Jump to ratings and reviews

கண்ணகி

லஞ்சங்களும் அதிகாரங்களும் தலைவிரித்தாடும் அரசு அலுவலகங்கள் நிறைந்த சாலை அது. அரசு விருந்தினர் “மாளிகை” உள்ள சாலையில் இளநீர் முதல் இறைச்சி வரை கூவிக்கூவி விற்கும் சிறுவியாபாரிகள். அவர்களில் ஒருத்தி தான் அதிகாலையிலயே தனது ஜொலிப்பான மீன் கடையை விரித்து திறமையான பேச்சுத்திறமையோடு வியாபாரம் செய்யும் கண்ணகி. உதாரணமாக ஒருகிலோ மீன் வாங்க வந்த வாத்தியாரை 2அரை கிலோ மீன் வாங்க வைத்தல். அவளிடம் வேலை செய்யும் (மீன் கழுவி அரிந்துபோடும்) நான்கு பெண்கள். நான்கு பெண்கள் கண்ணகியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இரவு சமைப்பதை மட்டுமே உண்டு வாழும் இந்த கண்ணகி யார்? எப்படி இவ்வளவு துணிச்சலான பெண்ணாக இருந்து வருகிறாள்? விரிகிறது ப்ளாஸ்பேக்! சித்தேரிக்குப்பம் ஊர்த்தெருவை விட்டு ஒதுங்கி இருந்த காலனியில் வசித்து வந்தார் காசாம்பு. மாட்டுக்கறி கூறுபோட்டு விற்பவர். காசாம்புக்கு 3 பொண்டாட்டிகள், 17 மகன்கள், ஆசைக்கு ஒரேயொரு பெண். மகள் கசந்தாமணி மீது தனிப்பாசம். தன்னுடன் மாட்டுத் தரகு செய்யும் அஞ்சாம்புலிக்கு கட்டிக்கொடுத்தார். கொளப்பாக்கம் தான் அஞ்சாம்புலியின் சொந்த ஊர். திருமணம் ஆன பிறகு குடிசைபோட்டு வாழத்தொடங்குகிறார்கள். மாடு வாங்கி வளர்க்கிறார்கள். கண்ணகி பிறக்கிறாள். அவள்மீது காசாம்புக்குப் பாசம் அதிகமாகிறது. தாத்தா காசாம்பு போட்டுத்தரும் மஞ்சள்தூள் போட்டு அவித்து தந்த கறியை வழிநெடுக தின்றுகொண்டே செல்லும் கண்ணகி… அவளை அடுத்து பிறக்கும் தம்பி… தன் வீட்டிலிருந்து மறுபக்கம் உள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோயில்… அதையடுத்து உள்ள ரைன்கர தெரு… இரவுநேர ரகசியம்… புஷ்பா அக்காவைப் பற்றிய ரகசியம் அறிய முற்படும் கண்ணகி…

208 pages, Paperback

First published December 1, 2008

Loading...
Loading...

About the author

சு. தமிழ்ச்செல்வி என்பவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர். திருத்துறைப்பூண்டியில் பிறந்த இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல இலக்கிய மேடைகளை அலங்கரிக்கும் இவர் மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, தொப்புள்க்கொடி மற்றும் கண்ணகி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "மாணிக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (80%)
4 stars
0 (0%)
3 stars
1 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
2,121 reviews1,110 followers
April 8, 2018
பாலியல் சுதந்திரத்தை கையில் எடுக்கும் போது அதுவே ஒரு காலத்தில் அழிக்கும் ஆயுதமாகிறது எடுத்தவர்களுக்கு.

பெண்ணின் வாழ்க்கையில் அவளைச் சுற்றியிருக்கும் கட்டுகளை உடைத்தெறிய அவள் அடையும் ஏமாற்றம் ஒன்றே போதுமாகிறது.

பதிமூன்று வயதில் மன ஆசைகளுக்கு முதன்மை கொடுத்த கண்ணகி ஊரில் மின்சாரத் துறையில் வேலைக்கு வந்த ஆசைத்தம்பியின் மேல் ஆசைப்பட்டு ஓடிவந்தவள் எவர் சொல்லும் காதில் ஏற்றிக் கொள்ளாமல் அவனுடன் தான் வாழ்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள்.

பல பெண்களுடன் வாழும் ஆசைத்தம்பி கண்ணகிக்கு பிறகு மேலும் இருவரை திருமணம் செய்து கொள்கிறான்.

உழைப்புக்கு அஞ்சாத கண்ணகியாலே ஆசைத்தம்பியின் குடும்பத்தின் வயிற்றுபாடு நிறைகிறது.மகன் வேறு எவளோடவோ குடும்பம் நடத்தினாலும் மருமகள் கண்ணகி தங்களுடனே இருந்து கொண்டு வேலை செய்வது அவன் குடும்பத்திற்கு ஒரு பிடிப்பாகிறது.

ஆசைத்தம்பியின் செயல்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளை இறந்தே பெற்றெடுக்கும் கண்ணகிக்கு ஒரு கட்டத்தில் அனைத்தும் வெறுத்துப்போய் அங்கிருந்து வெளியேறுகிறாள்.போக்கிடம் எதுவுமில்லாமல் போக ஒதுங்க இடம் கொடுத்த ஒரு பெயிண்டருடன் ஒதுங்கி ஒரு பிள்ளையும் பெற்றெடுக்கிறாள்,குடும்பத்தைக் காரணம் காட்டி குழந்தைக்குத் தான் தான் அப்பன் என்று சொல்லாமல் அவன் விட்டு போனதால் ஆசிரமத்தில் விட்டு வேலைக்காரியாகச் சிங்கப்பூர் செல்கிறாள்.

