“மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தட்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்தது. அதுதான் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள்.” “ஸ்டீவ் ஜாப்ஸ், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல தலைமுறைக்கு நினைவு கூறப்படும்” ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்தபோது, அவரது தொழில் போட்டியாளராகக் கருதப்பட்ட பில் கேட்ஸினால் தெரிவிக்கப்பட்ட இரங்கல் செய்தி அது. கணினித் துறையின் முதல் அடியை எடுத்து வைத்த அவர், தமது முதல் கனவான கணினியைக் கடந்து மூவிஸ், மியூசிக், மொபைல் என மூன்று உலகங்களின் தலையெழுத்தை மாற்றி எழுதி விட்டார். அவருடைய வார்த்தைகள் வீரியம் வாய்ந்தவை.