குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது... இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா - கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?... நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். 'வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' நாவல் அதைத்தான் பேசுகிறது.
தமிழ்மகன் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
Ratings:3.5 Stars தமிழ் மற்றும்(அல்லது) திராவிடத்தின் வேர்களைப் பற்றி செல்லும் ஒரு அறிவியல் புனைவு கலந்த fictionalized non fiction கதையே வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள். வெட்டுப்புலி புதினத்துக்குப் பிறகான தமிழ்மகனின் மற்றொரு வாசிப்பு. இந்நூலை நீங்கள் ஒன்று அல்லது இரண்டு அமர்வுகளில் முடித்தால் இது சுவாரசியமாக இருக்கும். பொதுவாக தமிழ்ப்பண்பாடு பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் (Reference Books) வாசிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனக்கு நூலில் தென்பட்ட ஒரு பெரிய குறையே சில தகவல்கள் மீண்டும் மீண்டும் வருவதும், Non linear கதையாடல் ஒருகட்டத்தில் வாசிப்பில் சிறு அயர்ச்சியை அளிக்கும்.
உங்களுக்கு 70 களில் பதின்பருவத்திலிருந்த ஒரு தாய்மாமன் இருந்திருந்தால் இந்தப் புத்தகத்தில் வருகிற பெரும்பாலான கதைகளையும் நிகழ்வுகளையும் கட்டாயமாய்க் கேட்டிருக்கக் கூடும். இந்த நாவலின் எழுத்தாளார் தமிழ்மகன் செய்திருப்பதும் அம்மாதிரியான ஒரு முயற்சியே. மனித நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, தமிழின் தோற்றம்/வரலாறு, தமிழ் மன்னர்களின் கடல்பயணங்கள், கூடவே 60/70 களின் தமிழக அரசியல் சூழல், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் மற்றும் ராஜீவ் கொலை பற்றிய தகவல்கள், விடுதலைப்,புலிகள் குறித்த தகவல்கள், தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் கல்வெட்டுகள் பற்றிய குறிப்புகள் ...
ஆரிய திராவிட சித்தாந்தங்கள், அவர்களின் வாழ்வியல் குறித்த விளாக்கங்கள், திரமிடா கீழூர் மேலூர் மாதுறை ஆகிய ஊர்கள் பற்றிய விளக்கங்கள், உலகெங்கிலுமுள்ள பிற நாடுகளின் ஊர்களின் தமிழ் பெயர்கள், தமிழ் வார்த்தைகளோட ஒத்துப் போகிற பிற உலக/இந்திய மொழிகள் குறித்த தகவல்கள் என ஆச்சரியமூட்டுகிற சுவாரசியமான விஷயனங்கள் நிறைய உண்டு. மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு நல்ல தேடலுக்கான தொடக்கமாக இந்த நாவல் அமையலாம்.
இத்தனையையும் ஒரு futurology (இணையான தமிழ் வார்த்தை இல்லை) கதையில் புகுத்தி 90களில் பிறந்த தமிழ் young-adultsக்கு (தமிழ் இளையோர் ?!) கதை சொல்ல முயன்றிருக்கிறார். என்ன ஒன்று இந்த அதீதமான தகவல் திணிப்பின் காரணமாக அவ்வப்போது கதையின் போக்கே மறந்து போய் தகவல்களில் மூழ்கி விடுகிறோம் நாம். ‘மிளிர்கல்’ நாவலிலும் எனக்கு இதே பிரச்சனை இருந்தது. ஆனாலும் ஒரு 70s/80s refresher போல நிச்சயம் படிக்கலாம்.
எதிர்காலத்தில் நிகழ்கிற கதையில் வரும் கருவிகளும் சூழலும் நிறையவே சுஜாதாவை ஞாபகப்படுத்தின.
On a whole this book is like தொ.ப meets சுஜாதா meets சுப.வீ :) :)
முடிந்தால் 0 கூட கொடுக்கலாம், உடனே கடிக்க வராதீர்கள், எனக்கும் தமிழ் பிடிக்கும், சங்க இலக்கியங்கள், பெரியார், அம்பேத்கர் நூல்களை விரும்பி படிப்பவன் நான்.
The Author has read few books about tamils, history and language and has a faulty, biased, delusional history. He portrays this totally misleading tamil history by hiding behind the cloak of fiction.
You will be encountering some news like this,
- Cleopatra is a Tamil, because her name has Kili in it and looked black.
- Thiruvalluvar existed around 2000 B.C.E and knew about buddhism through ashoka, while ashoka and budha himself was born on 260 B.C.E, and 500B.C.E respectivele a 1500 year gap mistake by the author.
