Jump to ratings and reviews
Rate this book

ஓரிதழ்ப்பூ [Orithazhpoo]

Rate this book
யதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் மிகவும் தனித்தன்மையான சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந் நாவல் உருவாக்கும் மாயவெளியில் வாசகர்கள் தங்களை முற்றிலும் கரைத்துக் கொள்ள முடியும். வாசிக்கும் போதே தரையில் கால் நழுவும் அனுபவத்தைத் தரக் கூடிய அய்யனார் விஸ்வநாத்தின் எழுத்து, ஒவ்வொருவரின் நிகழையும் பலவந்தமாய் பிடுங்கி கனவில் எறிகிறது. இப் புனைவின் புதிர் வெளியெங்கிலும் ஓராயிரம் இதழ்கள் கொண்டப் பூக்கள் ஒரே நேரத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வாசகராய் உள்நுழையும் எவரும் இக் கனவு வெளியில் தொலையாமல் மீளும் சாத்தியங்கள் மிகக் குறைவு.

***

திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத்தின் ஆறாவது புத்தகம் இது. கவிதை சிறுகதை நாவல் எனப் புனைவுத் தளத்திலும் சினிமாக் கட்டுரைகள் என அ-புனைவுத் தளத்திலும் இயங்குபவர். கடந்த பத்து வருடங்களாக துபாயில் வசிக்கிறார். மலையாள சினிமா மற்றும் உலகளாவிய மாற்று சினிமாக்களில் இவரது பங்களிப்பு இருக்கிறது. ஓரிதழ்ப்பூவை திருவண்ணாமலை ட்ரிலாஜியின் இரண்டாவது

நாவல் என்கிறார். முதல் நாவலான இருபது வெள்ளைக்காரர்கள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது. ஒரு தசாம்சத்திற்கும் மேலாக இணையத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். திரளான இணைய வாசகர்களைப் பெற்றிருக்கிறார்.

235 pages, Kindle Edition

Published November 1, 2017

2 people are currently reading
19 people want to read

About the author

திருவண்ணாமலையைச் சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் என புனைவுகளிலும் இலக்கிய விமர்சனங்கள், சினிமாக் கட்டுரைகள் என புனைவல்லா எழுத்திலும் எழுதி வருபவர். மலையாளத் திரைப்படங்களிலும் சர்வதேச மாற்றுத்திரைப்படங்களிலும் திரைக்கதைகளில் பணியாற்றியுள்ளார்.

அய்யனார் விஸ்வநாத் 2007 முதல் தனது வலைப்பதிவுகளில் கவிதைகள், நாவல்கள், ரசனை குறிப்புகள் மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். அவரது நூல்கள் வம்சி, கிழக்கு, சீரோ டிகிரி ஆகிய பதிப்பகங்களின் மூலம் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலையை பின்னணியாகக் கொண்டு தொடர் நாவல்களை எழுதுகிறார். மனிதர்களையும் வரலாற்றையும் பிறழ்வுகள் மற்றும் கூறப்படாத களங்கள் வழியாக எழுதும் பின்நவீனத்துவ பாணி எழுத்தாளராக அறியப்படுகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (30%)
4 stars
10 (33%)
3 stars
9 (30%)
2 stars
0 (0%)
1 star
2 (6%)
Displaying 1 - 4 of 4 reviews
60 reviews6 followers
July 15, 2023
இரண்டு பெண்களின் வெவ்வேறு வாழ்க்கை முறை. கனவுகளின் வழி ஒருவனை தேடிக்கொண்டு நிஜத்தின் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்துக்கொண்டு வாழும் ஒருவள். திருமணமாகி தனது கணவன் குடிகாரனாக இருக்கும் பட்சத்தில் சாமியார் ஒருவருடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிற ஒரு பெண்.
அதே போல அந்த சாமியார்,குடிகாரன், பள்ளி வாத்தியார், காதலியை இழந்த காதலன் என நான்கு வெவ்வேறு ஆண்கள் இவர்களை கதை களமாக கொண்டு செல்லும் நாவல். கிட்டத்தட்ட படம் போலவே செல்கிறது கதை.
3 reviews
April 3, 2020
Interesting

Another classic.. having lived in tiruvannamalai for 4 years I was able to imagine the places..it’s refreshing and definitely a good read..
Profile Image for Itadori Yuji.
5 reviews
January 11, 2024
Very intresting at the same time, new treatment
மற்றவர்கள் பேச்சை ஒட்டு கேக்கும் சந்தோஷத்தை குடுக்கிறது 😂.. Beginners book.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.