மனிதனின் ஆசையே புதிய கண்டுபிடிப்புகளின் தொடக்கபுள்ளியாகிறது.
கடல் என்று கேட்ட நொடியிலே பிரமாண்டம் என்ற வார்த்தை உள்ளுக்குள் அன்னிச்சையாக ஒலிக்கத் தொடங்கிவிடுகிறது. அதுவே கடல் பயணம் சார்ந்த புத்தகங்களைச் சாகசம் நிரம்பிய ஒன்றாக எண்ணத் தொடங்கிப் படிக்கும் ஆர்வத்தையும் உண்டுபண்ணிவிடுகிறது.
முன்னுரையிலே இது சுட்டி விகடனில் எழுதப்பட்ட தொடர் என்று சொல்லப்பட்டிருந்ததால் இளம் வாசகர்களுக்கான திறவுகோலாக உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பதிமூன்று பயணிகளின் பயணங்கள் பற்றிச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்புத்தகத்தில் ஆசிரியர் சீன பழமொழியை மேற்கொள் காட்டியிருப்பார் ///எல்லாப் பெரிய பயணங்களும் முதல் அடியில் இருந்தே தொடங்குகின்றன/// அது போலத் தான் மேம்போக்கான எளிய தகவல்களைக் கொடுத்து அதன் ஒவ்வொன்றின் ஆழத்தை நோக்கி செல்லும் பாதையைக் காட்டுகிறார்.
நான் படித்த வரையில் தமிழில் நரசய்யாவின் கடல்வழி வணிகம் புத்தகம் ஒரு மிகப்பெரிய தகவல் பெட்டகம் என்றே சொல்லலாம்.
ஆசியாவை நோக்கியே பெரும்பாலும் கடல்வழி பயணங்கள் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதைப் பேராசை என்ற வட்டத்திற்குள் மட்டும் அடைக்காமல் அதன் மூலம் மனித நாகரீக வளர்ச்சி எட்டிய உயரத்தை பார்த்தால் கடல் பயணங்களே மாபெரும் புரட்சியை உண்டாக்கியிருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.
இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணம் என்பது சட்டென்று திட்டமிட்டு செல்லக்கூடிய ஒன்று! ஆனால் வரலாற்றில் தூர தேசப் பயணங்கள் அனைத்துமே சாகசம் தான்! தன் உயிரையும் துச்சமாக மதித்து பயணம் மேற்கொண்டு, இப்புவியையும், கடலையும் குறித்த அறிவை விஸ்தீரணம் செய்து கொண்ட பயணிகளை பற்றிச் சொல்கிறது இந்நூல். மார்கோ போலோ, கொலம்பஸ் என்று நாம் அறிந்தவர்களோடு, நாம் இது வரை அறிந்திராத பலரையும் அறிமுகம் செய்கிறது! சிறார்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டிய புத்தகம்.
அலுக்காத எழுத்து நடை, நாம் கேட்டிராத புதிய கடல் பயணிகளின் கண்டுபிடிப்புகளோடு, இன்றைய குழந்தைகளுக்கு கடல் பயணங்களைப் பற்றிய எண்ணத்திற்கு குறு அறிமுகத் தேடலாய்.
கடல் பயணங்கள் - மருதன் - கட்டுரை தொகுப்பு - பதிப்பகம் கிழக்கு - பக்கங்கள் ,144 - முதல் பதிப்பு , 2017
கடல் பயணங்கள் - பயணங்கள் மூலம் உருவான மாற்றத்தை பற்றி பேசும் புத்தகம்
புத்தகம் பற்றி : மொத்தம் 14 கட்டுரைகளும் 144 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் கடல் பயணத்தில் சிறந்தது விளங்கிய மனிதர்களை பற்றி பேசுகிறது முதல் கட்டுரைய வாஸ்கோட காமாவின் இந்திய பயணம் எப்படி ஆரம்பித்தது அதற்கு காரணம் என்ன என்பது தொடங்கி கடைசியாக அவர் எப்போது இந்தியா வந்து சேர்ந்தார் அதன் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன என்ற தகவல்கள் பற்றி சொல்லி இருக்கிறார் உண்மையை சொல்ல போனால் இந்தியாவிற்கு கடல் பயணமாக வந்த முதல் ஐரோப்பியர்கள் போர்துகிசியர்கள் தான் 1961 ஆண்டுக்கு பிறகு கடைசியாக சென்றவர்களும் போர்துகிசியர்கள் தான்
அடுத்த கட்டுரை செங் ஹே என்று சொல்ல படும் சீன மாலுமியை பற்றியது இவரை பற்றி படிக்கும் பொது தான் கிட்டதட்ட ஐரோப்பிய மாலுமிகளுக்கு சமமான ஒரு மாலுமியாக இருந்து வந்து இருக்கிறார் என்பது தெரிகிறது அப்படி பட்ட சாதனைகளை செய்து இருக்கிறார் அதை இந்த புத்தகத்தை படிக்கும் பொது தெரிந்த கொள்ளலாம்
அது மட்டும் இல்லாமல் இபின் பதூதா , மார்கோ போலோ , பார்தோலோமியோ டியாஸ் , போன்றவர்களின் பயணங்களும் சரி இந்தியாவை கண்டுபிப்பதாக சொல்லி கொண்டு மத்திய அமெரிக்காவில் குடி ஏறின கொலம்பஸன் பயணங்களும் சரி நம்மை ஆச்சிர்யத்தில் ஆழ்த்துகிறது
பயணங்கள் என்பது புது புது நாடுகளை கண்டுபிடித்து அங்கு வர்த்தகம் செய்கிறேன் என்ற பெயரில் பூர்வ குடிகளை அடிமை படுத்தி அங்கு உள்ள செல்வங்களை சுரண்ட மட்டும் தான் என்பது இல்லாமல் சார்லஸ் டார்வின் போல இயற்கையை பற்றி படிக்கவும் , மனிதர்களை பற்றி தெரிந்துகொள்ள செய்த பயணங்களும் உண்டு அதுவும் இந்த புத்தகத்தில் இருக்கிறது. கண்டிப்பாக படிக்கச் வேண்டிய புத்தகம் இது
கடல் பயணங்கள் அப்படின்னு சொல்லும் போதே மனதுக்குள் ஒரு உற்சாகம் வந்து குடிக்கொண்டுக் நம்மை கொல்கின்றன. வெவ்வேறான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணிகள், வெவ்வேறான நோக்கங்களுடன் கடல் வழியே பயணம் மேற்கொண்டிருந்தன. ஒவ்வொருவரின் வரலாறும் மிகச்சுருக்கமாக நமக்கு அள்ளித்தருகிறது. இந்த படைப்பின் மூலம், மேலும் ஒவ்வொருவரின் வரலாற்றையும், அவர்களின் பயணத்தைக் குறித்தும் ஆழமாக தெரிந்துக்கொள்ள ஆர்வத்தை விதைத்துவிட்டு சென்றிருக்கின்றன...இவர்களின் வழியே நாம் கற்றுக் கொள்ளும் முக்கியமான விஷயம், “பயணங்கள் ஒரு போதும் முடிவடைவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவை நாம் துரத்திப்போக வேண்டும். அந்த கனவை எப்படியாவது நனவாக்க வேண்டும். அதற்காக தோல்வியிலும் துவளாத பயணங்கள் நாம் மேற்கொள்ள வேண்டும்“. “இது பயணங்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்"🔥💜😍. அட்டைப்படம் மிகவும் அழகு😍 அதன் கடல் பயணத்தைப் போலவே🤪