்வுகளை நியாப்படுத்திக்கொள்ளும் இயல்பை, அதன் ஆதி முடிச்சைத் தொட்டிருக்கிறாரோ என்று தான் தோன்றுகிறது.

சுடலையாண்டி சிறுவயதிலேயே தாயையும் தந்தையும் இழந்தவன். அவன் தந்தை, தன்னை விட தாழ்ந்த சமூகம் என்று கருதப்படும், மாற்று மொழி சமூகத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை கைபிடித்தவர். இளவயதில் தாயையும், தந்தையையும் இழந்த அவனுக்கு அவர்களைப்பற்றிய நினைவுகள் ஒரு துளங்காத சித்திரமாகவே இருந்தது.

“அப்பா பற்றியதான முதல் ஞாபகம் தனக்கு எப்போது தொடங்கியது? சுடலையாண்டி மூளையைத் தூர் வாங்கினான். எங்கிருந்து தொடங்கினாலும் அந்த நிகழ்ச்சியில் தான் சென்று எண்ணம் நின்றது.அதுதான் முதலில்.அதற்கு முன்பு? ஒன்றும் புலப்படாத மங்கல். பழையாற்றின் கயத்தில் ஆழங்கண்டு மண் எடுக்க முக்குளிக்கையில், கொஞ்ச ஆழம் இறங்கியதும், மூச்சு முட்ட லோடு கூடி நீரின் கூரையைப் பார்க்கையில் ஒரே நீலமாகத் தோன்றுமே, அதுபோல் எங்கும் நீலம். அடர்வான நீலம். சிந்தனைக் கத்தி துளைக்க முடியாத கட்டி நீலம்… சன்னஞ் சன்னமாக அந்த முதல் நிகழ்ச்சி சுடலையாண்டியின் மனதில் ஆழமாகச் செலுத்தப்பட்டு விட்டது. அப்போது எத்தனை வயதிருக்கும்? ஆறு அல்லது ஏழு.”

“இந்தப் பாலக் கலுங்கில் படுத்துக் கொண்டு ஆகாயத்தைத் துளைக்கையில் - இனம் புரியாத அந்த வயதில் அப்பாவுக்கு உண்டாக்கிய காயம்.”
...
“அம்மா சிவப்பாகவும் வாட்ட சாட்டமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். “ஒரு சாக்கு நெல்லை ஒத்தையிலே தூக்கீருவா...” “நாலு கொடந் தண்ணீ பிடிக்க வென்னிப் பானையைச் சடக்குண்ணு தூக்கிப் பொறவாசல்லே கொண்டு வச்சிருவா...” ஆத்தா வெவ்வேறு சமயங்களில் சொல்லிய செய்திகள் எல்லாம் நினைவில் வந்தன. முகம் மட்டும் நெஞ்சில் கூடவே இல்லை.”

அவன் தந்தை சாதிமாறிக் கைபிடித்த பெண்ணையும், அந்தப் பெண் பெற்ற பையனையும் சமயம் வாய்க்கும் போது ஊரில் உள்ளவர்கள் சாதிக்காழ்ப்பால், அவன் பிறப்பை வைத்து அசிங்கப்படுத்திடும் நிலை இருந்தது. சுடலையாண்டிக்கு பெற்றோர் இல்லை என்றாலும், அவன் தந்தையை பெற்றவர்கள் அவனை பேரன் என்று, பெற்ற மகனுக்கு வழங்கியதை விட அதிக பாசத்துடன் , கடும் ஏழ்மையிலும் விடாமல் தாங்கிப் பிடித்திருந்தனர்.

அது போதும் சுயமரியாதை கொண்ட ஒருவனுக்கு. ஆனால் அதையும் மீறி சுடலையாண்டிக்கு ஒவ்வொரு முறையும், தன் பிறப்பைப்பற்றிய, தாயைப் பற்றிய வசவு வரும்போதெல்லாம், தாழ்வுணர்ச்சியால் குமைந்து கொள்கிறான். அப்போது அவன் தாத்தா பாட்டியின் உணர்வின் பின் இருக்கும் நியாயமும் புரிவதில்லை; அதன் பலமும் பயன்படுவதில்லை.

