Jump to ratings and reviews
Rate this book

ஆதவன் சிறுகதைகள் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)

Rate this book
'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போட லாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.'

'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் 'கூடாரங்கள்' என்று குறிப்பிடுவது அவருடைய சிறுகதைகளை. இந்தப் புத்தகந் தான் ('முதலில் இரவு வரும்') அவருக்குச் சாகித்திய அகெதமி விருதை வாங்கித் தந்தது.

300 pages, Kindle Edition

First published January 1, 1992

22 people are currently reading
47 people want to read

About the author

Aadhavan

24 books22 followers
Also known as ஆதவன் (Tamil).

Sundaram was born in Kallidaikurichi in Tirunelveli District and obtained his education in Delhi. He worked briefly for Indian Railways. Later he joined the National Book Trust of India as an assistant editor. He married Hema in 1976. He started his literary career as a writer of stories for children in the magazine Kannan. He wrote under the pseudonym Aadhavan (lit. The Sun). His most noted work was the novel En peyar Ramaseshan (lit. My name is Ramaseshan), which was translated into Russian by Vitaliy Furnika and sold over a hundred thousand copies. In 1987, he drowned while swimming in a river at Shringeri. He was awarded the Sahitya Akademi Award for Tamil posthumously for his collection of short stories Mudalil iravu varum (lit. First comes the night)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
31 (50%)
4 stars
21 (34%)
3 stars
8 (13%)
2 stars
0 (0%)
1 star
1 (1%)
Displaying 1 - 4 of 4 reviews
3 reviews
July 20, 2024
அவருடைய ஒவ்வொரு கதையையும் நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாது‌ (என்னால் முடியவில்லை). ஆனால் ஒவ்வொரு கதையிலும் சில கதாபாத்திரங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளலாம். அந்த நேரத்தில் அவர் எழுத்துக்கள் உங்களை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்லலாம் , பாதிக்கலாம்.
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
January 30, 2018
படிக்கும் போதே ஆதவனின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் உள்மனத்தினுள் புகுந்து நம்மிடமுள்ள ஏதோவொரு குறையையோ நிறையையோ எடுத்து சொல்லி விடுகிறது. நம்மால் சொல்லமுடியாத சொல்லக்கூடிய கதைகள், ஆம் அதுவே ஆதவனின் கதைகள்.
Profile Image for Premanand Velu.
241 reviews43 followers
January 24, 2018
எழுபதுகளின் பெருநகர வாழ்வு மற்றும் அதனூடாக வரும் மனச்சிக்கல்களை அனுபவ பயணத்துக்கு நம்மை அழைத்துப்போகிறார். மத்திய மற்றும் மேல்த்தட்டு வர்க்கத்தின் உறவுகளின், வாழ்வின் சிக்கல்களை வகை பிரித்து காட்டுகிறார், ஆசிரியர். களம் மற்றும் காலம் எல்லோருக்கும் புரிந்து ஆழ்ந்து போவதென்பது இயலாது. இந்திரா பார்த்தசாரதி, களத்தை தன் நிஜ வாழ்க்கையில் இருந்தே தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. எது எப்படி இருப்பினும் சுவாரசியத்துக்கு குறைவில்லை.
56 reviews5 followers
September 22, 2024
வேறு ஒரு காலகட்டத்தின் சூழ்நிலைகள், சங்கடங்கள், பிரச்சினைகள் ஆகியவற்றின் விரிப்பில் எழுதப்பட்டுள்ள தனி மனித மன போராட்டங்களுடைய கதைகள். மிகவும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் படைக்கப்பட்டுள்ளவை. உணர்ச்சிபூர்வமானவை. உள்ளத்தை வருடபவை சில, தீர்க்க யோசிக்க வைபவை சில. பாலச்சந்தர் படங்கள் பார்த்த அனுபவத்தை உண்டாக்கின.
ஆதவன் ஒரு மிக சிறந்த படைப்பாளர். அதை விடவும் மனிதர்களை, குறிப்பாக இளைஞர்களை, மிகவும் புரிந்து கொண்டவர்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய சிறுகதைகள்.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.