உறவுகளை இழந்து தனிமைத் துயரில் உழலும் நிவேதிதா… காதல் உணர்வுகளை அவளுள் தட்டியெழுப்பும் நந்த கிஷோர்… சூழ்நிலையால் கானலாய் மாறும் காதல் கைகூடுமா? தூரிகையின் வண்ணங்களில் அவள் வாழும் கற்பனை வாழ்வை, அவளுடைய எண்ணங்களின் நாயகன் வண்ணமூட்டுவானா? மாயத்தூரிகை... இனிமையான காதல் கதை. வாசித்து மகிழுங்கள்!
குடும்ப அமைப்பில் கிடைக்காத அன்பை வெளியில் தேடும் மனது கிடைத்த அக்கறையான சிறு சிறு சொற்களின் பின்னே நடைபோட்டு தனக்கென ஓர் உலகை வடிவமைத்து அதனுள்ளே ஒடுங்கி வாழும்.
ஆறுவயதில் இருந்து தனித்து வாழும் நிவேதிதா பருவ வயதில் தொட்ட நேரம் கரிசனையான நந்தகிஷோரின் வார்த்தை அவனுடன் வாழ வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டிவிட்டு ஒரு மாய உலகில் அவனுடன் வாழ வைக்கிறது.
தன் பெரியப்பா மகளான தூரிகாவும் அவனைத்தான் காதலிக்கிறாள் என்று அறியும் போது மாய உலகம் அப்படியே தான் கடைசிவரை இருக்கும் என்று உணர்ந்ததால் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறாள் நிவேதிதா.
முகம் காட்டாமல் தன்னைக் காதலிக்கும் நிவேதிதாவின்பால் அன்பு கொண்ட நந்தகிஷோர் நேரில் தூரிகா தான் தன்னைக் காதலிப்பவள் என்று நினைத்து கேன்சரால் இறக்கும் நேரத்தில் இருப்பவளின் கழுத்தில் தாலியை கட்டிவிடுகிறான்.
தூரிகா இறந்த பிறகு மூன்று வருடம் மனஅழுத்தத்தில் இருப்பவளை டாக்டர் வருண் குணப்படுத்தினாலும் முழுமையாக நிவேதிதாவை குணப்படுத்த தேவையான தகவல் இல்லாமல் தடுமாறுபவன் தன் திருமணத்தில் அவளின் கடந்த காலக் காதலை முழுமையாகத் தெரிந்து அதை நேர் செய்வதற்காகத் தன் சொந்தமான நந்தகிஷோரையே மணக்கும்படி செய்துவிடுகிறான்.
நிகழ்காலத்தை மட்டுமே பற்றாகக் கொண்டு தொடங்கிய நந்தகிஷோர்-நிவேதிதாவின் திருமணவாழ்வு கடந்த கால காதலை அறிந்த பிறகு இறுகி அப்பந்தம் பிணைந்து அவளின் மனகாயத்தை முழுமையாகக் குணப்படுத்திவிடுகிறது.
தனிமையில் வளரும் குழந்தை தேடும் அன்பையும், பாசத்தையும். எதிர்கொள்ளும் பயத்தையும் , தடுமாற்றத்தையும் நிவேதிதா கதாபாத்திரம் முழுமையாக அதன் போக்கில் பதிவு செய்கிறது.
நட்பு என்ற இழையைக் கொண்டு சுமித்ரா நிவேதிதாவின் வாழ்வில் கொண்டு வரும் மாற்றம் மனிதர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது.
தன்னைக் காதலிப்பது யார் என்று தெரியாமல் தன்னைக் காதலிக்க வைத்தவள் எவர் என்று தெரியாமல் தான் கொண்ட பிம்பத்திற்குக் கிடைத்த உருவத்தை ஏற்று ஒரு குழப்பத்தில் இருந்தாலும் நந்தகிஷோரின் மனது தனக்கானவளை கண்டபிறகு மாற்றத்தின் படியில் ஏறத் துவங்கிவிடுகிறது.
உறவுகளால் கிடைக்காத அன்பை தன்னைச் சூழ இருக்கும் மனிதர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் நிவேதிதாவின் மனம் விரும்பிய அனைத்தும் நிறைவேறுகிறது.
A lovely love story. A psychological story knot explains the pain and happiness of the character Nivedita.. I don’t want to reveal the suspense. Until last chapter the suspense continues and keep the reader guessing.