“எப்போதும் இப்படியே அப்பாவின் திவசத்தன்று இந்த ஊமைக் கூத்து. அவரவர் மனங்களில் அவரவர் சுமைகள். ஒப்பாரியாகக் கரைக்க முயன்ற ஆத்தா. விழுங்கிச் சீரணிக்க முயன்ற தாத்தா. என்னவென்று அறியாத ஒரு மனப் பிசையல். வீட்டில் இருக்க முடியாமல் எழுந்து வெளியே நடந்தான் சுடலையாண்டி.”
“தாள்களை வாங்கிக் கொண்டு நகர்ந்த பிறகு, தங்கப்பனிடம் சுந்தரம் சொல்வது கேட்டது. “அதில்லடா தங்கப்பா... உனக்கு விசயந் தெரியாதா? பயகிராசுல்லா. படிக்கதுக்குக் கேக்கவா வேணும்.” பல நாட்கள் அதன் பொருள் புரியவில்லை. சுடலையாண்டிக்குப் புரிந்தபோது – நெஞ்சு சுட்டது. இது சுடச்சுட, வேறு மாணவர்களிடமிருந்து விலகத் தொடங்கினான். அண்டை அசல் பையன்களோடு அவன் சண்டை போட்டால், சண்டை முடிந்ததும் பையன்களின் பெற்றோர் அவனை மட்டும் குறிப்பாக்கித் திட்டிய போது... எல்லாம் சின்னச் சின்னக் காயங்கள்.”
"பலவேசம் பிள்ளையின் கண்களைப் பார்க்கப் பயமாக இருந்தது. உக்கிரமான ஆராசனைக்காரன் முகம் போல்... “ஓடுலே செறுக்கி மவனே... தோப்புக்குள்ளே இனி காலை வச்சே, முட்டுக்குக் கீழே மொறிச்சிருவேன். அப்பன் பேரு தெரியாத பயலுக்கு ஆசை. ஓடுலே இங்கேருந்து...”

என் நண்பர்கள் வட்டத்தில், சிறு வயத்தில் இருந்தே பழகி வரும் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் என்னிடம் எப்போதும், எனக்கு ஒப்புமை இல்லாத, நான் அதீத வெறுப்பு உணர்வு என்று கருதும் கருத்துக்களைக் கொட்டுவது வழக்கம். நட்பிற்காக என்று சிறு வயதில் இருந்தே அவன் கூறுவதற்கு மேலோட்டமாய் ஆமோதிப்பை தந்தாலும், ஒரு வழிப்பாதையான அவன் பேச்சுக்களை வெறுமனே கேட்டுக் கடந்து வந்திருக்கிறேன். அந்தக் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை என்று அவனுக்கு தெரிந்த போதும், நான் ஆமோதிப்பைத் தருகிறேன் என்பதால், தொடர்ந்து அதன் வீரியம் கூடிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அந்த முரண்பாடால் விழைந்த அழுத்தம் எனக்குள் கூடிக்கொண்டே போனது.

இதைப்படித்தவுடன், மின்னல் வெட்டியது போல் ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டது. எதற்காக ஒப்புதல் இல்லாத ஒன்றுக்கு தொடர்ந்து, செவி கொடுத்திருந்தேன் என்று யோசனை வந்தது. நட்புக்கு பங்கம் வந்து விடுமோ என்று வெறுமனே அவன் குரலுக்கு செவி கொடுத்தது புரிந்தது. அதன் பின் அடுத்த முறை சிறு சீறலுடன், அரசியல், வாழ்வியல், நம்பிக்கை சம்பத்தப்பட்ட எதையும் தவிர்த்து எது வேண்டுமாலும் பேசலாம் என்று உறுதியாகக் கூறினேன். அதன் பின்னால் நட்புக்கு ஏதும் பங்கம் வரவில்லை. மாறாக ஒப்புமை இல்லாத எதையும் நான் இனியும் காது கொடுத்து கேட்க மாட்டேன் என்ற புரிதல் அவனுக்கு வந்தது. அவன் அதன் பின் அதிகமாக நான் விரும்பாதவற்றை பேசுவது இல்லை.

