இன்றைய நவீன கால இளைஞர்களின் மெட்ரோ லைஃப் ஸ்டைல். லிவிங்க் டுகதர் கலாச்சாரம் , ஹவுஸ் பார்ட்டி , பப் கல்ச்சர் , நவீன காதலில் ஏற்படும் சைக்காலஜிக்கல் ப்ராப்ளம் இவைகள் கலந்த கலவை. பொருளாதார சுதந்திரம் வாய்க்கப்பட்ட பெண்கள் , அவர்களின் காதல் , காமம் சார்ந்த தேர்வுகள் , அவர்களின் வாழ்க்கை முறை , அவர்களுக்குள்ளான உறவுச்சிக்கல்கள் பற்றி பேசும் நாவல் . லிவிங்க் டுகதரைத் தாண்டி ஃப்ரீ செக்ஸ் , அதனால் உண்டாகும் சிக்கல்கள் என விரிவடையும் இந்த நாவல் , இலக்கிய பூச்சாண்டி எதையும் காட்டாமல் தோழனோ தோழியோ தன் கதையை சொல்வது போன்ற எளிமையான மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது. படிக்கும் அனைவராலும் சுலபமாக கனக்ட் செய்து கொள்ள முடியும்.
5 ஸ்டாரை பார்த்தவடன் இந்த புத்தகம் செம புத்தகம்னு நினைச்சுராதீங்க... எனக்கு இந்த புத்தகம் ரொம்ப பிடிச்சிருந்த்தது, அவ்வளவுதான். இந்த கதையின் கதாபாத்திரங்களின் எண்ணங்களை உங்களுடைய எண்ணம்போல் உணர்ந்து, எண்ணினால்தான் இந்த கதை புடிக்கும்...இல்ல எனக்கு சேலை கட்டினாதன் புடிக்கும் என்றால், இதை படித்தவுடன் அமெசான் செயலியை படார் என்று மூடிவிடவும்.
சமீபத்தில் சாருவின் Marginal Man நாவலுக்கு, Art Review Asia -வில் வந்த விமர்சனத்தைப் படித்தீர்களா அராத்து....? நடைமுறை வாழ்க்கையின் நய முரண்களை பேசு பொருளாக கையாளும் மிகச் சிலர் தான், இது போன்ற புனைவுகளில் ஈடுபடுகின்றனர் என்று சுட்டப்பட்டிருந்தது. இது தான் உயிர்மெய்கு எனது பார்வை(At a time when the issue of how art relates to life is the primary subject of cultural debate but this book has got some answer for this question).
உயிர்மெய் - வேகம் அசாத்தியம். என் வாழ்க்கையில் நீங்கள் புகுந்து வெளியே வந்தது போலிருந்தது. தாங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு வரியும் நான் கடந்து வந்த பாதையெனில், ஏற்க மறுத்த கருத்துகள், இன்று என்னை சராசரியிலிருந்து மீட்கும், post modern society - க்கு தேவையான இலக்கியம். ஒரு காதல் ஜோடியை அருகிலிருந்து கவனித்து, சுயபரிசோதனை செய்யத்தக்க நீவீனப் பதிவு. தரம்.
Good attempt to contemporary tamil romance. It is as if reading Ramanichandran novel modifed to the latest. It clearly depicts how the society is still having trouble in catching up with the culture (which is really a weird reality). But one disappointing part is I still think the author has trouble in grasping it. For example, when explaining how women should be dressed, shaved -- points to me a still the author is stuck in the male perception and not a novel author completely. Another example is author's view of man and woman's role in a marriage/relationship is outdated. Overall an interesting read.
அராத்தின் இப்படைப்பு, புத்துணர்ச்சியான ஈர்க்கும் உரைநடையைக் கொண்டது. தமிழில் contemporary novels எனப்படும் சமகாலத்து புதினங்களில், நான் படித்தது வெகு குறைவே. சரித்திர நாவல்களையும், தொண்ணூறுகளின் கதைக்கள படைப்புகளை மட்டுமே பெரிதாக படித்த எனக்கு, அராத்து அவர்களின் நடை மிகவும் கவர்ந்தது.
சிறிய புத்தகம், ஒரு அமர்வில் வாசித்து முடிக்க கூடிய புத்தகம்.
புதிய கதை என்று சொல்ல முடியாது, செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்று சொல்ல முடியாது
நிகழ் கால பிரதிபலிப்பு என்று கூறலாம்.
ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமான வர்ணனைகள் குறைக்கப்பட்டிருக்கலாம்.
A quick read. A cross sectional view of a modern day relationship. There were parts where the author explains psychology of men and women which I found interesting and accurate. Lot of fillers & unnessary descriptions at times.
Very interesting and narration is different from the usual style. In between author sarcastically mocks the template mindsets of men and women which is very funny.