இன்றைய இளைய சமுதாயம் காதலையும் காமத்தையும் புரியாமல் குழப்பி கொண்டும், வாழ்க்கையில் சரக்கும், பெண்களும் முக்கியம் என்று எண்ணி நடைமுறை வாழ்கையில் படும் சின்ன சின்ன மன குழப்பங்களை இந்த புனைவில் காணலாம். காதலன், காதலி என்கிற வரையறைகளை செக்ஸ் மூலம் அணுகும்போது வரும் புரிதலின்மையை இங்கு காணலாம். காமத்திலும், காதலிலும் தோற்க்கும் போது தேவைப்படும் சின்ன சின்ன மன ஆறுதல்கள் எப்படி ஒருவன் / ஒருத்தியை அமைதி கொள்ள செய்கிறது என்பதும் இந்த புனைவில் சொல்ல பட்டிருக்கிறது. உயிர்மெய் - 1 யின் அட்டகாசமான வரவேற்பையும், வெற்றியையும் கொடுத்த வாசகர்களின் ஏகோபித்த அன்பிற்க்கு இந்த உயிர்மெய் - 2 வெளிவந்து அபரிதமான வரவேற்ப்பை பெற்ற புனைவு தான் உயிர்மெய் - 2
கதை சொல்லும் கோணம் மிக வித்தியாசமாக இருந்தது அதிலும் மிக குறிப்பாக வழமையான கதையம்சங்களை நக்கல் அடுத்திருந்த விதம் அருமை. மிக விரைவாகப் படித்து முடித்துவிட்டேன். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளை படித்து போர் அடித்தவர்களுக்கு இது நிச்சயம் ஆர்வம் ஊட்டுவதாக இருக்கும்
Definitely not as interesting as the first one. Shamitra got all the guys she meets hitting on her ! Gets a bit predictable. Hope the author makes third installment an interesting one.
கதை முழுதும் போதையிலேயெ மிதக்கிறது.அது படிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.இன்றைய இளைஞர்களின் ரிலேஷன்ஷிப் பற்றிய மனப்போக்கு மற்றும் கொண்டாட்ட மனநிலையிலேயெ வாழ்தல், எம்பதி இல்லாத மனப்பாங்கு போன்றவற்றை கதை நெடுக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அராத்து.எல்லா கேரக்டர்களிலும் அராத்துவின் இன்ப்லுயன்ஸ் தென்படுகிறது.