மோட்டார் விகடனில் வெளிவந்த நகைச்சுவை புனைவுகளின் தொகுப்பு. லிஃப்ட் கேட்டல் , காரை கடன் கொடுத்தல் , டிராஃபிக் போலீஸ் என ஆட்டோமொபைல் சம்மந்தப்பட்ட அனைத்தையும் பகடியாக பிரித்து மேய்கிறது. ஒரு ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இது போன்ற நகைச்சுவைப் புனைவுகள் வருவது உலகிலேயே இதுவே முதன்முறை. இதிலுள்ள அனுபவங்கள் அனைத்தும் உங்களுக்கே ஏற்பட்டது போல இருக்கும். ஒரே ஒரு வாகனம் வைத்து இருந்தாலும் நீங்கள் ரசித்து சிரிப்பது உறுதி,
சிரித்துக்கொண்டே படித்து முடித்தேன். நம்மில் பெரும்பலானோர் அனுபவித்த மோட்டார் துன்பங்கள் இப்போது நினைத்துப் பார்த்தால் கண்களில் நீர் முட்டுமளவிற்க்கு சிரிப்பை வரவழைக்கும் வகையில் எழுதியிருப்பது சிறப்பு.
Simple and points in each chapter is good. Enjoyed reading this book. Helpful for plan to engage call driver and regular driver. Have experience of getting driving license before knowing driving correctly. Thanks for your thoughts in this book. Language in the book was simple and engaging.
மோட்டாரை, பயணத்தை நேசர்களுக்காகவே சலிக்காத எழுத்து நடையில் உள்ளது.
அவர் நகைச்சுவையாக குறிப்பிடும் யாவும் நடைமுறை வாழ்வில் நடக்கும் அபத்தங்கள்.
Self driving செய்வதும் Driverஐ அமர்த்தி பயணிப்பதுமான அனுபவங்கள் எல்லோருக்கும் எப்போதும் வாய்ப்பது.
நமக்கு நேர்ந்ததை பிசிறு தட்டாமல் அப்படியே வருணிக்கிறார் தொடராக மோட்டார் விகடனில் தொடராக வந்த போது படித்திருந்தாலும் புத்தகமாக படிக்கும்போது விறுவிறுப்பாக இருக்கிறது.
ஒரே மூச்சில் படித்து முடிக்கப்பட்ட பல புத்தகங்களில் "பஞ்சர் போடப்படும்" நூலும் என் பட்டியலில் இடம் பெற்றது.
அராத்து அவர்கள் எழுதிய அடுத்த புத்தகத்தை கிண்டிலில் தேடிக் கொண்டிருக்கிறேன் சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கிய அராத்து அவர்களுக்கு நன்றி.
நிஜ வாழ்க்கை சம்பவங்களை இவ்வளவு அழகாக கோர்வையாக படிப்பவர்களுக்கு விறுவிறுப்பாக எழுதியிருப்பது அருமை. ஆரம்பித்து படுத்து முடித்துவிடு தான் நிறுத்தினேன். ஒவ்வொன்றாகப் படிக்கையில் நமது வாழ்க்கையில் நிகழ்ந்த இதுபோன்ற சம்பவங்களை நினைவு கூற முடிந்தது.
after a long time I got the opportunity of reading a true comedy book. ரசித்து ரசித்து சிரிக்க முடிகிறது. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. 'araathu' is now one of my favourite writers
சுவாரசியமான பஞ்சர் கட்டுரைகள். வாகனங்களை வைத்து நம்மவர்கள் செய்யும் அட்டகாசங்களை நகைச்சுவையாக கூறியிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. என்ன மேட்டர் என்பதை சாதாரண மொழி பயன்பாட்டால் சாட் அன்ட் ஸ்வீட்டாகக் கூறியிருப்பது கட்டுரைகளை மேலும் மெருகூட்டுகிறது.
நகைச்சுவையான மொழி நடை. காட்சி அமைப்புகளை விட எழுத்தின் மூலம் சிரிக்க வைப்பது கொஞ்சம் அல்ல நிறையவே கடினம். அதை யதார்த்த நகைச்சுவை களின் மூலம் எளிதாக செய்திருக்கிறார்.
Enjoyed reading this book. Though writer wrote in comedy's style. Its written from frustration own bitter experience.. making it a comedy shows that he doesnot want to pinpoint or hurt anyone.. lovely book makes younto live through the experience.
Another excellent book by Araathu. Real life funny incidents related to Automobiles like buying a car, lending a car, LLR, Service Centre, Traffic constable comedies. All these write ups we can relate to some and most of these cases might have happened in our life as well.