* இச்சமுகத்தில் platonic love, உறவுகள் எல்லாம் எத்தனை போலி; நடைமுறையில் சாத்தியம் இல்லாததால்தான் அவை காவியங்களாக எழுத்தில் மட்டும் இருக்கின்றன.
* இன்றைய அவசரப்போக்குச் சமூகத்தில் மன்னிப்பு என்பது ஒரு பண்டம்.
* மன்னிப்பு கேட்பவன் மாமனிதனாக இருப்பதற்கு முன் மனிதனாக இருத்தல் வேண்டும்.
* அம்மணமாகி நிற்கப் பழகி கொள்ளுங்கள். இனி வரும் காலத்தில் ஒவ்வொரு தெருவிலும் பற்பல அம்மணக் கூட்டங்கள் நிற்கும்.
* கோபமும், வெறுப்பும் வருகிறதெனில் நீங்கள் அந்தக் கடந்த காலத்தில் தேங்கிவிட்டீர்கள் என்று பொருள்.
* இந்திய வரலாறு முழுவதும் புரோகித கும்பலின் அழிச்சாட்டியம் கொண்டே எழுதப்பட்டது.
* கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உழலுவதல்ல வாழ்க்கை; நிகழ்வதுதான் இருத்தல்.
* கடவுளை எடுத்துவிடுங்கள், மதம் என்ற அமைப்பு இருக்காது; பெண்ணடிமைத்தனத்தை எடுத்துவிடுங்கள். சாதி இருக்காது.
* மக்கள் அரசியல்வாதிகளாகி பல காலம் ஆகிவிட்டது.
* Ego is always a victim. அதற்குத் தேவை எல்லாம் நேசம் மட்டுமே. அன்பு எளிது. அன்பு காட்டுதல் அதைவிட எளிது. அதைப் புரிந்து கொள்ளுதல் அதைவிட மிகமிக எளிது.
* நொறுங்கி போனவரை இன்னும் நொறுக்க நீங்கள் தூக்கும் சுத்தியல்கள்தான் மிகக் கனமானவை.