- Humans originated in Tamil Nadu and moved to the entire world, The author must read Sapiens and Guns, Germs ans Steel and know some real history.
- All language has few similar words as Tamil so all language came from Tamil, and so on.
- the Plain old kumarikaandam stories
There can be several other statements can be found throughout the book, apart from losing its own authenticity it tries tro destroy the credibility of the works of Balakrishnanan I.A.S and Iravadham Mahadhevan.
Apart from these historical faults, the book itself has no story, it has some fictional-historical accounts by the author and the book is hodgepodge of all these things.
அறிவியல் கற்பனை கதை வடிவம் தமிழில் புதிது . அதை தமிழ் மொழி உணர்வுக்காக இணைத்து படைத்தது சிறப்பு. கதைக்களம் போகும் பாதை வெகு தெளிவாக இருக்கிறது . மொழி உணர்வு தமிழனுக்கு அதிகம் என்பது அச்சம் *வீரம் சார்ந்தது என சொல்லிய வகையில் சிறப்பு . சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஆனாலும் படைப்பு ஒரு சார்பு அரசியல் நிலை வடிவில் இருக்கிறது. எதற்காக திமுகவை தூக்கி பிடிக்க வேண்டியிருக்கிறது என தெரியவில்லை. காங்கிரஸ் சார்பு ஆனால் பிஜேபி எதிர்ப்பு . காங்கிரஸ் ஆரியன் இல்லியா ? ஆரிய திராவிட கதைக்களஞ்சியத்துக்குள்ளே சுற்றுகிறது . கற்பனை கதைக்களத்தில் ஏகப்பட்ட தரவுகளை தூவ வேண்டிய அவசியமே இல்லை. தரவுகளின் உண்மை தன்மை வாசகரின் கற்பனைக்கே விடப்படுகிறது .
This book is a mix of fiction,history narrated in future 2037AD.It quotes "Sinduveli Panbattin Dravida Adithalam" by R.Balakrishnan that Indus valley civilization was tamils. It raises questions why tamils are willing to sacrifice themselves for their language. It focuses on Aryans Vs Dravidians(Tamils). It tries to connect the dots between tamils , indus valley , Sumerian civilization etc. The narration is non-linear and racy.
தமிழ் மகன் காரணப்பெயரா இல்லையா என்ற சந்தேகத்தை துடைத்தெரிந்த புதினம்..அருமையான மொழி நடையில் நடுவே நிறைய தகவல்களின் வழியாக கதை பயணிப்பது சிறப்பு.. Sapiens போல தமிழில் ஒரு மானுடவியல் நூல் எழுத யாராவது முயற்சிக்கவும்..
Good mix of sci fi and fantasy, it tries to touch many topics (history, anthropology, linguistics, politics, religion etc) in less than 200 pages. Because of which it didn't seem engaging. A bibliography should have been added. It's a must for books like this. 3 stars for the refreshing attempt.
2035-ல் நிகழ்வது மாதிரியான எழுதப்பட்ட நாவல். அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை புரிந்துக் கொண்டு அமைக்கப்பட்ட கற்பனை கதைக்களம்.
கதை முழுவதும் தமிழ் மொழி, தமிழர்கள் மற்றும் தமிழ் மொழி மீது அவர்களுக்கான பற்று, ஆரியர் திராவிடர்களின் தொடர்பு, இன்று அவர்களுக்கிடையேயான மோதல் என மிகவும் கனமாக, மிகச் செறிவுடன் எழுதியுள்ளார்.
கி.மு, கி.பி, சோழர்களின் ஆட்சி காலம், சிந்து சமவெளி நாகரிகம், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், திராவிடம் பேசுவோரை எதிரியாய் பாவிக்கும் மனப்பாங்கு கொண்ட அரசு ஆண்ட காலம், பறக்கும் டாக்சி, சேவை செய்ய ரோபாட் என மேம்பட்ட தொழில்நுட்பத்திற்க்கு இடையே வாழும் மனிதன் என முன்னும் பின்னும் கதை ஓட்டம் அமைந்துள்ளது..,
தமிழ் மொழிப் பற்றிய தளம் என்பதால், அரசியல் சர்சைகளுக்கும், சமூகவியலாளர்களுக்கும், பொது மற்றும�� மொழியியலாளர்களின் மாற்றுக் கருத்துகளுக்கும் பஞ்சமின்றி இப்புத்தகம் திகழும் என்பதில் ஐயம் இல்லை.
This story is about Origin of Tamil. While there was good amount of research done by the author to write this story, I would say it is a good read. But after a level of political observations, I would call this book a mysticism.
A complete adventurous fiction which includes some fame tamil histories and the story is hell of ride where you can't feel bored a bit till last line.much recommended for thrill,fictional lovers