தமிழே இன்பம், இன்பமே தமிழ். கம்பன், சேக்கிழார், திருப்புகழ், அருட்பா போன்ற நூல்களைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். இவை செய்யுள்கள். உரைநடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் திரு.வி.க, சேதுப்பிள்ளை ஆகிய இரு புலவர்களின் செந்தமிழைச் செவிமடுக்க வேண்டும். "செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" என்றும் சொல்லலாம். அவர் பேச்சு அளந்து தெளிந்து குளிர்ந்த அருவிப் பேச்சு. அவர் எப்பொருளை எடுத்து விளக்கினாலும், அது மனத்திரையில் சொல்லோவியமாக நடமாடும். அவர் எழுதிய "வேலும் வில்லும்", "ஊரும் பேரும்" முதலிய நூல்கள் தமிழின்பத் தேன் துளிகளாகும். மற்றொரு நூல் இதோ இருக்கின்றது! இதன் பெயரே "தமிழின்பம்" என்றால் இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்ல வேண்டும்.
அருமையான மொழி நடை. சங்க இலக்கியம் முதல் பாரதியார் பாடல்கள் வரை அனைத்திலுமிருந்து நல்ல விடயங்களை எடுத்து நல்விருந்து படைத்திருக்கிறார் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள். அவருடைய மேடை பேச்சுகள், வானொலியில் இடம்பெற்ற பேச்சுகள், கட்டுரைகள் அனைத்தையும் ஒருசேர தொகுத்து படிக்க கிடைத்தது உண்மையிலேயே தமிழ் இன்பம் தான்.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் அர்த்தமில்லை தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.
This book is a package of promotional like particular religious, kamabar, mythology. But unfortunately it very lovely to read coz of its Tamil renditions. You will definitely feel the taste of Tamil in your bones. Still I don’t like this book, using Tamil language as a tool to your notions affect next generation.