வீட்டு வேலைக்கு என்று அழைத்துவரப்பட்டவள் முதலாளி அன்சாரியின் தேவைக்குத் தான் தன்னை வரவழைத்தார்கள் என்று தெரிந்த பிறகு அதற்கும் உடன்படுகிறாள் ஆசைத்தம்பியை பழிவாங்கிய திருப்தியும் அடைகிறாள்.

பதினாங்கு வருடம் அன்சாரியுடன் வாழ்ந்தவள் மகன் பெரியவனானவுடன் இந்தியா வர விருப்பம் கொண்டு வந்தால் மகனிடம் எந்த வித பாசமும் தன் மேல் இல்லை என்பதைத் துயரத்துடனே ஏற்றுக் கொண்டாலும் உடலை வித்துச் சம்பாதித்த காசை இங்கே இருக்கும் சொந்தங்களுக்கு எல்லாம் கொடுக்கிறாள்.

மனைவி கையில் பணம் புரள்வதால் மீண்டும் அவளுடன் வாழ வந்த ஆசைத்தம்பியையும் ஏற்றுக் கொண்ட கண்ணகி அவனின் இறுதி காலம் வரை பார்த்துக் கொள்கிறாள்.

கண்ணகியின் மகனுக்குத் தாய் சிங்கப்பூரில் என்ன வேலை செய்தாள் என்று தெரிந்த பிறகு மேலும் அவளிடமிருந்து விலகி சென்று அவனுக்கென ஒரு வாழ்வை அமைத்து கொள்கிறாள்,அவன் ஆசைத்தம்பிக்கு பிறந்தவன் இல்லை என்பது கடைசி வரை மறைத்தே வைக்கிறாள் கண்ணகி.

ஆசைத்தம்பியின் இறப்பிற்குப் பிறகு நான்காண்டுகள் கழித்து மீண்டும் அன்சாரியுடனான தொடர்பை புதுப்பித்துக் கொள்கிறாள் கண்ணகி.

கண்ணகியின் வாழ்வே சமூகத்தில் பெண்களின் பாலியல் எப்படி நோக்குகிறது என்பது விளங்குகிறது.பணத்தைக் காட்டினால் கட்டுபாடுகள் விலகி மறைந்து போவதும் ஆண் தன் தேவைகளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் நாடகமாடி ஏமாற்றுவதும்,ஜாதி தினசரி குடியான்களின் வாழ்வில் எப்படி முன்னிலையில் இருக்கிறது என்பதும் கதாபாத்திரங்களிடம் ஊடே சொல்லப்பட்டிருக்கிறது.

தவறுகள் என்று சொல்லப்படுவது அனைத்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் மாறுபடுகிறது என்று கண்ணகி கேட்கும் கேள்விக்குச் சமூகம் சொல்லும் பதில் கட்டுபாடுகளை உருவாக்கிய ஆண்களின் பதிலாக போனது ஒரு பக்க சார்பாகிறது.
Profile Image for Selva.
55 reviews
March 31, 2021
கண்ணகி என்றாலே கற்பை உயிராக கருதி கணவனுக்காக உயிர் விடுபவள் மட்டும் அல்ல அதையும் தாண்டிய பல பெண்களின், போராட்டங்களும் அவலங்களும் நிறைந்தது என உதாரணம் இந்த கதையின் கண்ணகி.

இந்த புத்தகத்தை படிக்கும் போது என்னடா கதை என்பது போல தான் இருந்தது. ஆனால் படித்து சில வருடங்கள் ஆகியும் இந்த கண்ணகி மனதை விட்டு நீங்காமல் இருக்கிறாள். அத்துனை குற்றசாட்டையும் உதறி விட்டு ஏதோ ஒரு தூய்மை தன்னிடம் இருப்பதாக உணர்த்துகிறாள்.

அவளின் இலக்கணத்தில் ஆண் என்பவன் தன் மனம் கவர்ந்திருந்தாலும், அவளுக்கு குழந்தையை கொடுத்திருந்தாலும், தன் வயிற்றில் பிறந்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆணாகயில்லை. ஆனால் எவனொருவன் அவளை மனதால் சந்தோஷ படுத்தி அவளின் சிரிப்பிற்கு அர்த்தமாகி நின்றானோ, அவளுக்கு உறுதுணையாக இருந்து அவளும், அவளின் குடும்பமும் முன்னேற உதவியாக இருந்தானோ, அவளின் கண்ணீருக்கு பின் உள்ள அர்த்ததை புரிந்து கொண்டானோ அவனே சிறந்த ஆண் மகன் அவனை தெய்வத்திற்கு நிகராக எண்ணுகிறாள்.

ஆம், இங்கே பெண்கள், ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்ப்பது இத்தகைய ஆறுதலை தான் அவை கிடைக்காத போது இது போல் பல கண்ணகிகள் உருவாகின்றனர்.
Displaying 1 - 2 of 2 reviews