முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன? அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப் பயணம் தொடங்கி இலக்கைச் சென்றடையும் வரை பயணப்பாதையைச் சுற்றி இருக்கும் அனைத்தின் மீதும் விருப்பு வெறுப்பின்றி வெளிச்சத்தைத் தூவிக்கொண்டே வருகிறார். உரக்கப் பேசாமல் புன்னகையுடன் நம்முடன் சகபயணியாக வருகிறார்.
நம் வாழ்க்கையில் முன் நிற்கும் நம்மால் அதிமுக்கியம் எனக் கருதப்படும் பல வினாக்களும், விழுமியங்களும், புரிதல்களும் காணாமல் போகும் மாயமும் இந்தப் பயணத்தில் நடக்கிறது. பயணத்தின் இறுதியில் எஞ்சுவது புன்னகையும் நம்பிக்கையும்தான்.
வாழ்க்கை என்பது வெறும் கருப்பு வெள்ளை மட்டும் கிடையாது. பல்வேறு வண்ணங்களுக்கும் அங்கு இடமுண்டு. அவை ஒவ்வொன்றும் அதனளவில் தனித்துவமும் முக்கியத்துவமும் கொண்டது. இந்தப் பல்வேறு வண்ணங்களின் இருப்பும் கவனிக்கப்ப்படும்போது ஏற்படும் மனவெழுச்சியை நோக்கித்தான் முத்துலிங்கத்தின் படைப்புகள் நம்மை அழைத்துச் செல்கின்றன.
Appadurai Muttulingam (Tamil அ. முத்துலிங்கம்) (born 19 January 1937) is a Sri Lankan Tamil author and essayist. His short stories in Tamil have received critical acclaim and won awards in both India and Sri Lanka.
இது ஒரு சிறப்பான நூல். நன்றாக இருக்கும் என்று நினைத்துதான் வாங்கினேன், ஆனால் இவ்வளவு அருமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இவ்வளவு பெரிய இலக்கிய ஆளுமையை இத்தனை நாளாய் அறியாமல் போய்விட்டோமே என்று நாணுகிறேன். அ.முத்துலிங்கம் என்னும் மிகச்சிறந்த இலக்கிய படைப்பாளி, இந்நூல் மூலம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்.
நாடற்றவர்களின் மனநிலையை பற்றி புரிந்துகொள்ள எனக்கு இந்நூலும் 'அ.முத்துலிங்கம் சிறுகதைகள்' நூலும் பெரும் உதவியாக இருந்தன.
இந்நூலின் வாயிலாக நான் கனடாவை அறிந்துகொண்டேன். அந்நாட்டில் மேன்மையை புரிந்துகொண்டேன். இப்படைப்பு மனதினை பண்படுத்தும். ஆசிரியருக்கு நன்றி.