ஆனால் பாவம் சுடலையாண்டிக்கு, அவன் வாழ்வின் வறுமையும், அதைத் கடக்க அவன் போராடும் வாழ்வியல் உண்மையும், அவனுக்கு அந்த மாற்றத்தைக் கொடுக்கவில்லை.
அதனால்தான், வறுமை சற்றே நீங்கிய நிலையிலும், சமாதானத்தின் பெயராலும், அடக்கத்தின் பெயராலும் அவமானங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறான். அவற்றை சிலுவைகள் போல் சுமக்கிறான். கடைசியில் வேலை தேடி செல்லும் மாமனிடமும் , ��வன் வெறும் காசு கொடுத்தது அவமானப் படுத்தும் போதும் கூட, தன்மான உணர்வின்றி பரிதாபமாக அவர் முகத்தைப் பார்த்து நிற்கின்றான். சுயமரியாதை என்ற எழும்பில்லாத உயிராக அவமானம் என்ற நெருப்பில் தொடர்ந்து உழல்கிறான் சுடலையாண்டி.

“தலையைத் தண்ணீருக்குள் நுழைத்துக் கொண்டு சத்த மெழுப்பிக் கொண்டு அழுதான். ஒரு மலையாள ஈழவப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடி வந்த அப்பாவுக்காக, அப்பாவை நம்பி வந்து அல்லல் தாங்காமல் தன்னையே அழித்துக் கொண்ட முகம் தெரியாத தன் அம்மாவுக்காக, அந்த அம்மா வயிற்றில் பிறந்து விட்டதால் அங்கீகாரம் இழந்து நிற்கும் தனக்காக.”
...
“ 'ஜோலியா? அது அத்தற எளுப்பமாயிட்டு கிட்டுல்லல்லோ... வல்லிய பாடாணு... எனிக்கு ஆரும் அறிஞீடா... தான்... வேறு எவிடயெங்கிலும் அன்யேஷிச்சோ-எடீ! நீ ஒரு பத்து ருப்பியா எடுத்தோண்டு வா...' ஒரு மெளன நாடகக் காட்சியாய்த் தெரிந்த நினைப்பி னுள்ளும், அந்த மாமா முறை மனிதரின் முகத்தில், அம்மாவின் சாயல் ஏதேனும் காணக் கிடைக்கிறதா என்று சுடலையாண்டி தேடினான். “
7 reviews
January 16, 2025
இப்புத்தகம் வெகுநாட்களாக வீட்டிலிருந்தது. பள்ளிவயதில் எடுத்துப்படித்திருந்தால் பிடித்திருக்காது. வயது வந்தபின்னர், குறிப்பாக ஜெயமோகனிடமிருந்து ஒரு நாவல் வாசிப்பின் ரசனையைப்பெற்றுக்கொண்ட பின்னர் இதனை வாசித்தது நன்று.

நாஞ்சில் நாடன் ஒரு நேர்காணலில் ஒரு எழுத்தாளர் எதையும் பொத்தாம் பொதுவாக எழுதக்கூடாது. திட்டவட்டமாக அனைத்தையும் குறிப்பிடவேண்டுமென்று சொல்லியிருப்பார். உதாரணம்: சுடலை மரத்தின் கீழ் நின்றிருந்தான்’ என்று சொல்வதை விட ஒரு நல்ல எழுத்தாளன் ‘சுடலை புன்னையின் நிழலில் நின்றிருந்தான்’ என்று சொல்லுவான். ஒரு மரம் இல்லை. அது என்ன மரம். ஒரு குழம்பு இல்லை. என்ன குழம்பு. ஒரு ரோடு இல்லை. அது என்ன ரோடு. ஒவ்வொன்றையும் விவரித்தப்படி செல்லும் எழுத்து ஆளை இழுத்து கதைக்களத்திற்குள் போட்டுவிடுகிறது. வாசிக்க ஆவலை தூண்டுகிறது.

70களில் நாகர்கோவிலின் அருகே உள்ள கிராமத்தில் கல்லூரி படிக்கும் மாணவன் சுடலையின் வாழ்க்கையே இந்நாவல். அவனின் பெற்றோரின் நினைவுகள், மரணம், அவனது ஆத்தாவும் தாத்தாவும், பப்பி காதலி ஆவுடையம்மாளும், உயர்சாதி திமிர் பிடித்த அவளது குடும்பத்தினரும் - இதுதான் சுடலையின் வாழ்க்கை.

அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு செங்கலையும் நான் லீனியராக நகர்த்தி முன்னும் பின்னும் சொன்னவிதம் சுவாரஸ்யமாக உள்ளது. கதையை முடித்தபின்னர் தொகுத்துப்பார்த்தால், எவ்விடத்திலும் தோய்வில்லாமல் அவன் முழுவாழ்க்கையும் சித்திரமாக தெரிகிறது.

இந்நாவலில் மனதில் நின்ற இடங்கள்:
- சுடலை கல்லூரிக்கு நடந்து செல்லும் வழிப்பயணம். அதை விவரித்த நேர்த்தி.
- தேங்காய் திருடி மாட்டிக்கொண்டு ஆவுடையம்மாளின் அப்பனிடம் அடிவாங்கி, திருட்டுப்பட்டம் கட்டப்படும் இடம்.
- ஹிந்தி டீச்சருடன் பேப்பரை கிழித்து சண்டைப்போடும் வீரம்.
- வயது வந்துவிட்டோம் என உணர்த்திய திருவிழா நேரத்து மண் தரை சினிமாவின் பக்கத்து இருக்கை பெண்ணின் செயல்.
- கிழங்கு விற்க போன கதை
- அவனது அப்பாவை அடித்து காயப்படுத்தியக்கதை. அம்மா இறந்தக் கதை.
- மழையில் சிக்கி மண்டபத்தில் ஒதுங்கிய கதை.

மழையில் பொருட்கள் அடித்துக்கொண்டு வருவதை பார்க்கும் சுடலை, யார் வீடு இப்படி அழிந்துவிட்டுப்போகிறது என ஒரு கணம் கவலைப்படுகிறான். அடுத்தக்கணமே, என் போன்றவர்களின் கஷ்டத்தை ஏறெடுத்துப் பார்க்காத இந்த சமூகமும் மக்களும் அழிந்துப்போகட்டும் என நினைக்கிறான். இந்த முரணே இந்நாவலின் சுவாரஸ்யம்.

நாஞ்சில் நாடனின் கடைசி இரண்டு அத்தியாயங்கள் வேண்டாமென நகுலன் பிய்த்துப்போட்ட பிரதியே நமக்கு வாசிக்க கிடைக்கிறது. இம்முடிவு வெறுமையையும் ஏமாற்றத்தையும் விதைக்கிறது. சுடலையின் வாழ்க்கை கடைசிவரை இப்படித்தான் இருக்கப்போகிறது என்கிற அவநம்பிக்கை மனதில் படிகிறது.

ஆனால், முதலில் எழுதி பிய்த்துப்போடப்பட்ட முடிவு, சுடலை மும்பைக்கு கிளம்புவதாக இருந்திருக்கிறது. இந்நாவலுக்கு அதுவே பொருத்தமான முடிவு. நிலவுடமை சமூகத்தில் படிப்பாலும் திறமையாலும் மேலே வரமுடியாமல் சிக்கிய சுடலைகள் நகரத்திற்கு இடம்பெயர்ந்து முதலாளித்துவ சமூகத்தில் ஜெய்த்துக்காட்ட முடியும். அதுவே நிதர்சனம். அம்முடிவே அப்படி சாதித்த பல்லாயிர திறமைசாலிகளின் பதிவாக இருந்திருக்கும்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Jeno Sam.
6 reviews
August 31, 2016
என்னை என்னுடைய என்று எண்ண வைத்து எனக்குள் என் ஆணிவேர் என்று சிந்திக்க வைத்து மெதுவாக மனதைத்தொட்டு ஊடுருவி எங்கோ அழைத்துச்சென்றது.

Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.